Tag: narashimmar

  • Pavangal pookum narashimmar

    பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு விரதம் மேற்கொண்டால் பாவம் ஒழிந்து புண்ணியம் கிடைக்கும்.

    விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் ஊரில் உள்ள கோவில் தான் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்த கோவிலில் மூலவராக லட்சுமி நரசிம்மரும், அம்மனாக கனகவல்லியும் உள்ளனர். இந்தியாவிலேயே இந்த கோவிலில் தான் நரசிம்மர் சுவாமியை லட்சுமியும், லட்சுமியை நரசிம்மரும் ஆலிங்கனமும் செய்தபடி காட்சியளிக்கின்றனர்.

    திருமணத்தடை காரியத்தடை உள்ளவர்கள் இங்கு பரிக்கல் கோவிலுக்கு வந்து தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதே போல், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டால் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும்.

    விரதம் இருந்து பரிக்கல் கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வைத்தும், பக்த ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் கொட்டி அதில் எழுதி வைத்து வழிபட்டால், பக்தர்களின் நியாயமான குறைகள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பக்தர்கள் தங்கள் வாழ்வில், பிறவியில் வந்த பாவங்கள் அழிந்து புண்ணியம் கிடைக்க வழிவகுக்கும்.

  • Narashimmar vazhipadu

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

  • Sri lakshmi narashimmar vazhipattu kurippugal

    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பானகம் பிடித்தமானவையாகும். கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

    நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம். நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

    வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

    நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் மற்றும் மாமிசம் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

    நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

    நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும். நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

  • Dhosham neekum narashimmar vazhipadu

    நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். நரசிம்ம ஜெயந்தி அன்று வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம். வீட்டில் வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து  நரசிம்மரை வழிபடுவது மிகவும் நல்லது.

    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

    தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோ யால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறியவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

    நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

  • lakshmi narashimmar vazhipadu

    வளர்பிறை சதுர்த்தசி திதி. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இன்றைய தினம் விரதமிருந்து வளர்பிறை சதுர்த்தசி திதியில் விரதமிருந்து லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவது சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும்.

    நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைப்பொங்கல், பானகம்  பூஜைக்கு வைத்து வழிபடலாம்.

    இந்நாளில் நரசிம்மரை தரிசனம் செய்தால் அனைத்துத் தோஷங்களும் விலகி விரும்பும் நியாயமான பூரண பலன்கள் கிடைக்கும். நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். மிகப்பெரிய ஜ்வாலையானவன் என்று நரசிம்மனைச் சொல்கிறது புராணம்.

    நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்து நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும், வளர்பிறை சதுர்த்தசி திதி மிகவும் விசேஷமானது. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்களையெல்லாம் தங்குதடையின்றி நடத்திக் கொடுத்து அருளுவார் நரசிம்மர்.

    சக்தியும் உக்கிரமும் வாய்ந்தவர் நரசிங்க பெருமாள். பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும்.
     
    உக்கிர மூர்த்தியாக உக்கிர சொரூபமாகத் திகழ்கிறார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள். இவரை இஷ்ட தெய்வமாக நினைத்து தொடர்ந்து வாரந்தோறும் வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்களையெல்லாம் தங்குதடையின்றி நடத்திக் கொடுத்து அருளுவார் நரசிம்மர்.
     
    இவரை சனிக்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் பானக நைவேத்தியம் செய்து வணங்கி வந்தால், எட்டுத் திசைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் அகலும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், நரம் கலந்த சிங்கம் எனப் பல திருநாமங்கள் உண்டு.

    சென்னை திருவல்லிக்கேணி கோயிலில் நரசிம்மர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் விசேஷமானவர். இவருக்கு பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால்,விரைவில் நம் வேண்டுதல்களை யெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார்.

    லட்சுமி நரசிம்மரை தினமும் வழிபாடு செய்ய வேண்டும். நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும். தினந்தோறும் பூஜை அறையில் லட்சுமி நரசிம்மரை நினைத்து ‘ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.

    அம்பாளுடன் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை தாராளமாக, பயப்படாமல் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.நரசிம்மர் வழிபாட்டில் நிவேதனமாக பானகம் இருக்க வேண்டும். அதுதான் சிறப்பான பலனை கைமேல் கொடுக்கும்.

    உலர் திராட்சை, ஏலக்காய், கற்கண்டு போன்ற நிவேதனத்தை தாராளமாக நரசிம்மருக்கு வைத்து வழிபாடு செய்யலாம். எந்த வேண்டுதலாக இருந்தாலும் உண்மையோடு, மன உறுதியோடு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன் இரட்டிப்பாகும்.

  • valarpirai lakshmi narashimmar vazhipadu

    வளர்பிறை சதுர்த்தசி திதியில் விரதமிருந்து லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவது சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும். அன்றைய தினம் நரசிம்மரை தரிசனம் செய்தால் அனைத்துத் தோஷங்களும் விலகி விரும்பும் நியாயமான பூரண பலன்கள் கிடைக்கும். நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். மிகப்பெரிய ஜ்வாலையானவன் என்று நரசிம்மனைச் சொல்கிறது புராணம்.

    நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்து நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும், வளர்பிறை சதுர்த்தசி திதி மிகவும் விசேஷமானது. சக்தியும் உக்கிரமும் வாய்ந்தவர் நரசிங்க பெருமாள். பக்தன் பிரகலாதனுக் காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

    உக்கிர மூர்த்தியாக உக்கிர சொரூபமாகத் திகழ்கிறார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள். இஷ்ட தெய்வமாக நினைத்து தொடர்ந்து வாரந் தோறும் வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்களையெல்லாம் தங்குதடையின்றி நடத்திக் கொடுத்து அருளுவார் நரசிம்மர்.

    இவரை புதன்கிழமை பானக நைவேத்தியம் செய்து வணங்கி வந்தால், எட்டுத் திசைகளி லும் நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் அகலும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், நரம் கலந்த சிங்கம் எனப் பல திருநாமங்கள் உண்டு.

    சென்னை திருவல்லிக்கேணி கோயிலில் நரசிம்மர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் விசேஷமானவர். இவருக்கு பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால்,விரைவில் நம் வேண்டுதல்களை யெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார்.

    லட்சுமி நரசிம்மரை தினமும் வழிபாடு செய்ய வேண்டும். நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும். தினந்தோறும் பூஜை அறையில் லட்சுமி நரசிம்மரை நினைத்து ‘ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.

    அம்பாளுடன் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை தாராளமாக, பயப்படாமல் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.நரசிம்மர் வழிபாட்டில் நிவேதனமாக பானகம் இருக்க வேண்டும். அதுதான் சிறப்பான பலனை கைமேல் கொடுக்கும்.

    உலர் திராட்சை, ஏலக்காய், கற்கண்டு போன்ற நிவேதனத்தை தாராளமாக நரசிம்மருக்கு வைத்து வழிபாடு செய்யலாம். எந்த வேண்டுதலாக இருந்தாலும் உண்மையோடு, மன உறுதியோடு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன் இரட்டிப்பாகும்.

  • parikkal narashimmar

    பரிக்கல் நரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் எதிர்ப்பையெல்லாம் நீக்கி அருளுகிறார். மனோபயங்களையும் மனக்கிலேசங்களையும் போக்கி அருளுகிறார். தடைப்பட்ட காரியங்களையும் நடத்தி அருளுகிறார். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிப்பார் லக்ஷ்மி நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான திருத்தலம்… பரிக்கல். இங்கே உள்ள ஸ்ரீநரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் மக்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார். இந்தத் திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம்.

    இந்த மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்வின் போது தப்பித்துச் சென்ற இந்த பரிகலாசூரன், கிருஷ்ணாரண்யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் பகுதிக்குள் மறைந்து கொண்டான் என்கிறது ஸ்தல புராணம்.

    இந்தப் பகுதியை, வசந்தராஜன் எனும் குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். மிகுந்த திருமால் பக்தன். இவனுடைய ஆளுகைக்குக் கீழிருந்த பரிக்கல் பகுதி இருந்தது.நரசிம்ம மூர்த்திக்கு இங்கே ஆலயம் எழுப்ப விரும்பினான். அதற்கான திருப்பணிகளை மேற்கொண்டான். இதற்காக, எல்லைப் பகுதிகளில் காவலுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவினரை ஆலயப் பணிகளில் ஈடுபடுத்தினான்.

    அந்த தருணத்தில் தான், பரிகலாசூரன் தன் மாயப்படையுடன் வந்து பரிக்கல் உள்ளிட்ட பகுதியை அழித்தான். மக்களை ஓடஓடவிரட்டினான். மன்னனின் படைகளை அழித்தான். குதிரைகளையும் மாடு கன்றுகளையும் அழித்தான். மன்னனின் பெற்றோரை, உறவினர்களையெல்லாம் அழித்தான். இவற்றை அபசகுனமாகப் பார்த்தான் மன்னன். ஆலயம் எழுப்பும் பணியை தற்காலிகமாக ஒத்திவைத்தான். சிறிதுகாலம் கழித்து, தன் ராஜகுருவிடம் உத்தரவு வேண்டினான்.இந்த முறை வேறொரு இடத்தில் ஆலயம் எழுப்ப இடம் தேர்வு செய்து கொடுத்தார் ராஜகுரு. மேலும் ஆலயம் எழுப்புவதற்கான சாஸ்திர வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.

    அதன்படி, திருப்பணி ஆரம்பிக்கும் முன்பு, யாகம் நடத்தப்பட்டது. அந்த யாகத்துக்கு அசுரக்கூட்டம் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, மன்னனின் கையில் கங்கணம் கட்டப்பட்டது. ’நானே கடவுள். என்னை வணங்கினால் உங்களை அழிக்காமல் விட்டுச் செல்வேன்’ என்று எச்சரித்தான் அசுரன். ஆனால் ‘நரசிம்மரே என் கடவுள். அவரின் திருவடியில் மண்டியிடு. உனக்கும் உன் கூட்டத்துக்கும் மோட்சம் கிடைக்கும்’ என உறுதியாகச் சொன்னான் மன்னன்.

    அசுரன் கோபமானான். யாகத்தைக் குலைத்துப் போட ஆரம்பித்தான். சர்வ வல்லமை கொண்ட கோடரியால், மன்னனின் தலையைப் பிளந்தான் அசுரன். அப்போது மன்னனின் உடலில் இருந்து புறப்பட்டு வந்த நரசிங்கப் பெருமாள், அசுரனை இரண்டாகப் பிளந்தார். துவம்சம் செய்து அழித்தார் என்கிறது ஸ்தல புராணம்.

    நரசிம்மப் பெருமானின் திருவருளால் வசந்தராஜன் உயிர்த்தெழுந்தான். வசந்தராஜன் நரசிங்கப் பெருமானின் அகோர விஸ்வரூபத்தைத் தரிசித்து மகிழ்ந்தான். பக்தர்களின் குறையகற்றும் எம்பிரானே. அடியேனுக்கு அருள்புரிந்தீர்கள். என் பெரும் பாக்கியம்’ என வேண்டினான்.

    ’என்னோடு யாகத்தில் ஈடுபட்ட அனைவரையும் உயிர் பெறச் செய்யுங்கள் சுவாமி. திருமகளுடன் தாங்கள் இங்கே சாந்த மூர்த்தியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்’ என வேண்டுகோள்விடுத்தான் மன்னன். அதன்படியே சாந்தமூர்த்தியாக திருக்காட்சி தந்தருளினார் நரசிம்ம மூர்த்தி. அதுமட்டுமின்றி, லக்ஷ்மி நரசிம்மராக அங்கே கோயில்கொண்டார்.

    பரிகலாசுரன் எனும் அரக்கனை அழித்த இடம், பரிகலபுரம் என்றாகி, பின்னர் பரிக்கல் என்றாயிற்று. பரிக்கல் நரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் எதிர்ப்பையெல்லாம் நீக்கி அருளுகிறார். மனோபயங்களையும் மனக்கிலேசங்களையும் போக்கி அருளுகிறார். தடைப்பட்ட காரியங்களையும் நடத்தி அருளுகிறார். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிப்பார் லக்ஷ்மி நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

     

  • Narashimmar Slogam

    கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, செல்வம் பெருகிட நரசிம்மர் ஸ்லோகம்!

    தேவதா கார்ய ஸித்யர்த்தம்
    ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!
     ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!

    லஷ்மியாலிங்கித வாமாங்கம்
     பக்தானாம், வரதாயகம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    ஆந்த்ர மாலாதரம் சங்க,

     சக்ராப்ஜாயுததாரினம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்

     கத்ரூஜ விஷ நாசனம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    ஸிம்ஹ நாதேன மஹதா

     திக்தந்தி பய நாஸனம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்

    தைத்யேஸ்வர விதாரணம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    க்ரூரக்ரஹை பீடிதானாம்!

     பக்தானாமப்யப்ரதம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
    நமாமி ருண முக்தயே!!
    வேத வேதாந்த யக்ஞேஸம்

     ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    யஇதம் படதே நித்யம்

    ருணமோசன ஸம்சஞிதம்!
    அந்ருணீஜாயதே ஸத்ய :
    தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!

    இந்த ஸ்தோத்திரத்தை தினமும் மனமுருகி படிப்பவருக்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும். அதோடு நியாயமான முறையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.
     

  • Lakshmi narashimmar slogam

    அணைத்து விதமான கஷ்டங்கள் விலக மாலை வேளையில் உச்சரிக்க வேண்டிய லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

    ஓம் நமோ நாரஸிம்ஹாய
    வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
    வஜ்ர தேஹாய நகாய ச 

    மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும்நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    மேலும் வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை மனதார உச்சரிக்க வேண்டும். மேலும் இந்த பிரார்த்தனையின் போது அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.

  • Pugaz tharum narashimmar

    திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். 

    சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

    நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

    மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

    நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.