Tag: pongal

  • Pongal vaikka nalaa neram

    பொங்கல் பண்டிகை இந்தாண்டு ஜனவரி 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. தைப்பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை  இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி,  அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு,  காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை  வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க  வேண்டும்.

    பொங்கல் பானையை மண் அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர  ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு  ஆரத்தி காட்டியதும்,  ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.

    சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம்  (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள்  ‘பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும்.

    பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும் அளவிற்கு மட்டும் வைத்துக்  கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும்.  இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க  வேண்டும்.

    இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய  ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர்  காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும்.  அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட  வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக  கொடுத்து விட வேண்டும். பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.31 மணி முதல் 9.00 மணி.

     

  • January 14 2022 Pongal Festival Rasi palan

    ஜனவரி 14 – தைப்பொங்கல் நாள் ராசிபலன்…. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    சுகம் 
    ரிஷபம் –     மகிழ்ச்சி 
    மிதுனம் –     நன்மை  
    கடகம் –      லாபம் 
    சிம்மம் –      அமைதி
    கன்னி –      புகழ்  
    துலாம் –      நட்பு
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு –       உற்சாகம் 
    மகரம் –      சுபம் 
    கும்பம் –     நிறைவு  
    மீனம் –       கவனம்
    சந்திராஷ்டமம்    –  சுவாதி, விசாகம் 

  • pongal vazhipadum murai

    பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்கதான் காவி பூசப்படுகிறது.

    அதன் பிறகு அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் வைத்து படைக்க வேண்டும்.

    விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும்.

    பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் தம்பதியராக சேர்ந்து சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி போட வேண்டும். பின்னர்  சூரியபகவானை வணங்கியபடி பானையை 3 முறை சுற்றி மூட வேண்டும்.

    பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
     

  • pongal festival celebration

    தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி நம் வாழ்வில் வளம் பெறலாம். அந்த வகையில் நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம். சரி பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை தற்போது பார்க்கலாம்…. 

    ஜனவரி 14 – தை 1 வியாழக்கிழமை – தை பொங்கல்

    தை 1 (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை சுப தினத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் வருகிறது. 

    பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

    எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

    இராகு காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
     

  • Vinayakar Chadurthi Special Pongal

    தேவையான பொருட்கள்:
    பச்சரிசி –  1 கப்
    பாசிப் பருப்பு  – 50 கிராம்
    முந்திரிப் பருப்பு – 30 கிராம்
    காய்ந்த திராட்சை  – 30 கிராம்
    சுக்கு பொடி –  சிறிதளவு
    ஏலக்காய் –  6
    சிறிய தேங்காய் –  1
    நெய் –  200 கிராம்
    கருப்பட்டி  – 600 கிராம்
    தண்ணீர் – தேவைக்கேற்ப

    செய்முறை:   

    முதலில் கருப்பட்டியை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னர் குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.  

    தொடர்ந்து குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும்,  வாணலியில் சிறிது நெய்யைவிட்டு  அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.  

    தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார். 
     

  • pongal timing

    2020ம் ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15ஆம் தேதி புதன் கிழமை வந்துள்ளது.
    பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.00 மணி முதல் 10.30 வரை.
    அதிகாலை வைக்க நினைப்போர் காலை 7.30க்குள் வைத்து முடித்துவிட வேண்டும்.

     சரி பொங்கல் வைப்பது எப்படி ?
    வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும். பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கல் படைக்கும் பொழுதும் சங்கு ஊத வேண்டும். மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்.. என்று சொல்லிப் பலவிதமான காய்கறிகளை குழம்பு வைத்துப் படைத்து வழிபட வேண்டும். 

    சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும். வாழ்க்கை இனிக்க, கரும்பாக அமைய, கரும்பும் வைத்து வழிபட்டால் பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும்.
     

  • vinayaka chadurthi spl pongal

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கருப்பட்டி பொங்கல்
     

    தேவையான பொருட்கள்:
    பச்சரிசி –  1 கப்
    பாசிப் பருப்பு  – 50 கிராம்
    முந்திரிப் பருப்பு – 30 கிராம்
    காய்ந்த திராட்சை  – 30 கிராம்
    சுக்கு பொடி –  சிறிதளவு
    ஏலக்காய் –  6
    சிறிய தேங்காய் –  1
    நெய் –  200 கிராம்
    கருப்பட்டி  – 600 கிராம்
    தண்ணீர் – தேவைக்கேற்ப

    செய்முறை:   

    முதலில் கருப்பட்டியை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னர் குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.  

    தொடர்ந்து குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும்,  வாணலியில் சிறிது நெய்யைவிட்டு  அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.  

    தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.