Tag: mythra muhurtham

  • Seekiram kadankalai adaikka uthavum mythra muhurtham

    சில கடன்களை என்ன முயற்சி செய்தாலும் அடைக்கவே முடியாது. அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போகும். இந்தமுறை அந்த கடனை தீர்த்து விடுவோம் என்று பணத்தை எடுத்துவைத்தால், வேறு ஏதாவது செலவு வந்து அந்ததொகை அப்படியே கரைந்து போய்விடும். பழைய கடன் நம்மைப் பார்த்து எளக்காரமாக பல்லைக்காட்டும். இதுக்கு என்னதான் தீர்வு?
    இப்படி நீண்ட காலமாக இழுபறியாகவே இருக்கும் கடன்களை அடைக்க ஒரு வழி இருக்கிறது. அதுதான் மைத்ரயமுகூர்த்தம்.

    மைத்ரய முகூர்த்தம் என்றால் செவ்வாய் கிழமையும் அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் சேரும் நாளில், அஸ்வினி இருக்கும் வேளையில் மேஷலக்னம் அல்லது அனுஷம் இருக்கும் வேளையில் விருச்சிக லக்னம் காலமே மைத்ரேய முகூர்த்த காலமாகும். இது தென்இந்தியா, இலங்கைக்கு மட்டும் பொருந்தும் நேரம். மற்ற நாடுகளில் இந்தநேரம் மாறுபடும்.

     

     செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் ஹோரை காலை 6 – 7 அல்லது மதியம் 1 – 2 இருக்கும் காலத்தில் மைத்ரேய முகூர்த்தம் வருமேயானால் மிகவும் விசேஷமானது.
    மாதம்தோறும் அஸ்வினி, அனுஷம் வருகை தந்தாலும், செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து பகல் வேளையில் மைத்ரய முகூர்த்தம் வருடத்திற்கு சில நாட்களே வரும்.

    மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பணம் கடன் கொடுக்கல்-வாங்கல் கூடாது என்பதால் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் ஒரு நாழிகை வரை சூரிய வெளிச்சம் இருக்கும் காலத்திற்கு முன்னர் மைத்ரய முகூர்த்தம் வந்தால் நல்லது. மைத்ரேய முகூர்த்த வேளையில் சிறிய அளவிற்காவது வங்கிகடன்(Bank Loan), நகைகடன் (Jewellery loan), வீட்டு அடமானம் (Housing mortgage loan), கடன் அட்டை(Credit card loan) கடனை திருப்பி தந்தால் வெகு விரைவில் பெருங்கடன் தொகை அடைபட்டு நிம்மதி கிட்டும்.

    1.மைத்ரய முகூர்த்த நாளில் இயலாத சூழலில் செவ்வாய் கிழமையுடன் அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் சேரும் நாளில் லக்னம் நள்ளிரவு வந்தாலும் அன்று கடனை அடைத்தல் நன்று.

    2.அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷலக்னத்திலும், அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சிக லக்னத்திலும் கடன் அடைக்கலாம். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இது போன்று வரும்  (இது முழுமையான மைத்ரயமுகூர்த்தம் அல்ல சுமார் 66% மைத்ரய முகூர்த்தமாகும்)

    3.பிறந்ததிதி, வாரம், நட்சத்திரம் ஆகியவற்றில் கடனை திரும்பி தருவது நன்று.
    கடன் அடைக்க உதவும் வழிபாடு: கணகதாரா ஸ்தோத்திரம் வெள்ளிக்கிழமையில் படித்தல் நன்று, வீட்டில்ல க்ஷ்மி படத்திற்கு லெட்சுமி அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்து பூஜித்தால் கடன் தொல்லை நீங்கி வளம் பெறலாம்.

    கடன் அடைக்க உதவும் ஹோமங்கள்:
    லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்தல் நன்று  (எச்சரிக்கை: எக்காரணம் கொண்டும் கடும்நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் அதிக செலவாகும் ஹோமங்களை செய்ய வேண்டாம். சாதாரண வழிபாடே போதுமானது)
    மைத்ரய முகூர்த்தம் நாட்களில் கடன் திருப்பி தந்து முழுக்கடனும் நீங்கி நல் அமைதியான வாழ்வு வாழ இறைவன் அருளட்டும்.