Tag: Money

  • Steps to follow to maintain and grow wealth!

    செல்வம் நிலைத்து, விருத்தியடையவும், பணம் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக அமையவும் சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் பணம் கொடுக்கல்-வாங்கல் நடப்பது உத்தமம். இதனால் கொடுப்பவருக்கு பணம் திரும்ப கிடைக்கும், வாங்குபவரால் பணத்தை திரும்ப கொடுக்க முடியும். பணத்தை திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிறப்பு.

    பணம் கொடுக்கும்போது வாசல்படியில் நின்று கொடுக்கக்கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து கொடுக்க அல்லது வாங்க வேண்டும். வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றில் உட்காரவும் கூடாது. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் ஆகியவற்றை அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. வெற்றிலை, வாழையிலை ஆகியவற்றை வாடவிடவோ, வெற்றிலையை தரையில் வைக்கவோ, சுண்ணாம்பு வெற்றிலையை போடவோ கூடாது.

    எரியும் குத்து விளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தால் மட்டுமே அணைக்க வேண்டும். வீட்டில் யாரையும் ‘சனியனே’ என்றோ, ‘எழவு’ என்றோ திட்டக்கூடாது. அதிகமாக கிழிந்த துணிகளை உடுத்தவோ, உடுத்தியபடி தைக்கவோ கூடாது. உப்பையோ, அரிசி கழுவும்போது அரிசியையோ தரையில் சிந்தக்கூடாது.

    வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாக திகழ்வதால், அதில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கு ‘ஹரிபலம்’ என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாக நெல்லி மரம் விளங்குகிறது. நெல்லி மரம் உள்ள வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.

    இந்த வழிமுறைகளை பின்பற்றினால், செல்வம் நிலைத்து, வாழ்வில் செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. சமூக வலைதளங்களில் இது குறித்து பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, இவற்றை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

  • Vastu tips to attract Goddess Lakshmi to your home: Ways to increase wealth!

    பலரும் தங்கள் வீட்டில் லட்சுமி தேவி வசிக்க வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்று விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரப்படி, சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், லட்சுமி தேவியை வீட்டிற்கு வரவழைத்து, நிதி நிலையை மேம்படுத்தலாம்.

    இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு கட்டுவது முதல் அலங்காரம் வரை வாஸ்து முக்கியமானது. லட்சுமி தேவி வீட்டிற்கு வரும்போது கதவு, ஜன்னல்களை மூடுவது தவறு. சூரிய உதய நேரத்தில், பிரம்ம முகூர்த்த வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாள் என்று ஐதீகம். இந்த நேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது. சூரிய அஸ்தமன வேளையில் விளக்கு ஏற்றி, கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பதும் நேர்மறை ஆற்றலை வரவழைக்கும். இதனால் எதிர்மறை ஆற்றல் நீங்கி, செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

    வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் துளசி செடியருகே தீபம் ஏற்றினால், லட்சுமியின் அருள் கிடைக்கும். துளசி செடி புனிதமானது மற்றும் லட்சுமி தேவி வசிக்கும் இடமாக கருதப்படுகிறது. துளசி செடியின் நறுமணம் சுற்றுப்புறத்தை புத்துணர்ச்சியாக வைத்து, எதிர்மறை ஆற்றலை தடுக்கும். வீட்டு வாசலில் துளசி செடியை வளர்ப்பது செல்வத்தை பெருக்கும்.

  • Money Money Money

    இந்த உலகில் யாருக்குத்தான் பணம் தேவையில்லை. பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிழைக்கும் என்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் பேராசை இல்லை. இருந்தாலும் என்ன செய்தாலும் கையில் பணம் மிஞ்சவில்லை. ஓடி ஓடி உழைத்தாலும் தேடிய பணம் சிக்கவில்லை. எதிர்பாராமல் ஏகப்பட்ட பணம் கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லாருக்குமே இருக்கிறது.

    அப்படிப்பட்டவர்களுக்கு பணம் வந்து குவிவதற்கு ஒரு மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தைச் சொன்னால் நீண்டநாள் வராமல் உள்ள பணம்கூட எளிதில் வந்துவிட வாய்ப்புள்ளது.

    செவ்வாய் வெறும்வாய் என்ற சொலவடை உண்டு. ஆனால் இந்த சூட்சும மந்திரத்தை செவ்வாய்க்கிழமை மதியம் 3.30- 4.30க்குள் ஜெபிக்க வேண்டும். அதுவும் வடக்கு திசைப்பக்கமாக அமர்ந்து சொல்ல வேண்டும்.

    மந்திரம்:

    ஓம் ரீங் வசி வசி
    தனம் பணம் தினம் தினம்
    இதை ஜெபிக்கும்போது நேரே நிமிர்ந்து அமர்ந்திருக்க வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு மனதார ஆழ்ந்து நம்பிக்கையுடன் ஜெபிக்க வேண்டும்.

    நிச்சயமாக உங்களை வந்தடைய வேண்டிய பணம் வரும். செல்வம் கைகூடும். உங்கள் காரியம் சித்தியடைய வேண்டும் என்றால் இந்த மந்திரத்தை ஓதிய பிறகு பெரிய நெல்லிக்காய் ஒன்றை கடித்துச் சாப்பிடவேண்டும். அதன் சுவையில் அறுசுவையும் கலந்திருப்பதால் அனைத்து வளங்களும் உங்களை வந்தடையும்.