Tag: Newyear

  • April 14 2024 Tamil Newyear

    ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு
    குரோதி வருடம் – சித்திரை – 1
    ஏப் 14, 2024
    ஞாயிறு
    தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள்
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சூன்ய
    திதி நேரம் :  சஷ்டி மா 4.47
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் அ.கா 5.17
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • January 1 2023 Happy Newyear

    ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு
    சுபகிருது வருடம் – மார்கழி 17,
    குற்றாலம் குற்றாலநாதர் தேர்
    01-ஜன-2023 ஞாயிறு  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30     
    திதி : தசமி     
    திதி நேரம் : தசமி இ 11.19
    நட்சத்திரம் : அசுவினி மா 5.12
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • April 14 2022 tamil newyear rasipalan

    ஏப்ரல் 14 – தமிழ்ப் புத்தாண்டு நாள் ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  அமைதி 
    ரிஷபம் –     சோர்வு 
    மிதுனம் –     வரவு 
    கடகம் –      தாமதம் 
    சிம்மம் –      நட்பு 
    கன்னி –     தடங்கல் 
    துலாம் –      சிரமம்  
    விருச்சிகம் – நற்சொல் 
    தனுசு –       மகிழ்ச்சி 
    மகரம் –      சிக்கல் 
    கும்பம் –    எதிர்ப்பு   
    மீனம் –       மறதி 
    சந்திராஷ்டமம்    – அவிட்டம் 

  • Tamil newyear sirappugal

    சித்திரை 1 …. உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் சித்திரை 1 ஆம் தேதி, அரசு விடுமுறை அளித்து வருகிறது. 

    தமிழர்களின் நாட்காட்டியில் அமைந்துள்ள முதல் மாதமான சித்திரையின் முதல் நாளை ’புது வருஷம்’ என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ’சித்திரை விஷு’ என்றும் அழைக்கின்றனர்.

    அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். 

    தமிழ்ப்புத்தாண்டு அன்று தமிழ் மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, அலங்காரத் தோரணமிடுவர். இதையடுத்து பாரம்பரிய புத்தாடை அணிந்து, மூத்தோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவர். பின்னர் கோவில்களுக்கு சென்று, புத்தாண்டு சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வர். 

    தமிழ்ப்பத அன்றைய வழிபாட்டின் போது, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைப்பர். அதேபோல் தங்க, வெள்ளி நகைகள், சில்லரைக் காசுகளை வைத்தும், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை கடவுளின் படத்தின் முன்பு வைத்து வழிபாட்டில் ஈடுபடுவர்.

    ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். இந்தாண்டு சுபகிருது வருடம் என்ற பெயரில் பிறந்துள்ளது. 

  • January 1 2022 Newyear rasipalan

    ஜனவரி 1 – புத்தாண்டு தின ராசிபலன்….
    .இன்றைய ராசி பலன்
    மேஷம் –      நலம் 
    ரிஷபம் –     சுகம் 
    மிதுனம் –     ஆதரவு 
    கடகம் –      இன்பம் 
    சிம்மம் –      பாசம்  
    கன்னி –      மகிழ்ச்சி   
    துலாம் –      பக்தி  
    விருச்சிகம் – உயர்வு 
    தனுசு –       லாபம் 
    மகரம் –      நற்சொல்  
    கும்பம் –     பணிவு 
    மீனம் –       தனம் 
    சந்திராஷ்டமம்    –   பரணி, கார்த்திகை 

  • APRIL 13 Telugu newyear

    ஏப்ரல்13 – தெலுங்கு புத்தாண்டு
    சார்வரி வருடம் – பங்குனி 31
    தெலுங்கு புத்தாண்டு
    13-ஏப்-2021 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    10.29
    நட்சத்திரம்    :    அசுவினி    ம    2.22
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்,அஸ்தம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirupathy Newyear Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  புத்தாண்டு  31-ஆம் தேதி முதல் 1ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

    மேலும் ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், நன்கொடையாளர்களுக்கான முன்னுரிமை தரிசனம்,  ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்யதரிசனம், அங்கபிரதட்சனை சேவையும்  என அனைத்து சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

     இதேபோன்று வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஒட்டி 5-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை அனைத்து முன்னுரிமை தரிசனங்களும், ( ஆர்ஜித சேவை ) கட்டண சேவைகள் ,சர்வ தரிசனம்,  திவ்யதரிசனம் , அங்கபிரதட்சணம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.