Tag: Raghu Kedhu

  • Thulam Rasi Raghu Kedhu Peyarchi

    துலாம் ராசி அன்பர்களே, 

    ராகு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது துலாம் ராசிக்கு எட்டாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு, நன்மை மற்றும் தீமை கலந்த பலன்கள் விளையும் எனலாம். முன்னேற்றப் பாதையில் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம் என்பதால் திடமான மனதுடன் செயல்படுவது நல்லது. உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு இது சரியான தருணமாக இருக்கும்.  

    இதன் மூலம் நீங்கள் வெற்றியை நோக்கிப் பயணம் செய்யலாம். இப்பொழுது நீங்கள் கடின முயற்சி செய்தாலும், அதற்குரிய பலன் கிடைப்பது அரிது. எனினும் மனதைத் தளர விடாதீர்கள். இந்தக் காலகட்டத்தில் அதிர்ஷ்டம், திடீர் செல்வம் அல்லது ஆதாயம் போன்றவற்றை எதிர்பார்க்க வேண்டாம். சற்றே கவனக் குறைவான நடவடிக்கைகள் கூட உங்களைச் சிக்கலில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால், நீங்கள் உங்களையே பாதுகாத்துக் கொள்ள, மேலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தவிர, அறிமுகம் இல்லாத சிலர் மூலமும் எதிர்பாராத சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரலாம். எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நேரத்தில், உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் இருந்தும் கூட, நீங்கள் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்க இயலாது. 

    உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது வியாபாரக் கூட்டாளிகளிடமிருந்தும், எந்த வகை ஆதாயத்தை எதிர் பார்க்கவும் இது ஏற்ற தருணம் அல்ல. எனினும், உங்களில் சிலர், ஆன்மீக அல்லது அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள்; அவற்றைக் கற்றுக் கொள்வதற்கான முனைப்பையும் வளர்த்துக் கொள்வார்கள்.

    கேது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்களது துலாம் ராசிக்கு இரண்டாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, இந்தக் காலகட்டம், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்றாக அமையும். இன்னும் சொல்லப் போனால், எச்சரிக்கை என்பதே இப்பொழுது உங்கள் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் பொழுது, முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி விடாதீர்கள். இது, மற்றவர்களுடனான உங்களது நல்லுறவைப் பாதித்து விடும் என்பதால், பேச்சில் கவனம் தேவை. 

    உங்கள் குடும்பத்தினரிடமும், நீங்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் நடந்து கொள்வதும் அவசியம். இந்த நேரத்தில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் அதிக கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவது, குடும்ப உறவுகளை மேம்படுத்தும். இந்தப் பெயர்ச்சி காலத்தில், உங்கள் குடும்பத்தின் ஆதரவு, உங்களுக்கு நல்ல நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், உங்கள் சொத்துக்கள், வங்கி இருப்பு போன்றவற்றைப் பொறுத்தவரை, இது ஒரு நிச்சயமற்ற நேரமாக இருக்கும். 

    எனவே, பணம் சேமிப்பது, எதிர்காலத் தேவைக்காக செல்வம் ஈட்டுவது போன்றவற்றில், நீங்கள் இப்பொழுது அதிக கவனம் செலுத்துவது அவசியம். தவிர, கண்களில் சில கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். மாணவர்கள், குறிப்பாக ஆரம்பக் கல்வி பயிலும் பள்ளி மாணவர்கள், தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். இவ்வாறு கவனத்துடன் படிப்பதன் மூலம், தேர்வுகளிலும், கல்வி முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.