Tag: Namakkal

  • Namakkal anjaneyar vadamalai

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்றது ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி . ஒரே கல்லால் 18 அடி உயரத்தில் ஆன ஸ்ரீநாமக்கல் ஆஞ்சநேயர் சாமி கைகூப்பி வணங்கியபடி காட்சி அளிக்கிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

    அதன் படி தமிழகம் முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையையொட்டி நாமக்கல் ஆஞ்நேயருக்கு 1,00,008 வடைமாலை சாட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இனைதொடர்ந்து அலங்ககரிப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்

  • Namakkal Anjaneyar koil Booking

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு செய்ய கோயில் மண்டபத்தில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 18 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும், ஆஞ்சநேயரை தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

    தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி, தங்கம், முத்தங்கி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும்.

    வரும் 2020-ஆம் ஆண்டு முழுவதும் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு, நவம்பர் 10-ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ் மாதப் பிறப்பு ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற நாள்களில் அபிஷேகம் கட்டளைதாரர்கள் மூலமாகவே நடைபெறும்.

    இது குறித்து கோயில் உதவி ஆணையர் பெ.ரமேஷ் கூறியதாவது:

    ஒவ்வோர் ஆண்டும், அடுத்த ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்கும். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான தினசரி அபிஷேக முன்பதிவானது நவ.10-இல் தொடங்கி முழுமையாக நிறைவேறும் வரை நடைபெறும்.

    சுவாமிக்கு, தினமும் 1008 வடைமாலை சாத்தப்பட்டு, அதன்பின், நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சொர்ணாபிஷேகத்திற்கு பின் ஆஞ்சநேயருக்கு மாலைகள் சாத்துப்படி செய்து சிறப்பு அலங்காரம் நடைபெறும். 

    இந்த அபிஷேகம், அலங்காரத்தை, ஆரம்பத்தில் 3 பேர் இணைந்து செய்யும் வகையிலே இருந்தது. 2017-க்குப்பின் 5 பேர் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டது. ஒருவருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேருக்கு ரூ.30 ஆயிரமாகும். பிரசாதம் பகிர்ந்து அளிக்கப்படும். முழுத்தொகையையும் முன்பதிவின்போதே செலுத்திட வேண்டும்.

    ஆண்டின் 365 நாளில் தங்களுக்கு விருப்பமான நாள்களை, கோயில் விசேஷ நாள்களை தவிர்த்து, பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

  • Namakkal Anjaneyar alangaram

    1,00,008 வெற்றிலை  அலங்காரத்தில் நாமக்கல் விஷ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா மட்டுமின்றி தமிழ்மாதம் முதல் ஞாயிற்று கிழமை யில் பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக அனுமன் ஜெயந்தி அன்று மட்டும் 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று முதன் முதலாக 1,00,008 வெற்றிலை  அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர் நீண்ட வரிசியில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  

    ராமணின் வெற்றி செய்தியை இலங்கையில் அசோக வனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி யிடம் முதன் முதலில் சொன்னவர் ஆஞ்சநேயர்.  அந்த வெற்றி செய்தியை கூறிய ஆஞ்சநேயர் க்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என என்னினால் சீதா தேவி. 

    பரிசு கொடுக்கதன்னிடம் எதுவும் இல்லாததால் அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்த இலைகளை பறித்து மாலையாக தொடுத்து இதை போட்டுக் கொள்  என அனுமனிடம் கொடுத்தார் சீதா தேவி. இது புராண கால வரலாறு ஆகும். இதன் காரணமாகத் தான் ஆஞ்சநேயர் க்கு வெற்றிலை மாலை அணிவித்து  பெண்கள் வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.