Tag: Mesham

  • April month predictions – Mesham

    (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

    கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று  வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும்.

    தொழில் ஸ்தானாதிபதி சனியின் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது.

    பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

    அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

    அஸ்வினி:
    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. 

    பரணி:
    இந்த மாதம் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். நண்பர்கள் திடீர் டென்ஷனை உண்டாக்குவார்கள்.  உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக  வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது

    கார்த்திகை 1ம் பாதம்:
    இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.    

    பரிகாரம்:  முருகனுக்கு அரளிப்பூ சாற்றி அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
    அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 6
    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Mobile : +91 7845119542

     

  • March Rasi Palan – Mesham

    எந்த காரியங்களிலும் நேர்மையும் உண்மையும் கொண்ட மேஷ ராசி நண்பர்களே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள்.  நேரத்தின் அருமையை உணர்ந்தவர். இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பஞ்சமாதிபதி சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும்.  செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

    தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

    குடும்பாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். 

    பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

    கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். 

    அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.

    மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம்  காணப்படும்.
    பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • Raagu Kedhu Peyarchi – Mesham

    எடுக்கும் காரியங்களை வேகத்தோடும், விவேகத்தோடும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் – ராகு சுக ஸ்தானத்திலும் – சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் – கேது தொழில் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் தைரியவீர்ய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் பாக்கியஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் – மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

    குடும்ப பொருளாதாரம்:
    குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் சுபச் செலவுகள் உண்டாகும். சொந்த பூமி, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை சீராகும். 

    கொடுக்கல்-வாங்கல்:
    பொருளாதார நிலை சீராக இருப்பது உங்களின் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலைமையில் இருப்பதைக் காட்டுகிறது. பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில்  துரோகம் செய்யத் துணிவார்கள். உங்களுக்கு உள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.

    தொழில், வியாபாரம்
    தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கிக் கடன்கள் குறையும்.

    உத்தியோகம்:
    செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும்.  கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். 

    அரசியல்:
    பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

    விவசாயிகள்:
    பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் கிட்டும்.

    பெண்கள்:
    உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் – உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.

    கலைஞர்கள்:
    திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.

    மாணவ – மாணவியர்:
    கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

    உடல் ஆரோக்யம்:
    ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார்கள்.  தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

    அஸ்வினி:
    நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். அவசரமாக எதையும் செய்ய தோன்றும்.  துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால்  வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு  செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.  

    பரணி:
    வாடிக்கையாளர்களிடம்  சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில்  வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள்  எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.  குடும்பத்தில் இருப்பவர்களுடன்  தன்மையாக பேசுவது நல்லது. 

    கார்த்திகை 1ம் பாதம்
    கணவன்,  மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை.  பிள்ளைகளுக்காக செய்யும்  வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  

    பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். 
    மலர் பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Feb month predictions – Mesham

    மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

    இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

    வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

    உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.

    கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

    பரிகாரம்:

    முருகனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

    Mobile/WhatsApp: +91 7845119542

  • 2019 Rasi Palan – Mesham

    (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
    செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே
    கிரகநிலை:
    குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் – ராகு சுக ஸ்தானத்திலும் – சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் – கேது தொழில் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் தைரியவீர்ய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் பாக்கியஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    இந்த வருடத்தில் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். 
    குடும்பம்:
    குடும்பத்தில் நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களின் தன்மையை உணர்ந்து பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். நட்பில் புதியவர்களின் தொடர்பு ஏற்படும்.
    பொருளாதாரம்:
    வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். இந்த ஆண்டு சனி பகவான் உங்களின் பாக்கிய ஸ்தானத்தில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். 
    ஆரோக்கியம்:
    உடல் ஆரோக்யம் சிறப்படையும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகளிலிருந்து தப்புவீர்கள். மனம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் விலகும். மாற்று மருத்துவத்தின் மூலம் அனுக்கூலம் பெறுவீர்கள்.
    பெண்கள்:
    பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் ஆண்டாக இது அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. 
    உத்தியோகஸ்தர்கள்:
    அரசுத் துறைகளில் பணி செய்வோருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். 
    வியாபாரிகள்:
    வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். 
    அரசியல்வாதிகள்:
    அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும். 
    கலைத்துறையினர்:
    பொறுப்புகள் கூடும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். 
    மாணவமணிகள்:
    மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள். 
    அசுபதி:
    இந்த ஆண்டு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.  திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். 
    பரணி:
    இந்த ஆண்டு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். 
    கார்த்திகை 1:
    இந்த ஆண்டு பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள்  செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். 

    பரிகாரம் : அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: “சுப்பிரமணிய புஜங்கம்” பாராயணம் செய்யவும்.
    மலர் பரிகாரம்: “செவ்வரளி மலரை” அம்மனுக்கு படைத்துவர துன்பங்கள் யாவும் நீங்கும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
    அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு 
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

    – ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

    போன் – 7845119542