Tag: Ramanavami

  • Thirupathy sri ramanavami

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமியையொட்டி சீதா ராமர் லட்சுமணர், அஞ்சேனயருக்கு நடைபெற்ற திருமஞ்சனம்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில்   ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சீதா, ராமர்  லட்சுமணர், ஆஞ்சனேய சுவாமி உற்சவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில்  அர்ச்சகர்கள் பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம்  செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் சுவாமி, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ. லோகநாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இரவு 7 மணிக்கு  கோதண்டராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் ஏழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். நாளை இரவு ராமர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

  • Ramanavami viradham

    இலங்கை வேந்தனான ராவணனின் அதர்மப் போக்கையும், ஒழுக்கமற்ற வாழ்வையும் அழிக்கும் பொருட்டுதான் மகாவிஷ்ணு, பூமியில் அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாக ராமர் என்ற பெயரில் பிறப்பெடுத்தார். அவ்வாறு ராமர் பிறப்பெடுத்த தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமி திதியில் நண்பகல் நேரத்தில் ராமர் பிறந்தார். பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்.

    இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி மன்றாடினர்.அப்போது விஷ்ணு பகவான், 'உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்' என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்- தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

    நவமி திதியில் தசரதர்- கவுசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது. ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.

    இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.

    இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.

    ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

  • April 17 2024 Ramanavami

    ஏப்ரல் 17 – ஸ்ரீ ராமநவமி
    குரோதி வருடம் – சித்திரை – 4
    ஏப் 17, 2024
    புதன்
    ஸ்ரீ ராமநவமி, ஷீரடி சாய்பாபா பிறந்தநாள்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : நவமி
    திதி நேரம் :  நவமி மா 6.59
    நட்சத்திரம் :  பூசம் கா 8.51
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • March 30 2023 Ramanavami

    மார்ச் 30 – ஸ்ரீராமநவமி
    சுபகிருது வருடம் – பங்குனி 16
    ஸ்ரீராமநவமி,
    ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்
    30-மார்-2023 வியாழன்  
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30     
    திதி : நவமி     
    திதி நேரம் : நவமி ந.இ 1.40
    நட்சத்திரம் : புனர்பூசம் ந.இ 12.54
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Ramanavami viradha palangal

    ராம நவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் 
    பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

    பலன்கள் :

    காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

    ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

    ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும், ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீராம…. ஸ்ரீராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும்.

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்