Tag: Nandhi

  • Kanjanoor nandhi varalaru

    அந்தணர் ஒருவர் புல்லுக்கட்டொன்றைத் தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக் கன்று ஒன்று இறந்துவிட்டது. இதனால் பசுத்தோஷம் அவருக்கு நேர்ந்தது என்று பிராமணர்கள் அந்த ஏழை அந்தணரை விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாது ஹரதத்தரிடம் சென்று முறையிட்டார் 

    அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தைச் சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாகச் சொன்னார். 

    பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்கட்கு நேரடிச் சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அவ்வந்தணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்தக் கல் நந்தியிடம் தருமாறு பணித்தார். அவ்வந்தணரும் அவ்வாறே செய்து, "கல் நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நிங்கும் " என்று சொல்லிப் புல்லைத்தர, அந்த நந்தியும் உண்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. இந்நந்தி புல் உண்டதால் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை.
     

  • Nandhi Bagavan Sirappugal

    பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார்.

    அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார்.

    நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.

    தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.

    இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார்.

    புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும். 

  • Thirunallaru Nandhi

    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை தோறும் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

     கடந்த ஓரிரு மாதங்களாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அக்னி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது . இதனால் பொதுமக்கள் வெயிலில் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். சாலைகளில் வீசும் அனல் காற்று வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. 

     இந்நிலையில் மழை வேண்டியும், வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டியும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தியை சுற்றிலும் தொட்டி கட்டி , அதனுள் நீரூற்றி நந்தி குளிர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் ஓதி மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். 

    இதை தொடர்ந்து பல்வேறு  திரவியங்களைக் கொண்டு நந்திக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  மகா தீபாராதனை காட்டப்பட்டது. காரைக்காலில் கடந்த சில மாதங்களாக ஒரு துளி மழை கூட விழாத நிலையில் மழை வரும் வரை இந்த வழிபாடு தொடரும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.

  • Nandhiyin kurukke poga koodathu

    சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும். சிவபெருமானின் வாகனமாக இருப்பது வெள்ளை நிறக்காளை. இதன் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன. 

    சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது. நந்தி என்றால் ‘மகிழ்ச்சி’ என்று பொருள். நான்கு மறைகளையும் நந்தியம் பெருமானுக்குத் தான், ஈசன் முதன் முதலில் கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது தர்மம் மட்டுமே. அந்த தர்மம் தான், இறைவனான சிவபெருமானைத் தாங்கி நிற்கிறது.

    கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நந்தியின் மூச்சுக் காற்று கருவறை சிவலிங்கம் மீது பட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத் தான் ஈசன் சுவாசிக்கிறார். அதாகப்பட்டது.. தர்மம் தான் இறைவனின் சுவாசம்.

    சிலாத முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

    நந்தியம்பெருமானுக்கு ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன.