Tag: Ponniamman

  • Ponniamman koil kumbabishegam

    சென்னை திருவொற்றியூரில் பொன்னியம்மன் நகரில் உள்ள காட்டு பொன்னியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக 21 யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் ஹோம பூஜை செய்தனர் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து ஹோமம் நாடி சந்தனம் தம்பதி பூஜை கோமாதா பூஜை பூஜைகள் நிறைவுபெற்று. 

    புனிதநீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டது மூன்று நாட்கள்  தொடர்ந்து நடைபெறும் யாகசாலை பூஜைகள் இன்று அதிகாலை மீண்டும் தொடங்கப்பட்டு பூர்ணாஹுதி நிறைவுபெற்று  சிவாச்சாரியர்கள்  கலச நீரை தலையில் சுமந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

    இதனை அடுத்து புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை அடுத்து  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஓம்சக்தி கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.