Tag: Rasi Palan

  • Rishabam may month Rasi palan

    ரிஷபம்  (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

    பிரச்சனைகள் தீர ஆலோசனைகள் செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் ரிஷப ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் இருந்து தனஸ்தானத்திற்கு மாறுகிறார். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.  சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

    குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.
    பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். 

    கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

    அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  
    மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

    கார்த்திகை:
    இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நற்பலன்களே உண்டாகும்.உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். 

    ரோகினி:
    இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை  சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். உங்களின் புத்திசாலித் தனத்தால் சில சாதனைகளைச் செய்து முடிப்பீர்கள். புது முயற்சிகளில் பிரவேசிப்பதற்கு காலம் கணிந்துள்ளது.

    மிருகசீரிஷம்:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி  வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம்.  சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்த சேரும். வருமானம் கூடும்.பாராட்டு கிடைக்கும். அதனால் மனதிருப்தி உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். 

    பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில்  சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
    அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • mesham may month rasi palan

    மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)
    கடினமான காரியங்களில் அதிக முயற்சிகளுடன் வெற்றி பெறும் மேஷ ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியைப் பார்க்கிறார். அவரின் பார்வை மூலம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். குருவின் பார்வை தனஸ்தான ராசி மீது விழுவதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சுபச் செலவு உண்டாகலாம். பயணங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.

    தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் வெளிநபர்களால் இருந்த குழப்பம் நீங்கும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

    பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். 

    கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

    அரசியல்துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

    மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.

    அஸ்வினி:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள்

    பரணி:
    இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்து முடியும். பாராட்டுகளால் மன நிம்மதி கிடைக்கும். 

    கார்த்திகை:
    இந்த மாதம் தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். தொழிலில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டு மறையும். அலைச்சல் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதற்கான பலனும் கிட்டும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

    பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
    அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30, 31
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • February 28 Rasi Palan

    பிப்ரவரி 28… ராசி பலன்…. .
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – ஆர்வம் 
    ரிஷபம் –   நட்பு 
    மிதுனம் – கீர்த்தி 
    கடகம் – மறதி  
    சிம்மம் – தடங்கல்  
    கன்னி –  திடம் 
    துலாம் – அமைதி 
    விருச்சிகம் –   ஜெயம் 
    தனுசு –     அன்பு 
    மகரம் –  பெருமை 
    கும்பம் – சிக்கல் 
    மீனம் –     உதவி 
    சந்திராஷ்டமம்    –  உத்திரம், அஸ்தம் 
     

  • Meena Rasi March Rasi Palan

     (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
    மீன ராசி அன்பர்களே, 
    இந்த மாதம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சமூகத்திலும், அரசு சார்ந்த வகைகளிலும் தேவையான நற்பெயர் உண்டாகும். வீட்டில் ஓரிடத்தில் வைத்த பொருட்களை அங்கும் இங்கும் தேடுவதும், வாகனங்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தினால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.

    குடும்பத்தில் மூத்த சகோதர வகையினர் தந்தைக்கு நிகரான கனிவுடன் உங்கள் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். தந்தையின் உடல்நலத்தில் தனித்த கவனமும், அவருடன் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளில் வாக்குவாதம் இல்லாத நிலையில் இருத்தல் வேண்டும். இதனால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் இல்லா நிலை உண்டு.
    உத்தியோகஸ்தர்கள் அறிமுக மில்லாத நபர்களுக்கு தகுதிக்கு மீறிய உதவிகளை செய்யாமல் இருப்பது உத்தம பலனை உருவாக்கித் தரும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும். 

    தொழிலதிபர்கள் நன்மைகளை ஏராளமாக அனுபவிக்கக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய தீராத பணிச்சுமையிலும் உங்களது குழந்தைகளின் நலனுக்காக பெண் தெய்வ வழிபாடுகளை பின்பற்றி வருபவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வ அருளைப் பெற்று தங்கள் புத்திர வகையில் நல்ல முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள்.

    பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் தகுந்த உதவிகளால் நிர்ணயிக்கப்பட்ட பணி இலக்குகளை சுலபமாக செய்து உயர் அதிகாரிகளிடம் தகுந்த நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், தெய்வ அருளால் குடும்பத்தில் சுமூகமான வாழ்க்கை முறைகளைப் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

    கலைஞர்கள் ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். தொழில் விவகாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்தையும் இனிதே முடிக்க முடியும். 

    அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள்.  

    மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார். போக்குவரத்து மற்றும் உயரமான இடங்களில் தகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.

    பூரட்டாதி 4ம் பாதம்:
    இந்த மாதம்  பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும்.

    உத்திரட்டாதி:
    இந்த மாதம்  தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். 

    ரேவதி:
    இந்த மாதம்  வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். 

    பரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும்  வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
    அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Khumba Rasi March Rasi Palan

    (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)
    கும்ப ராசி அன்பர்களே, 
    இந்த மாதம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். வீடு, வாகன வகைகளில் முன்னேற்றமான நற்பலன்கள் உண்டாகும். ஆசாபாச செயல்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், லாகிரி வஸ்துகளை ஒதுக்கி வைப்பதாலும் மட்டுமே ஆரோக்கிய உடல்நலத்தை பெற முடியும்.

    குடும்பத்தில் தந்தை மற்றும் சகோதரர் வகையில் கடந்த காலங்களில் உங்களுக்குள் இருந்த மனவேற்றுமைகளை விலகுவதற்கான மகிழ்வான சந்தர்ப்பங்கள் ஏற்படும். பூர்வ புண்ணிய சொத்துகளில் வம்பு வழக்கு ஏதுமிருந்தால் அனுகூலமான தீர்வு உண்டாகும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் நலம் கிடைக்கும். அடுத்தவர்களின் நட்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.  

    உத்தியோகஸ்தர்கள் நல்ல முறையில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். திருப்தியான மனப் போக்கு உண்டாகும். அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக்  கொண்டால் பிரச்சனைகளுக்கு இடமே இல்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.

    தொழிலதிபர்கள் தொழிலில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். ஆதாயத்தின் ஒருபகுதியை அறப்பணிகளுக்கு செலவிடும் நிலைமைகள் உண்டாகி உங்கள் மனதை நல்வழிப்படுத்தும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு தொழிலில் புதிய ஆதாயத்தை ஏற்படுத்தும். தொழிலில் உங்களை புறக்கணித்தவர்கள் அண்டி வருவார்கள். நன்மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.

    பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிக பட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும். ஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.

    கலைஞர்கள் அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மதிப்பும், மரியாதையும் கிட்டும். பல மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம். உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பலவழிகளிலிருந்தும் பண வரவுகள் வரலாம். முக்கியமான நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அளிக்கும். 

    அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும்.

    மாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும். தந்தை மற்றும் சகோதர, சகோதர வகையில் அன்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாகி விடுவீர்கள். எச்சரிக்கை தேவை.

    அவிட்டம் 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம்  பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். 

    சதயம்:
    இந்த மாதம் வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை கிடைக்கும்.

    பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:
    இந்த மாதம்  புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.  பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். 

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி  வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 
    அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • February 19 Rasi Palan

    பிப்ரவரி 19 … மகிழ்ச்சி கிட்டும் இன்றைய ராசி பலன்கள்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம்உயர்வு
    ரிஷபம் –   அசதி
    மிதுனம்லாபம்   
    கடகம்செலவு 
    சிம்மம்சுகம்
    கன்னி –  கவலை 
    துலாம்மேன்மை 
    விருச்சிகம் –   ஜெயம் 
    தனுசு –     நட்பு 
    மகரம் –  பொறுமை 
    கும்பம்கவனம்
    மீனம் –     தனம் 
    சந்திராஷ்டமம்    –  ரோகிணி

  • February 13 Rasi Palan

    பிப்ரவரி 13 … இன்றைய ராசி பலன்…. .
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – எதிர்ப்பு 
    ரிஷபம் –   தடங்கல்  
    மிதுனம் – வெற்றி
    கடகம் – மகிழ்ச்சி 
    சிம்மம் – பரிசு 
    கன்னி –  சுகம்  
    துலாம் – தாமதம்  
    விருச்சிகம் –   வரவு 
    தனுசு –     சிக்கல் 
    மகரம் –  சுபம் 
    கும்பம் – பயம் 
    மீனம் –     நன்மை
    சந்திராஷ்டமம்    –  சதயம், பூரட்டாதி

  • February 12 Rasi Palan

    பிப்ரவரி 12 …  ராசி பலன்
    மேஷம்நலம்
    ரிஷபம் –   நட்பு
    மிதுனம்பாராட்டு   
    கடகம்செலவு
    சிம்மம்மேன்மை
    கன்னி –  ஆர்வம்
    துலாம்உதவி 
    விருச்சிகம் –   முயற்சி 
    தனுசு –     வெற்றி
    மகரம் –  பக்தி
    கும்பம்தடங்கல் 
    மீனம் –     புகழ்
    சந்திராஷ்டமம்    –  அவிட்டம், சதயம்

  • February 11 Rasi Palan

    பிப்ரவரி 11 … இன்று எந்த ராசிக்கு வரவு இருக்கும்…. .
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – சோர்வு 
    ரிஷபம் –   கோபம் 
    மிதுனம் – வரவு     
    கடகம் – நட்பு 
    சிம்மம் – நலம் 
    கன்னி –  நன்மை 
    துலாம் – முயற்சி 
    விருச்சிகம் –   வீம்பு 
    தனுசு –     அன்பு 
    மகரம் –  சுகம் 
    கும்பம் – கவலை 
    மீனம் –     அமைதி  
    சந்திராஷ்டமம்    –  திருவோணம், அவிட்டம்
     

  • February 10 Rasi Palan

    பிப்ரவரி 10 … இன்றைய ராசி பலன்…..
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – பாசம் 
    ரிஷபம் –   தடங்கல் 
    மிதுனம் – மகிழ்ச்சி    
    கடகம் – பயம் 
    சிம்மம் – கவலை 
    கன்னி –  இன்பம் 
    துலாம் – சுமை 
    விருச்சிகம் –   களிப்பு 
    தனுசு –     ஆதரவு 
    மகரம் –  பகை  
    கும்பம் – செலவு 
    மீனம் –     ஆதாயம் 
    சந்திராஷ்டமம்    –  உத்திராடம், திருவோணம்