இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – உற்சாகம்
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – நன்மை
கடனம் – செலவு
சிம்மம் – பாராட்டு
கன்னி – எதிர்ப்பு
துலாம் – நற்செயல்
விருச்சிகம் – முயற்சி
தனுசு – வருத்தம்
மகரம் – சுகம்
கும்பம் – பொறுமை
மீனம் – சிக்கல்
சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம்
Tag: Rasi Palan
-
Rasi Palan
-
Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வரவு
ரிஷபம் – சினம்
மிதுனம் – உதவி
கடனம் – பாராட்டு
சிம்மம் – நன்மை
கன்னி – புகழ்
துலாம் – உயர்வு
விருச்சிகம் – பெருமை
தனுசு – கோபம்
மகரம் – பரிசு
கும்பம் – ஆக்கம்
மீனம் – அமைதி
சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை
-
Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நற்செயல்
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – சாந்தம்
கடனம் – போட்டி
சிம்மம் – லாபம்
கன்னி – பெருமை
துலாம் – சிக்கல்
விருச்சிகம் – முயற்சி
தனுசு – பக்தி
மகரம் – பணிவு
கும்பம் – லாபம்
மீனம் – தனம்
சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம்
-
March Rasi Palan – Mesham
எந்த காரியங்களிலும் நேர்மையும் உண்மையும் கொண்ட மேஷ ராசி நண்பர்களே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். நேரத்தின் அருமையை உணர்ந்தவர். இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பஞ்சமாதிபதி சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.
குடும்பாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Mobile : +91 7845119542 -
Indraya Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – எதிர்ப்பு
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – மகிழ்ச்சி
கடனம் – பரிசு
சிம்மம் – சுகம்
கன்னி – தாமதம்
துலாம் – வரவு
விருச்சிகம் – சிக்கல்
தனுசு – சுபம்
மகரம் – பயம்
கும்பம் – நன்மை
மீனம் – துணிவு
சந்திராஷ்டமம் : ஆயில்யம் -
Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – சோர்வு
ரிஷபம் – கோபம்
மிதுனம் – வரவு
கடனம் – நட்பு
சிம்மம் – நலம்
கன்னி – நன்மை
துலாம் – முயற்சி
விருச்சிகம் – வீம்பு
தனுசு – அன்பு
மகரம் – சுகம்
கும்பம் – கவலை
மீனம் – அமைதி
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
-
Indraya Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – உதவி
ரிஷபம் – பொறுமை
மிதுனம் – போட்டி
கடனம் – வெற்றி
சிம்மம் – ஆதரவு
கன்னி – அமைதி
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – புகழ்
தனுசு – பிரீதி
மகரம் – பாசம்
கும்பம் – நலம்
மீனம் – சுபம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி -
January 5 – Rasi Palan
ஜனவரி 5 அனுமன் ஜெயந்தி
விளம்பி வருடம் – மார்கழி 21
அமாவாசை
05-ஜன-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை முழுவதும் 0.00
நட்சத்திரம் : மூலம் மா 4.15
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நன்மை
ரிஷபம் – லாபம்
மிதுனம் – கவனம்
கடனம் – உதவி
சிம்மம் – ஆர்வம்
கன்னி – வரவு
துலாம் – உயர்வு
விருச்சிகம் – செலவு
தனுசு – வெற்றி
மகரம் – பெருமை
கும்பம் – களிப்பு
மீனம் – இன்பம் -
2019 Rasi Palan – Midhunam
(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே
கிரகநிலை:
குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் – ராகு தனவாக்கு ஸ்தானத்திலும் – சனி பகவான் சப்தம ஸ்தானத்திலும் – கேது அஷ்டம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.
கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் ராசிக்கும் – கேது பகவான் சப்தம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
23.11.2019 அன்று குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு அனைத்து விஷயங்களிலும் இருந்த தொய்வு நிலை மாறும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். உங்களின் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.
குடும்பம்:
குடும்பத்தில் குதூகலம் நிறையும். சர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். குடும்ப ராசியில் ராகு சஞ்சாரம் இருப்பதால் வெளி மனிதர்களால் அவ்வப்போது சிற்சில பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் அனைத்து பிரச்சனைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்தினர் அனைத்து விஷங்களிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.
பொருளாதாரம்:
பங்குச் சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். ஏற்றுமதி சார்ந்த விஷயங்களில் அனைத்து லாபங்களையும் பெறுவீர்கள். பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சொத்துக்கள் புதிதாக வாங்குவதற்கும் பழையனவற்றை புதுப்பிப்பதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். அதே வேளையில் கடுமையான பணிச் சுமையால் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.
பெண்மணிகள்:
பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
உத்யோகஸ்தர்கள்
உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். ராசியை சனி பகவான் பார்ப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.
வியாபாரிகள்:
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.
அரசியல்துறையினர்:
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.
கலைத்துறையினர்:
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
மாணவமணிகள்:
மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.மிருகசீரிஷம் – 3, 4:
இந்த ஆண்டு லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.
திருவாதிரை:
இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
புனர்பூசம் – 1, 2, 3:
இந்த ஆண்டு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.பரிகாரம்: சங்கட சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடவும். முடிந்தபோதெல்லாம் ஔவையார் அருளிய "விநாயகர் அகவல்' துதியை பாராயணம் செய்யவும். இதனால் பல சங்கடங்கள் தவிடுபொடியாகும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ’ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்’ அன்றாடம் பாராயணம் செய்வது.
மலர் பரிகாரம்: “மரிக்கொழுந்து மலரை” ஏதேனும் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் லக்ஷிமிக்கு சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5– ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
போன் – 7845119542
-
2019 Rasi Palan – Rishabam
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே
கிரகநிலை:
குருபகவான் சப்தம ஸ்தானத்திலும் – ராகு தைரிய ஸ்தானத்திலும் – சனி பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் – கேது பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.
கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் – கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
23.11.2019 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.இந்த ஆண்டில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். அதேநேரம் வேறு பல சாதகமான நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. மார்ச்சு மாதம் அதிசாரமாக மாறும் குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள்.
குடும்பம்:
குடும்பத்தில் மற்றவர்களால் தேவையில்லாத வீண் கலகம் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மையைத் தரும். வாழ்க்கைத்துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடு உண்டாகலாம். குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் பொறுமையை கடைபிடிப்பது அனுகூலம் தரும். உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள்.
பொருளாதாரம்:
அவ்வப்போது பண பிரச்சனைகள் வந்தாலும் குரு பகவானின் சஞ்சாரத்தால் அனைத்து பிரச்சனைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். உங்கள் ராசிநாதனே சுக்கிரனாக அமைவதால் எந்த பிரச்சனையும் தலைக்கு வந்தது தலைப்பகையுடன் சென்றது போல் கடந்து செல்வீர்கள். கடன் சார்ந்த விஷயங்கள், முதலீடு சார்ந்த விஷயங்களை அனைத்திலும் அதிக கவனம் தேவை. வருமானம் சீராக இருக்கும்.
ஆரோக்கியம்:
சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய வருடம் இது.
பெண்மணிகள்:
பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும்.
உத்தியோகஸ்தர்கள்:
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும்.
வியாபாரிகள்:
வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும்.
அரசியல்வாதிகள்:
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர்:
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
மாணவமணிகள்:
மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.கார்த்திகை 2 – 3 – 4:
இந்த ஆண்டு பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.
ரோகினி:
இந்த ஆண்டு மூலம் வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.
மிருகசீரிஷம் – 1, 2:
இந்த ஆண்டு வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.பரிகாரம் : அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "கோளறு திருப்பதிகத்தை' அன்றாடம் பாராயணம் செய்வது.
மலர் பரிகாரம்: “தாமரை மலரை” பெருமாளுக்கு சாத்திவர பொருளாதார நிலைமை உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6– ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
போன் – 7845119542