Tag: Midhuna

  • Midhuna rasi June month Rasipalan

    மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

    கிரகநிலை:
    ராசியில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு – லாப ஸ்தானத்தில் புத, ராஹூ, சுக்ரன்  – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் அயன சயன் போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும்  மிதுன ராசியினரே நீங்கள் எந்த சூழ்நிலையிலும் விவேகத்தை கை விடாதவர்.  இந்த மாதம் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 

    தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும்.

    குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். 

    பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். 

    கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். 

    அரசியல் துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

    திருவாதிரை:
    இந்த மாதம் உயர் பதவிகளும் கிடைக்க கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
    இந்த மாதம் எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

    பரிகாரம்:  புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
    சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 17, 18
    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 11, 12

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Midhuna rasikku 2022 rasipalan

    மிதுனம் (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

    கிரகநிலை:
    ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    மிதுன ராசி அன்பர்களே  இந்த வருடம் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.  பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். 

    குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த வருடம் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். தொழிலுக்காக கேட்ட இடத்தில் கடன் வசதிகள் கிடைக்கும். அதை வைத்து தொழில் சார்ந்த பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
    கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 
    அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. 

    மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த வருடம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். மாணவர்கள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். 

    திருவாதிரை:
    இந்த வருடம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது  கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு  நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். 

    புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம்  அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.

    பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் – சுக்ரன் –  சனி
    எண்கள்: 3, 6, 7
    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகோவிந்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்
    செல்ல வேண்டிய ஸ்தலம்: பெருமாள் கோவில்களுக்குச் சென்று வரவும். 
    மலர் பரிகாரம்: துளசியை பெருமாளுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Midhuna Rasi pilava andu rasi palan

    (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

    மிதுன  ராசி அன்பர்களே இந்த ஆண்டு வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், 

    பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

    அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.

    கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். 

    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

    மிருகசீரிஷம்:
    இந்த ஆண்டு பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்  உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

    திருவாதிரை:
    இந்த ஆண்டு உங்கள் பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும்.. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். 

    புனர்பூசம்:
    இந்த ஆண்டு தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

    பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்; 
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்