அக்டோபர் 28 – பிரதோஷம்
சார்வரி வருடம் – ஐப்பசி 12
பிரதோஷம்
28-அக்-2020 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி ப 2.58
நட்சத்திரம் : பூரட்டாதி ப 12.43
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Tag: October
-
October 28 pradhosham
-
October 16 Amavasai
அக்டோபர் 16 – அமாவாசை
சார்வரி வருடம் – புரட்டாசி 30
அமாவாசை
உணவு தினம்
16-அக்-2020 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை ந.இ 2.03
நட்சத்திரம் : அஸ்தம் ப 3.53
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Meena Rasi October month predictions
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மீன ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள்.
நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.
பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.
அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பூரட்டாதி – 4:
இந்த மாதம் தனலாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். வார இறுதியில் பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன்; தேய்பிறை: திங்கள், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
Kumbha Rasikku October month predictions
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கும்ப ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். ஆனாலும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் கிரக் சேர்க்கையால் வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம்.
தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.
குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.
பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.
அரசியல்துறையினருக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.
அவிட்டம் – 3, 4:
இந்த மாதம் வீண் செலவை உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.ஸதயம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.பூரட்டாதி – 1, 2, 3:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன் தேய்பிறை: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
Mahara Rasi October month predictions
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
மகர ராசியினரே இந்த மாதம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.
தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.
பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.
கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.
அரசியல்துறையினருக்கு பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.உத்திராடம் – 2, 3, 4:
இந்த மாதம் மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.
திருவோணம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் – 1, 2:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
Dhanusu Rasikku October month predictions
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசியினரே இந்த மாதம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.
குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.
பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.
கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும்.
அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.
மூலம்:
இந்த மாதம் உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.பூராடம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.உத்திராடம் – 1:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும்.பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
viruchiga rasi October month predictions
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
விருச்சிக ராசியினரே இந்த மாதம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.
பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம்.
மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.
விசாகம் – 4:
இந்த மாதம் தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளை குறைக்கலாம்.அனுஷம்:
இந்த மாதம் பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்குத் தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும்.கேட்டை:
இந்த மாதம் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவீர்கள்.பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி தேய்பிறை: வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் -
Thulam October month predictions
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
துளாராசியினரே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். சூரியன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.
அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.
சித்திரை – 3, 4:
இந்த மாதம் திறமைகள் வெளிப்படும். எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடுவீர்கள். நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிக சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதேநேரம் சின்னச் சின்ன பிரச்னைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.ஸ்வாதி:
இந்த மாதம் ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து சகஜநிலை உருவாகும்.விசாகம் – 1, 2, 3:
இந்த மாதம் அரசுத்துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் -
Kanni Rasi October month predictions
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கன்னி ராசியினரே இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.
அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
உத்திரம் – 2, 3, 4:
இந்த மாதம் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். புத்திர பாக்கியத்தை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள்.ஹஸ்தம்:
இந்த மாதம் பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும்.சித்திரை – 1, 2:
இந்த மாதம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியை சந்திப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
-
Simmam October month predictions
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
சிம்ம ராசியினரே நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள். இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.
கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.
அரசியல்துறையினருக்கு ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மகம்:
இந்த மாதம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.பூரம்:
இந்த மாதம் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும்.உத்திரம் – 1:
இந்த மாதம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்