Tag: Nellaippar Koil

  • Nellaippar koil sumangali poojai

    நெல்லை நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது.

    ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர். 

    இந்த ஆண்டுக்கான வரலட்சுமி நோன்பு இன்றைய தினம் அனுசரிக்கப்படக்கூடிய நிலையில் நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு குழு மற்றும் இளைய பாரதம் அமைப்பு சார்பில் 1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். 

    நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்ற வைபவம் நடந்தது பின்னர் பெண்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து சிறப்பு தீபாரதனையும் செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர். 

    இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிவித்து மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் உடன் வழிபாடு நடத்தினர்

  • Nellaippar Koil Ippasi Thiruvizha

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கி இருக்கிறது. 

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5-30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா சுற்றி வந்தார்.

    இதைத்தொடர்ந்து அம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் காலை 7-30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

     4-ஆம் திருவிழாவான வருகிற 18-ந் தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் காந்திமதி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 21-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தந்த பல்லக்கு வாகனத்தில் தவழ்ந்த திருக்கோலத்திலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 

    22-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் பச்சை சாத்திவீதி உலாவும், இரவு 8 மணிக்கு கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 

    23-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள், செப்பு தேரில் பவனியும், இரவு 8 மணிக்கு தந்தப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 

    24-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாளுக்கு தங்க பல்லக்கில் தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு அம்மாள் தவக்கோலத்துடன் தங்கசப்பரத்தில் கம்பை நதிக்கு எழுந்தருளுகிறார்.

    25-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 8-30 மணிக்கு சுவாமி ரி‌‌ஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்க கோவிலில் இருந்து எழுந்தருளலும், 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் ரி‌‌ஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் வைபவமும் நடக்கிறது.

    26-ந்தேதி அதிகாலை 4-30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது. 

    26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. 29-ந்தேதி இரவு சுவாமி, அம்பாள் ரி‌‌ஷப வாகனத்தில் மனுவீடு பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது.