Tag: pradhosha

  • Sirappu vaindha pradhosha stothiram

    மிக அரிய – மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட – பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளது !

    ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்

    ஸ்ரீ கணேசாய நம:
    ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத 
    ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித 
    ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத 
    ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய 
    ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண 

    ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர 
    ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய 
    ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன 
    ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன 
    ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ 

    ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: 
    ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர 
    மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச 
    மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச 
    ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : 

    க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர 
    தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் 
    அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் 
    தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : 
    மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் 

    சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : 
    துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே 
    ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: 
    ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் 
    ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் 

    ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி 
    சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா .

  • Pradhosha vazhipadu palangal

    பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

    காலையில் எழுந்து நீராடிவிட்டு,சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும்.சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும்.காலையில் இருந்து உணவை தவிர்க்கவேண்டும்.பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது.பழங்கள்,இளநீர் சாப்பிடலாம்.சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில்அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும்,சிவனையும் வழிபடவேண்டும்.

    நம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு,மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி,சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு,இரு இலை உணவை இல்லாத்தாளும்,இல்லரசனும் சாப்பிடவேண்டும்,ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ,சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம். இந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும்,குழந்தை பேறு கிடைக்கும்.சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

    காலையில் எழுந்து நீராடிவிட்டு,சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும்.சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும்.காலையில் இருந்து உணவை தவிர்க்கவேண்டும்.பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது.பழங்கள்,இளநீர் சாப்பிடலாம்.சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில்அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும்,சிவனையும் வழிபடவேண்டும்.

    நம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு,மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி,சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு,இரு இலை உணவை இல்லாத்தாளும்,இல்லரசனும் சாப்பிடவேண்டும்,ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ,சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம்.

    இந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும், குழந்தை பேறு கிடைக்கும். சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

  • wednesday pradhosha vazhipadu

    சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொரு பிரதோஷம் இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம் என்றும், புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவாரப் பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவாரப் பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வாரப் பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. 

    இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோஷம்தான். இந்த பிரதோஷத்தைத்தான் மகா பிரதோஷம் என்று அழைக்கிறோம். சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். எனவே அந்தக் கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை.

    புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று மாலையில் சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசிக்க வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித்தர நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும். 
     

  • Pradhosha slogam

    மிக அரிய – மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட – பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளது !

    ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்

    ஸ்ரீ கணேசாய நம:
    ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத 
    ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித 
    ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத 
    ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய 
    ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண 

    ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர 
    ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய 
    ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன 
    ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன 
    ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ 

    ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: 
    ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர 
    மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச 
    மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச 
    ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : 

    க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர 
    தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் 
    அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் 
    தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : 
    மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் 

    சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : 
    துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே 
    ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: 
    ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் 
    ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் 

    ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி 
    சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா 

  • Pradhosha poojai neram

    பிரதோஷம் அன்று ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.

    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.

    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

  • Pradhosha abishegam

    பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும். அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

    பிரதோஷ கால அபிஷேக முறையில் "பால் அபிஷேகம்'' என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆகவே பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து இயன்றளவு பால் கொண்டு வந்து கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத் தரும்.

    அத்துடன் தாய்மார்கள் பால் குடம் எடுத்துக் கொண்டு முறையாக கோவிலை ஒருமுறை வலம் வந்து, பிறகு அக்குடங்களில் உள்ள பாலைக் கொண்டே அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான பலனைத் தரும். நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும் அதே நேரத்தில், தேவியுடன் கூடிய சந்திரசேகர சாமிக்கும் அபிஷேகம் செய்து அலங்கரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

    பிறகு கோவிலை மூன்று முறை வலம் வரச் செய்ய வேண்டும். கூடவே நாமும் உடன் சென்று வலம் வருதல் வேண்டும். அப்போது முதல் சுற்றில் வேதபாராயணமும், இரண்டாவது சுற்றி திருமுறைபாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் இசைக்க வேண்டும்.

    அத்துடன், பிரதோஷ காலத்தில் சாமி வலம் வரும்போது வெண்சாமரம் வீசுவதுடன், குளிர்ச்சி தரும் மருத்துவ குணம்கொண்ட மயில்பீலியிலான விசிறிகளைக் கொண்டு வீசுவதும் மிகுந்த பலன் தருவதாகும். சிவபெருமான் நஞ்சுண்டு களைத்திருந்த நேரத்தில் அஸ்வினி தேவர்கள் மயில்பீலியைக் கொண்டு விசிறினார்கள் என்கிறது புராணம்.

    சாமி வலம் வரும் ஒவ்வொரு சுற்றிலும் மூலகோண திசைகளில் கண்டிப்பாக தீப வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் சாமி மூன்றாவது சுற்றுவரும் போது மட்டும் வடகிழக்கு மூலையான ஈசான மூலையில் சாமியைத் தெற்கு திசை நோக்கி இருக்குமாறு சிறிது நேரம் நிறுத்தி சிறப்பு தீபவழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை "பூத நிருத்த வழிபாடு'' என்று கூறுவர்.

    அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகை தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும்.

  • Pradhosha vagaigal palangal

    சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. 

    குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும்] நன்றாகும்..

    20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

    1.தினசரி பிரதோஷம் :
    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

    2. பட்சப் பிரதோஷம் :
    அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

    3. மாசப் பிரதோஷம் :
    பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

    4. நட்சத்திரப் பிரதோஷம் :
    பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

    5. பூரண பிரதோஷம் :
    திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

    6. திவ்யப் பிரதோஷம் :
    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    7.தீபப் பிரதோஷம் :
    பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

    8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
    வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

    9. மகா பிரதோஷம் :
    ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

    குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.


     
    10. உத்தம மகா பிரதோஷம் :
    சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    11. ஏகாட்சர பிரதோஷம் :
    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    12. அர்த்தநாரி பிரதோஷம் :
    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    13. திரிகரண பிரதோஷம் :
    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    14. பிரம்மப் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    15. அட்சரப் பிரதோஷம் :
    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

    16. கந்தப் பிரதோஷம் :
    சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    18. அஷ்ட திக் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    19. நவக்கிரகப் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    20. துத்தப் பிரதோஷம் :
    அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்…

  • Pradhosha Sutru

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது. நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.

    பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.

  • Pradhosha Mandiram

    பிரதோஷம் தினத்தன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரையில் பிரதோஷ காலம் என்று பூஜைகளைச் செய்கிறோம். அப்படியான பிரதோஷ காலத்தில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரத்தை டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

    இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை பிரதோஷ வேளையில் உச்சரித்து நந்தி தேவரையும், சிவனையும் வழிபட்டு வந்தால், வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். 

    பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோகத்தை 18 முறை சொல்லவேண்டும்.

    ஸித்தயோகீ மஹர்ஷிச்ச

    ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|

    பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச

    விபனோம்ருது ரவ்யய:

    இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !

  • pradhosha vagaigal

    சிவ வழிபாட்டில் சோமவாரம் வழிபாடு மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷமாக இருந்தால் ,சிவன் கோவிலில் வழிபாடு செய்யும் போது  கோடி புண்ணியத்தை பெறுவதற்கு சமம். ஆனால் பிரதோஷத்தில் 20 வகை இருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி. 20 வகை பிரதோஷம் மற்றும் அதன் பலன்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

     தினசரி பிரதோஷம் :

    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலமாகும்.  ஐந்து வருடங்கள் முறையாகச் நித்தியப்பிரதோஷத்தை செய்வர்களுக்கு முக்தி நிச்சயம் என்கிறது நமது சாஸ்திரம்.

    பட்சப் பிரதோஷம் :

    அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும்.

     மாதப் பிரதோஷம் :

    பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

    நட்சத்திரப் பிரதோஷம் :

    பிரதோஷ திதியாகிய ‘திரயோதசி திதி’யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்

    பூரண பிரதோஷம் :

    திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது ‘சுயம்பு லிங்கத்தை’த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்

     திவ்யப் பிரதோஷம் :

    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    தீபப் பிரதோஷம் :

    பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது,மற்றும்  ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை.

    அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

    ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் ,திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவானாம்.

    மகா பிரதோஷம் :

                

                                                               

    ஈசன் விஷம் உண்ட நாளான  சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ஆகும். இந்த மகா பிரதோஷ தினத்தில் , எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும்,’மகா பிரதோஷம்’எனப்படும்.

    உத்தம மகா பிரதோஷம் :

    சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    ஏகாட்சர பிரதோஷம் :

    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுவதும் பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும்  பல விதமான நன்மைகளைத் தரும்.

    அர்த்தநாரி பிரதோஷம் :

    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அன்று சிவாலயம் சென்று வழிபட, தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    திரிகரண பிரதோஷம் :

    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    பிரம்மப் பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். முன்ஜென்மப் பாவம் மற்றும் தோஷங்களை  நீக்க வல்லது இந்த பிரதோஷ வழிபாடு.

    அட்சரப் பிரதோஷம் :

    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகளின் அகந்தையை நீக்கி ஈசனின் அருள் கிடைக்க செய்த பிரதோஷம் இது.

    கந்தப் பிரதோஷம் :

    சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்டதால், இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் பெறலாம்.

     சட்ஜ பிரபா பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம் என்கிறார்கள் சான்றோர்கள்.

    அஷ்ட திக் பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    நவக்கிரகப் பிரதோஷம் :

    மிகவும் அரிதாக ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம்.  இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    துத்தப் பிரதோஷம் :

    அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது தான் துத்தப் பிரதோஷம். அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

    ஓம் நம சிவாய…..