Tag: Rasi

  • Kanni Rasi Raghu kedhu peyrchi

    கன்னி ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கன்னிக்கு ஒன்பதாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, ஓரளவு சோதனையான காலமாக அமையக்கூடும். இப்பொழுது, உங்கள் தந்தையுடனான உறவில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவருடைய ஆரோக்கியமும் உங்களுக்குக் கவலை தரலாம். 

    மேலும், இந்த நேரத்தில் பொதுவாக நீங்கள், வயதில் மூத்தவர்களுடன்  நல்லிணக்கத்தைப் பராமரித்து, அவர்கள் ஆசிகளைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் குரு அல்லது ஆன்மீக போதகர் மற்றும் மத குருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் உங்களுக்கு நன்மை தரும். எந்தக் காரணத்தைக் கொண்டும், ஒரு பொழுதும், அவர்களை அவமதித்து விடாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் மூத்த அதிகாரியுடனான உறவு அவ்வளவு சீராக இருக்காது. நீங்கள் தான் இதை மேம்படுத்தி, நல்லுறவாக்கி, அதற்கு வலிமை சேர்க்க வேண்டும். 

    அதிர்ஷ்டமும் கூட இப்பொழுது உங்களுக்கு, அதிக அளவு சாதகமாக இருக்காது. நீங்கள், ஒழுக்கம் மற்றும் ஒழுக்க நெறிகளில் இருந்து வழுவாமல், உங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம். உங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் இப்பொழுது சோதனைக் காலம் என்பதால், நீங்கள் உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் நேர்மையாக இருக்க முயற்சி செய்வது மிகவும் முக்கியம். இந்தப் பெயர்ச்சியின் விளைவுகள் உங்களை பாதிக்காமல் இருப்பதற்கு, மனதில் இறை பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கடவுளை வணங்குங்கள். எனினும், இந்தப் பெயர்ச்சிக் காலத்தின் பொழுது, வெளிநாட்டுப் பயணங்கள் எளிதில் அமையும் வாய்ப்புள்ளது.

    கேது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கன்னிக்கு மூன்றாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் உங்களுக்கு, நன்மை மற்றும் தீமை கலந்த பலன்களை அளிப்பார் என எதிர்பார்க்கலாம். ஜோதிடம், இசை, பாடல், நடனம், மற்றும் உளவியல் போன்ற ஆன்மீகம் அல்லது கலைத் துறைகளில் இருப்பவர்கள், அவற்றில்  மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் வாய்ப்புள்ளது.

     எனினும், இந்த நேரத்தில் உங்கள் தைரியம் சற்று குறையக்கூடும். எனவே நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம். மற்றவர்களுடனான உங்கள் உரையாடலின் பொழுது, நீங்கள் கவனமாக இருந்தால் தவறான புரிந்துணர்வுகளைத் தவிர்க்க இயலும். எனவே பேசுவதற்கு முன் நன்கு யோசித்துப் பேசுவது நல்லது. மேலும், சுருக்கமாகவும், குறிப்பாகவும் பேசுவதும், பிறருடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். 

    உங்கள் இளைய உடன் பிறப்புக்களுடன் உள்ள உறவில் சில சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளதால், அவர்களுடன் இணக்கமான உறவை மேற்கொள்வது அவசியம். இந்த நேரத்தில், உங்களில் சிலர் குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம். இவை குறிப்பாக, ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மேற்கொள்ளும் யாத்திரைகளாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், கடவுள் மீது நீங்கள் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கை, இந்தக் கால கட்டத்தில், அவரது ஆசிகளைப் பெற்றுத் தந்து, இந்தப் பெயர்ச்சியினால் விளையும் பாதக விளைவுகளைச் சமாளிக்க உதவும்.   

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

  • Dhanusu Rasi November Rasi Palan

    (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
    வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எந்த சூழ்நிலையிலும் நேர்மையுடன் இயங்கும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடையவர். இந்த மாதம்  ராசிநாதன் குரு ராசியில் இருக்கிறார். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். செவ்வாய் ராசியில் பயணிப்பதால் மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.

    தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேலிடத்திலிருந்து முக்கியமான காரியம் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும். 

    குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்களிடம் மரியாதை அதிகரிக்கும்.

    பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.

    கலைத்துறையினருக்கு கிரகசூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

    அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். 

    மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
    அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12 
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • Maharam Rasi

    (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

    எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படும் மகர ராசியினரே, நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். உங்களது தன்னம்பிக்கையால் வளர்ச்சி காண்பீர்கள். 

    கிரகநிலை:
    இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து உங்களது சுக – ரண ருண ரோக ஸ்தானம் – அஷ்டம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு ரண ருண ரோக ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி அயன சயன போக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    விரையஸ்தானத்திற்கு மாற்றம் பெற்று சஞ்சாரம் செய்யும் குருவால் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து  முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.

    தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள்  வசூலாவது மனதிருப்தியை தரும். கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.

    குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும்.  பிள்ளைகளின்  செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 

    பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.

    விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாய உபகரணங்களுக்குச் சற்று கூடுதலாகச் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். அறுவடை விஷயங்களில் ஆழ்ந்து திட்டம் தீட்டி, நற்பயன் பெறுவீர்கள். உங்கள் "விலை நிர்ணயம்' துல்லியமாக அமையும். 

    கலைத்துறையினர்  எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். 

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். 

    உத்திராடம் 2, 3, 4 பாதம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். இதுவரை இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. 

    திருவோணம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    அவிட்டம் 1,2 பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங் கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச் சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். 

    பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டுச் சிறப்படையுங்கள். முடிந்தவர்கள் தகுதியானவர்களிடம் தீட்சை பெற்று மந்திர ஜபம் செய்து வரவும். 
    சொல்ல வேண்டிய மந்திரம்: "அபிராமி அந்தாதி'யில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். மேலும் ராம நாம ஜெபம் செய்வதும் நன்மையைத் தரும். 
    மலர் பரிகாரம்: “வில்வ தளத்தை” சிவனின் உச்சி குளிர அணிவித்து அர்ச்சனை செய்துவர துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். 
    அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தனம் 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – நற்செயல்
    கடனம் – நன்மை 
    சிம்மம் – செலவு
    கன்னி – மேன்மை 
    துலாம் –  சாதனை 
    விருச்சிகம் – ஆதாயம் 
    தனுசு – சாந்தம் 
    மகரம் –   பிரிவு
    கும்பம் – பக்தி 
    மீனம் – உற்சாகம் 
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்
     

  • January 1 Rasi Palan

    ஜனவரி 1
    விளம்பி வருடம் – மார்கழி 17
    ஆங்கில புத்தாண்டு
    01-ஜன-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    அ.கா    4.30
    நட்சத்திரம்    :    சுவாதி    ம    12.24
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பக்தி 
    ரிஷபம் – ஆக்கம் 
    மிதுனம் – சுகம்
    கடனம் –  இன்பம் 
    சிம்மம் – உற்சாகம் 
    கன்னி – சாந்தம் 
    துலாம் –  பெருமை     
    விருச்சிகம் – நிம்மதி
    தனுசு – பிரயாணம் 
    மகரம் – பொருமை 
    கும்பம் – முயற்சி
    மீனம் – நன்மை