Tag: Purattasi

  • Purattasi Friday vazhipadu

    வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர யோகம் வாழ்வில் மிக மிக முக்கியம். சுக்கிர யோகம் வேண்டுமெனில் மகாலக்ஷ்மியை வேண்ட வேண்டும். வெள்ளிக்கிழமையில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். மகாலக்ஷ்மிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி அல்லது ஏதேனும் இனிப்பைக் கொண்டு நைவேத்தியம் செய்யுங்கள்.

    குறிப்பாக புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வழிபடுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடச் செய்வாள் மகாலக்ஷ்மி தேவி. உங்கள் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடும். துக்கங்கள் அனைத்தும் காணாமல் போகும். கவலைகள் யாவும் பனியென மறைந்து போகும். 

    புண்ணியம் நிறைந்த மாதம் என்று புரட்டாசியைச் சொல்லுவார்கள். புரட்டாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மகாவிஷ்ணுவை ஆராதிக்கிற மாதம். இந்த மாதத்தின் பிறப்பில் இருந்து, தொடக்கத்தில் இருந்து பெருமாள் கோயிலுக்குச் செல்வதும் பெருமாளை வழிபடுபதும் எண்ணற்ற நன்மைகளை வழங்கி அருளும்.

    வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மியை நினைத்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது லக்ஷ்மி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும், விசேஷமானது. நீண்டகாலக் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழியைக் கொடுப்பாள் மகாலக்ஷ்மி.
     

  • Purattasi Saturday viradham

    புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். 

    சனிக்கிழமை அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. 

    ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம்.
     

  • Purattasi mahalakshmi viradham

    ஜேஷ்டா-சுக்லபட்ச அஷ்டமி-சிவன்,விநாயகர் பூஜை-சந்ததி சிறப்பாக வளர.

    மகாலட்சுமி-துவாதசிமுதல்16 நாட்கள்-லட்சுமி பூஜை-சகல நலமும் வளமும் பெற.

    தசாவதார-சுக்லதசமியன்று.

    கதளி,கௌரி-சுக்லபட்ச சதுர்த்தசி-உமாமகேஸ்வர பூஜை-இஷ்ட சித்தி.

    அந்தந்த-பூர்வபட்ச சதுர்தசி-விஷ்னு பூஜை-காரியம் ஈடேற.

    பிரதமை/நவராத்திரி பிரதமை -சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) -ஓன்பது நாள் தேவி பூஜை-தீயசக்திகாளின் தாக்கம் விலக.

    ஷஷ்டி-சுக்லபட்ச ஷஷ்டி-பரமேஸ்வரி பூஜை-அம்பிகையின் அருளாசி.

    வளர்பிறை சப்தமி திதி-அனந்தசப்தமி-கண்ணொளி பிரகாசிக்கும்.

    பௌர்ணமி-சிவன்-பெருட்செல்வம் பெருகும்.

    அமுக்தா-சுக்லபட்ச சப்தமி-உமாமகேஸ்வரர்-புத்ர,பௌத்ர விருத்தி.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.
     

  • Purattasi month viradhangal

    ஜேஷ்டா-சுக்லபட்ச அஷ்டமி-சிவன்,விநாயகர் பூஜை-சந்ததி சிறப்பாக வளர.

    மகாலட்சுமி-துவாதசிமுதல்16 நாட்கள்-லட்சுமி பூஜை-சகல நலமும் வளமும் பெற.

    தசாவதார-சுக்லதசமியன்று.

    கதளி,கௌரி-சுக்லபட்ச சதுர்த்தசி-உமாமகேஸ்வர பூஜை-இஷ்ட சித்தி.

    அந்தந்த-பூர்வபட்ச சதுர்தசி-விஷ்னு பூஜை-காரியம் ஈடேற.

    பிரதமை/நவராத்திரி பிரதமை -சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) -ஓன்பது நாள் தேவி பூஜை-தீயசக்திகாளின் தாக்கம் விலக.

    ஷஷ்டி-சுக்லபட்ச ஷஷ்டி-பரமேஸ்வரி பூஜை-அம்பிகையின் அருளாசி.

    வளர்பிறை சப்தமி திதி-அனந்தசப்தமி-கண்ணொளி பிரகாசிக்கும்.

    பௌர்ணமி-சிவன்-பெருட்செல்வம் பெருகும்.

    அமுக்தா-சுக்லபட்ச சப்தமி-உமாமகேஸ்வரர்-புத்ர,பௌத்ர விருத்தி.
     

  • Purattasi Magimai Vilakkum Kadhai

    பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.

    ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை.

    பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார்.

    பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.

    பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.
     

  • Purattasi Saturday Viradham

    புரட்டாசி மாதத்துக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே விஷ்ணுவின் அருள் பெற உதவும் மாதமாக புரட்டாசி திகழ்கிறது. சனி பகவான் அவதரித்ததும் இந்த புரட்டாசி மாதத்தில் தான். எனவே இந்த புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபட்டால், சனி பகவானின் உக்கிரம் தணிந்து, பெருமாளின் கடாட்சம் பெருகுகிறது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்விய தேசங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெருமாளின் முக்கியத் தலங்களில், பிரம்மோற்சவம் நடைபெறும். சிலர் தங்கள் குலதெய்வ வழிபாடுகளையும், புரட்டாசியில் செய்வர்.

    வீடுகளில் விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து நீராடி, பூஜை அறையில், வெங்கடாசலபதி உருவப்படம் வைத்து, விளக்கை ஏற்றி, வழிபட வேண்டும், துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பழம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வணங்க வேண்டும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபட வேண்டும். இதுவே புரட்டாசி விரதம் எனப்படும்.
     

  • Purattasi month sirappugal

    பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நாளைப் பிறக்கிறது. இது, தமிழ் மாதங்களில் 6-வது மாதமாகும். இது கன்னி ராசிக்குரிய மாதமாகும்.

    புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.

    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.

    இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.