Tag: Panguni uthiram

  • April 05 2023 Panguni Uthiram

    ஏப்ரல் 5 – பங்குனி உத்திரம்
    சுபகிருது வருடம் – பங்குனி 22   
    பவுர்ணமி
    பங்குனி உத்திரம்,
    பழநியில் தேர்
    05-ஏப்-2023 புதன்  
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : பவுர்ணமி     
    திதி நேரம் : சதுர்த்தசி கா 10.16
    நட்சத்திரம் : உத்திரம் ம 12.9
    யோகம் : அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • March 18 2022 Panguni Uthiram

    மார்ச் 18 – பங்குனி உத்திரம்
    பிலவ வருடம் – பங்குனி 4
    பங்குனி உத்திரம், 
    பழநி முருகன் தேர்
    18-மார்-2022 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    ம    1.48
    நட்சத்திரம்    :    உத்திரம்    ந.இ    1.25
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Nellaiappar koil panguni uthiram kodiyetram

    நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றதுடன் வெகு விமர்சியாக துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற  நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா   கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்  திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து பங்குனிஉத்திர திருவிழாவிற்கான  கொடிப்பட்டம் பல்லக்கில் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.பின்னர் திருகொடிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் மேல வாத்தியங்கள் இசைக்க சுவாமி சன்னதி மஹா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்  கொடியேற்றப்பட்டது .தொடர்ச்சியாக கொடிமரத்துக்கு 21 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும் சுவாடேச மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

    கொடியேற்ற விழாவில் திரளாக பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில்  4ஆம் திருநாளன்று சுவாமி நெல்லையப்பர் சுயம்புவாக உருவான வரலாறுத் திருவிளையாடல் நிகழ்வும்  10 ம் திருநாள் அன்று  ஆயிரங்கால் மண்டபத்தில் செங்கோல் வழங்கும்  திருவிழாவும்  நடைபெற உள்ளது.
     

  • panguni uthiram kuladeiva vazhipadu

    மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள். குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள். ‘குல தெய்வ சந்நதியில் குறை சொல்லி அழுதபடி, கண்ணீர் சிந்திப்பார். மறு கணமே அதற்கு தீர்வு கிடைக்கும்,’ என்பார்கள். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி அன்று வழிபடுவது மிகுந்த பலனைத்தரும்; நம் குலம் சிறப்பதோடு குடும்பமும் மேன்மை பெறும். 

    குல தெய்வங்கள் மனம் மகிழந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

    குல தெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது. அண்ணன், தம்பி, குடும்பத்தினர் எல்லாரும், ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமன்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். 

    கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குல தெய்வ கோயில் இருக்கும். எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். நகர்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம்.

    அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு பவுர்ணமி தோறும் இதை செய்து வந்தால் பவுர்ணமி போல் உங்கள் வாழ்க்கையும் பிரகாசிக்கும். நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்வது நல்லது.

    குலதெய்வப் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மணிப்பர்சிலும் வைத்துக்கொள்ளலாம். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன் குல தெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். ஒருவருக்கு குலதெய்வம் இசக்கியம்மன் என்று வைத்துக் கொள்வோம் அது ஊருக்குள்ளேயே இருக்கும். அவர் அங்கு செல்ல முடியவில்லை என்பதற்கு இசக்கியம்மனும் சக்தியின் அவதாரம் தான் என எண்ணி, அருகிலிருக்கும் காளிகாம்பாள் கோயிலில் சென்று தனது நேர்த்திக் கடனை செலுத்தினால் அது குலதெய்வத்தை போய் சேராது.

     

    குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது. அல்லது வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படிப்பட்ட மகானை வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை என்பார்கள். பாரம்பரிய வழக்கத்தை மீறாமல், மாற்றாமல் வணங்கவேண்டியது முக்கியம். குல தெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குல தெய்வத்தை காட்டும்படி வேண்டலாம். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாகக் கொடுக்கலாம்…
     

  • mangalam thrum panguni uthiram

    குருவிற்கு சொந்த வீடாக அமைந்த மீனத்தில் சூரியன் பங்குனி மாதத்தில் சஞ்சரிப்பார். ‘உத்ரம்’ நட்சத்திரம் வரும்பொழுது பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு தங்கரதம் ஏறி வரும் முருகப்பெருமானை தரிசித்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். மன அமைதி கிடைக்கும்.

    வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் திருமுருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திரம் வருகிற 9-4-2017 வருகிறது. ஒரு வீட்டை நிலை நிறுத்துவது மரத்தாலான உத்திரம் தான்.

    இரண்டு தூண்களுக்கு இடையே உத்திரம் அமைப்பர். அதுதான் வீட்டைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது. அதே போல உத்திரத்தன்று முருகனை வழிபட்டால், தூண் போல நம்மை அவன் தாங்கிப் பிடித்துக் கொள்வான். துயரங்களை துரத்திவிட்டு துணையாக நம்முடன் அவன் இருப்பான்.

    அன்றைய தினம் முருகப்பெருமானை, சர்க்கரையால் அபிஷேகம் செய்து சந்தோஷம் காணுங்கள். இளநீரால் அபிஷேகம் செய்து இனிய வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். காவடி சுமந்தால் கவலைகள் குறையும். பால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்க்கை அமையும்.
     

  • Panguni Uthiram Important points

    பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

    பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். 

    சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் பங்குனி உத்திர திருநாள். 

    அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் பங்குனி உத்திர நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

    முருக பெருமான் தெய்வானையை பங்குனி உத்திர நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான். 

    ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். 

    மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். 

    பங்குனி உத்திர நாள் அன்று காஞ்சியில் காமாட்சி – ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். 

    அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் பங்குனி உத்திர நாள் தான். 

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். 

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். 

    திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

    பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வருகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.

    அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

    திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
     

  • March 21 Panguni uthiram

    விளம்பி வருடம் – பங்குனி 7
     பரமக்குடி முத்தலம்மன், திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் தேர்
    21-மார்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    கா    7.41
    நட்சத்திரம்    :    உத்திரம்    ம    2.29
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Panguni Uthiram viradham

    பங்குனி உத்தரம் என்பது முருக பெருமானுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. 
    நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    பங்குனி உத்திரம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முகப்பெருமானை வணங்க வேண்டும். அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.
     
    வேலை உள்ளவர்கள் ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். அன்று ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள்,  உடல்,நலம் பாதிக்க பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.

    நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை  செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம்.