Tag: Nellai

  • Shiva temples with the presence of the Lord!

    தமிழ்நாட்டில் சிவாலயங்களில் திருமால் சந்நிதி அமைந்திருப்பது சைவ-வைணவ ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகிறது. சிவனும் பெருமாளும் ஒருங்கிணைந்து அருள்பாலிக்கும் இத்தலங்கள் பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்தவை. இத்தகைய கோவில்கள் ஆன்மீகத்தில் தனித்துவம் பெற்று, பக்தர்களை ஈர்க்கின்றன.

    இதோ, அத்தகைய முக்கிய சிவாலயங்களின் பட்டியல்:

    1. சிதம்பரம்: கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி இங்கு அமைந்துள்ளது. நடராஜ வடிவத்தில் சிவனுடன் பெருமாள் அருள்பாலிப்பது பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது.

    2. கச்சி ஏகம்பரம்: நிலாத் துண்டப் பெருமாள் சந்நிதி, சிவபெருமானுடன் இணைந்து பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

    3. கொடி இடச் செங்குன்றார்: ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும் பலத்தையும் தருகிறது.

    4. சிக்கல்: கோல வாமனப் பெருமாள் சந்நிதி, சிவாலயத்துடன் புனிதத்தை பரப்பி, ஆன்மீக உணர்வை ஏற்படுத்துகிறது.

    5. திருநயா: ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி, பக்தர்களுக்கு மன அமைதியையும் ஆன்மீக உயர்வையும் அளிக்கிறது.

    6. திருச்செந்தூர்: கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி, முருகன் கோவிலுடன் சிவ-வைணவ ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

    7. மதுரை: கரியமாணிக்கப் பெருமாள் சந்நிதி, மீனாட்சி அம்மன் கோவிலுடன் இணைந்து பக்தர்களை கவர்கிறது.

    8. திருநாவலூர்: வரதராஜப் பெருமாள் சந்நிதி, சிவனுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.

    9. திருநெல்வேலி: நெல்லை கோவிந்தர் சந்நிதி, ஆன்மீக பலத்தையும் அமைதியையும் வழங்குகிறது.

    10. திருப்புவனம்: கோவிந்தா சந்நிதி, சிவாலயத்துடன் இணைந்து புனிதத்தை பரப்புகிறது.

    11. பாண்டிக் கொடுமுடி: அரங்க நாதர் சந்நிதி, சிவ-வைணவ பக்தியை ஒருங்கிணைத்து பக்தர்களை ஈர்க்கிறது.

    12. திருவிடைமருதூர்: இங்கு பெருமாள் சந்நிதி, சிவனுடன் இணைந்து ஆன்மீக சிறப்பை வெளிப்படுத்துகிறது.

    13. திருக்கோளூர்: வைத்திய மாணிக்கப் பெருமாள் சந்நிதி, சிவாலயத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.

    இத்தலங்கள் சைவ-வைணவ பக்தியின் அழகிய சங்கமத்தை வெளிப்படுத்துகின்றன. சமீபத்தில், இக்கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து, ஆன்மீக பயணங்கள் பிரபலமடைந்து வருகின்றன. பக்தர்கள் இங்கு சென்று, சிவனையும் திருமாலையும் ஒரே இடத்தில் வழிபட்டு, ஆன்மீக பலனை பெறுகின்றனர்.

  • Nellai Sankaralingar koil

    நெல்லை மாவட்டத் திருக்கோயில்கள்-3

    சங்கரன் கோவில் என கோவிலின் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த ஊர், நெல்லை மாவட்டத்தின் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.. இது ஐம்பூதத் தலங்களில் ஒன்றாகும். அந்த வகையில்  இது மண் தலமாகும். இக்கோவிலின் கிழக்கு வாசலில் 125 அடி உயரமுள்ள 9 நிலை கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ளது..

    கோவிலின் தென்பகுதியில் அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம் என வரிசையாக உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் ஒரு புற்றில் வள்மீகநாதர் என்னும் நாகாபரண புற்றுலிங்கம் உள்ளது. இதுவே இக்கோவில் உருவாக காரணமான புற்று ஆகும்.

    வடபக்கம் சனிபகவான் , காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவி உள்ளனர். கீழ்ப் பிரகாரத்தில் சூரிய, சந்திரன் உள்ளனர் . மகா மண்டபத்தின் மதில் சுவற்றில் பல தெய்வங்களின் சிறு உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டு அக்கால சிற்பக்கலை நுணுக்கங்களை நமக்கு போதிக்கிறது. இம்மதிலின் தென் பக்கம் தட்சிணா மூர்த்தி, மேல் பக்கம் நரசிம்மர், வடபக்கம் பிரம்மா உள்ளனர். இவர்களை நாம் தரிசித்துவிட்டு அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் அங்கிருந்து சிறிய உருவில் எழுந்தருளியுள்ள சங்கரலிங்கப் பெருமாளை கண்குளிர தரிசிக்கலாம்.

    சங்கரலிங்கர் கோவில் போன்றே கோமதியம்மன் கோவிலிலும், கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மா மண்டபம் சுற்று மண்டபங்கள் உள்ளன. கோமதியம்மை கர்ப்பக்கிரகத்திற்கு நேர் எதிரில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் மக்கள் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கிறார்கள். இருபக்கமும் மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.வடக்குப் பிரகாரத்தில் புற்றுமண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் இம்மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று நோய் நீக்கம் பெறுகிறார்கள். இது தோல் நோய்களை நீக்கும் அருமையான மருந்தாகும். அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்து கோமதி அம்மையைத் தரிசிக்கிறோம் .வலது கையில் மலர்ச் செண்டுடன் இடது கையைத் தொங்கவிட்டு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கும் அழகு திருக்கோலம் நம் மனதை விட்டு என்றும் நீங்குவதில்லை .. இந்தக் கோவிலில் தினசரி 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    இக்கோவிலில் சங்கரனார் மற்றும் கோமதியம்மைக்கு மட்டுமே இரண்டு சந்நிதிகள் , தெருவிலிருந்து நேரே தரிசிக்குமாறு இரண்டு பெரும் வாயில்களுடன் அமைந்துள்ளது. ஆனால் நடுவில் உள்ள சங்கர நாராயணருக்கு தலைவாசல் ஒன்று இல்லாதபடி உள்ளடங்கியே உள்ளது. மேலும் அம்மையின் வேண்டுதல் படி இறைவன் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தமையால் சங்கரநாராயணர்த் திருக்கோவில் பின்னால் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. 

    வைணவப் பெரியார் இராமானுசர் மற்றும் வீர வைணவர்களான விஜயநகர மன்னர்கள் காலத்திலும், .திருமாலுக்கு இக்கோவிலோடு தொடர்பினை உண்டாக்கி இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததே சங்கரநாராயணர் என்று உருவாக்கிவிட்டனர் என்கிறார்கள்.

    பரமேஸ்வரன் தன்னுள் அடங்கிய நாராயணரை வெளிப்படையாகத் தனது இடது பாகத்தில் காட்டி அருளினாரா ? அல்லது சிவன், திருமால் என்ற இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததால் சங்கரநாராயணரா ? எது எப்படியிருப்பினும் , தற்காலத்திற்கு மிகவும் அவசியமான சமய ஒற்றுமைக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி மக்களை நல்வழிப்படுத்தி வருகிறது. என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . தமிழ்நாட்டில் சங்கரநாராயணருக்கு தனிக்கோவிலாக அமைந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் ஒரே திருக்கோவிலும் இதுவேயாகும்.

    இத்தலம் தென் கிழக்கு தமிழக மக்களின் ஒரு பிரார்த்தனை தலம் ஆகும். பாம்பு , தேள் போன்ற சிறு விஷ ஜந்துக்களிலிருந்து நமக்கு துன்பம் வராதிருக்க பிராணிகளின் வெள்ளியிலான உருவங்களை வாங்கி உண்டியலில் செலுத்துவர். இங்கு கிடைக்கும் புற்று மண்ணைக் கரைத்துப் பூசினால் தோல் வியாதிகள் நீங்குவது யாவரும் அறிந்ததே. இத்தலத்திற்கு வந்து நாகசுனையில் மூழ்கி முறையாக வழிபடுவோர் குட்டம் , குன்மம் முதலிய தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நலம் பெறுகின்றனர்.

    சங்கரன்கோயில்,  திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தாலுகா தலைநகராக விளங்கி வருகிறது. திருநெல்வேலியிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் , கழுகுமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், இராசபாளையத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. நல்ல போக்குவரத்து வசதியுள்ள தார் சாலைகளும்,  புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளன. இது சென்னை – செங்கோட்டை .இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. 

    Google Maps link – https://goo.gl/maps/8zP6Kpjn5LxoCedG8

  • Nellai Gandhimathi Ammanukku Valaikappu

    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25?ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. 

    கர்ப்பிணிப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டிருந்த காந்திமதி அம்மனுக்கு பெண்கள் வளையல்கள் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர்.

    இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
     

  • Nellai Kailasanadhar car festival

    நெல்லை கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் ஜூன் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கைலாசநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடியேற்றப்பட்டதும், கொடிமரத்திற்கு பதினாறுவகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் சிறப்பு பூஜைகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பூங்கோயில், சப்பரங்களில் மலர் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

    7-ம் திருநாளான இம் மாதம் 8-ம் தேதி இரவு 9 மணிக்கு செப்புச் சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் சிவப்பு சாத்தி திருவீதியுலா வர உள்ளார். 9-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி வீதியுலா வருகிறார். மாலையில் சந்திரசேகரர் பரிவேட்டையும், கங்காளநாதர் வீதியுலாவும் நடைபெற உள்ளன.

    விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகளும், 7 மணிக்கு சுவாமி-அம்பளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர், மலர் அலங்காரத்துடன் தேருக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருள்கின்றனர். காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 11ஆம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரியும், 10.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற உள்ளன.