Tag: Padal

  • Devaram Padal Petra Sivalayangal

    274 பாடல் பெற்ற சிவாலங்களை இங்கு காணலாம்… எந்த மாவட்டத்தில் எந்த சிவன் கோயில் பாடல் பெற்றது என விவரமாக தரப்பட்டுள்ளது..

    சென்னை மாவட்டம்….
    வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    பாடி, திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    கடலூர் மாவட்டம்:
    சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், கடலூர்
    திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர்
    திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்
    ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    நாகப்பட்டினம் மாவட்டம்:
    ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    நீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
    கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தஞ்சாவூர் மாவட்டம்:
    பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவாய்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவையாறு ஐயாறப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்
    தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கானூர் செம்மேனிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பாபநாசம் பாலைவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கீழபழையாறை வடதளி சோமேசர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநறையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    அழகாபுத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சிவபுரம் சிவகுருநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    அரியலூர் மாவட்டம்:
    திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில், அரியலூர்
    கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்:
    அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி
    உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி
    உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருச்சி தாயுமானவர் திருக்கோயில், திருச்சி
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில், திருச்சி
    கரூர் மாவட்டம்:
    அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்
    கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    திருவாரூர் மாவட்டம்:
    திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருமாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    சிதலப்பதி முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    கருவேலி சற்குணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருவாரூர்
    திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கண்ணபுரம் ராமநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்
    ஆருர் அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்
    விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், திருவாரூர்
    கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், திருவாரூர்
    மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அவளிவணல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், திருவாரூர்
    பாமணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    இடும்பாவனம் சற்குணநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    தண்டலச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவண்டுதுறை வண்டுறைநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    மதுரை மாவட்டம்:
    மதுரை சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை
    செல்லூர், மதுரை திருவாப்புடையார் திருக்கோயில், மதுரை
    திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை
    திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில், மதுரை
    சிவகங்கை மாவட்டம்:
    பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை
    திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில், சிவகங்கை
    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
    காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
    புதுக்கோட்டை மாவட்டம்:
    திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
    ராமநாதபுரம் மாவட்டம்:
    ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
    திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், ராமநாதபுரம்
    விருதுநகர் மாவட்டம்:
    திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்
    திருநெல்வேலி மாவட்டம்:
    குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
    திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
    திருப்பூர் மாவட்டம்:
    அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர்
    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில், திருப்பூர்
    ஈரோடு மாவட்டம்:
    பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
    கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
    நாமக்கல் மாவட்டம்:
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
    விழுப்புரம் மாவட்டம்:
    நெய்வணை சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    டி. இடையாறு மருந்தீசர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    கிராமம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்
    பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    இரும்பை மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவண்ணாமலை மாவட்டம்:
    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
    செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    காஞ்சிபுரம் மாவட்டம்:
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருக்கச்சூர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    வேலூர் மாவட்டம்:
    திருவல்லம் வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    திருவள்ளூர் மாவட்டம்:
    கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில்,
    பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில், திருவள்ளூர்
    மற்ற மாநிலங்கள் கோயில்கள்:
    திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், திருச்சூர்
    திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், உத்தர் கன்னடா
    ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்
    திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
    திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
    தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், புதுச்சேரி
    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்
    காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்
    திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

  • Thiruppavai Padal – 28

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
    பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

    விளக்கம்:

    “குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.
     

  • Thiruppavai Padal – 27

    கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
    பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    நெய் பெய்து முழங்கை வழிவார
    கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

    விளக்கம்:

    “கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து “கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். “”கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.
     

  • Thiruppavai Padal 26

    மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

    பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

    விளக்கம்: பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
     

  • Thiruppavai Padal 25

    ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
    தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
    அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

    விளக்கம்:

    பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் “தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
     

  • Thiruppavai Padal 23

    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

    விளக்கம்:

    எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு…என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.
     

  • Thiruppavai Padal 22

    அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
    கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
    செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
    எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்
    களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!

    விளக்கம்:

    இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை… அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.
     

  • Thiruppavai Padal 21

    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
    ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
    ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

    பொருள்:

    கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

    விளக்கம்:

    “மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்…ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.
     

  • Thiruppavai Padal 20

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
    செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

    பொருள்:

    முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

    விளக்கம்:

    கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!