Tag: Padmavathi thayar

  • Padmavathi Thayar car fest video

    திருச்சானூர் பிரமோற்சவத்தின் 8வது நாளில் அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் கடந்த 23 ம் தேதி யானை உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

    பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை மகா ரத உற்சவம் நடந்தது. மகா ரதத்தில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்குமாட வீதியில் தாயார் பவனி வந்தார். இதில் பக்தர்கள் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் வேடமணிந்தும் பங்கேற்றனர்.
     

  • Mutthu pandal vaganathi padmavathi thayar

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளில் முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    சுவாமி வீதி உலாவின் போது மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றும் அலர்மேல் மங்கை தாயே என்று கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி வழிபட்டனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாச சாகித்யா, அன்னமாச்சார்யா திட்டத்தின் சார்பிலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நாட்டிய மற்றும் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் கோலாட்டம், பஜனை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களின் வேடமணிந்து பங்கேற்றனர். 

    இன்று இரவு சிம்ம வாகனத்திலும் நாளை காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.

  • Thiruchanoor Padmavathi Thayar Koil Festival

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலட்சுமி விரதத்தையொட்டி அதிகாலையில் சுப்ரபாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, நித்திய அர்ச்சனை மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து பத்மாவதி தாயார் உற்சவர் ஆஸ்தான மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது. 

    பின்னர் தாயாருக்கு லட்சுமி சகஸ்கர நாம அர்ச்சனை, அஷ்டோத்திர நாமாவளி படிக்கப்பட்டு ரோஜா, சாமந்தி ,மல்லி, சம்பங்கி, துளசி, மருவும், தாமரை உள்ளிட்ட மலர்களால் புஷ்ப அர்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து வரலட்சுமி விரததிற்காக சிறப்பாக செய்யப்பட்ட இட்லி, இனிப்பு இட்லி, லட்டு, வடை, அப்பம் போலி போன்ற 12 விதமான நெய்வேத்தியம் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதை அடுத்து மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது.

    சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு 50000 கங்கன கயிறுகள்,  மஞ்சள் கயிறு , மஞ்சள் , குங்குமம்,  2 லட்சம் வளையல்கள் வழங்கப்பட்டது. மேலும் மூலவருக்கு தங்க புடவையால்  அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    வரலட்சுமி விரதத்தை ஒட்டி 1.5 டன்   மலர்களால் 85 தோட்டத்துறை ஊழியர்கள் ஆப்பிள், திராட்சை, மாதுளம் , சாத்துக்கொடி,  அன்னாசி பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களாலும், மலர்களாலும் ஆஸ்தான  மண்டபத்தை அலங்கரித்தனர். மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலட்சுமி விரதத்தை ஒட்டி அபிஷேகத்திற்கு பின்னர் தரிசனம், லக்ஷ்மி பூஜை, கல்யாண உற்சவம்,  ரத்து செய்யப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் இணை செயல் அலுவலர் பசந்த்குமார், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத், கூடுதல் முதன்மை பாதுகாப்பில் உள்ள சிவக்குமார் ரெட்டி, துணை செயலாளர் ஜான்சிராணி, விஜிலன்ஸ் அதிகாரி அசோக்குமார் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர். 

  • Padmavathi thayar car festival

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வசந்த உற்சவத்தின்  இரண்டாவது நாளையொட்டி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவதின் இரண்டாவது நாளான இன்று தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி  நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். 

    கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது .அவ்வாறு இன்று மதியம் பத்மாவதி தாயார் உற்சவருக்கு பால், மஞ்சள்,  குங்குமம், பால் ,தயிர், தேன், சந்தனம், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது . 

    மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அன்னமாச்சாரியார் திட்டத்தின் சார்பில் ஆன்மிக சங்கீர்த்தனைகள் நடைபெற்றது. இரவு ஏழு முப்பது மணிக்கு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.