Tag: Meenam

  • Meenam December Monthly Prediction – Sakthi Online

    மீனம்:

    கிரகநிலை:

    ராசியில் குரு  – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சனி – விரைய ஸ்தானத்தில் சந்திரன் – என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் மீனராசியினரே, இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

    கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

    பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

    மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

    பூரட்டாதி 4ம் பாதம்:

    இந்த மாதம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

    ரேவதி:

    இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

    பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Meenam Feb month predictions

    மீன ராசியினரே, நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த மாதம்   உடல் சோர்வு உண்டாகலாம்.  வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமை யாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரி யங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார் கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

    கலைத்துறையினர் சூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் போது சக கலைஞர்களுடன் மோதல் போக்கு ஏற்பட உள்ளது. அத்தருணத்தில் கோபத்தை கட்டுப் படுத்தி கொள்ளுங்கள் மற்றபடி  வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்காது.

    அரசியல் துறையினருக்கு கட்சியில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் மேலிடத்தின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தொண்டர்களை அனுசரித்து நடந்து  கொள்ளுங்கள்.
    பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.
    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

    பூரட்டாதி 4-ம் பாதம்:
    இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

    உத்திரட்டாதி:
    இந்த மாதம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். இதுவரை இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

    ரேவதி:
    இந்த மாதம் பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். 

    பரிகாரம்: சித்தர் கோவில்களுக்குச் சென்று வர மனக்குறைகள் அகலும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
    அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Meenam 2020 predictions

    எப்போதும் இன்முகத்துடனும், இனிய பேச்சுடனும் இருக்கும் மீன ராசி அன்பர்களே நீங்கள் எல்லோரிடமும் பழகி எல்லோரையும் உங்கள் பால் ஈர்த்துக் கொள்வீர்கள். இந்த ஆண்டில் நண்பர்கள் ஓடி  வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து  விட்டு நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள். ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். 

    மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி  செய்வீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பயணங்கள் செய்து அதன்மூலம் நன்மைகள் பெறுவீர்கள்.  எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராக சிந்திக்கத் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திரப் பேறு, வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். பணப்புழக்கம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். பணிகளில் அக்கறையுடனும், கவனமுடனும் செயல்படுவது அவசியம்.

    வியாபாரிகளுக்கு:
    வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். போடியாளர்களால் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் ஈர்க்க முடியாது. அதேபோல் நீங்களும் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான கொள்முதல் செய்யும் போது கவனமுடன் இருப்பது அவசியம். கடன் தொகையை நிலுவையில் விடுவது சிரமத்தை ஏற்படுத்தும். கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு:
    புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வண்டி, வாகன வசதிகள் அமையக்கூடும். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கப்பெறுவீர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். நேரத்திற்கு வேலைகளை முடித்துக்கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை ஏற்படுத்துவதைத் தவரிக்கவும். 

    மாணவர்களுக்கு:
    படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அதன்மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர் மட்டுமின்றி  அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்பும் படிக்கும் போதே அமையும். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். 

    அரசியல்வாதிகளுக்கு:
    பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியடைய வைப்பீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் உங்களில் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

    பெண்களுக்கு:
    குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவரப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். சிலருக்கு திடீர் திருமண வாய்ப்பும் கிடைக்கப் பெறும். புத்திரப்பேறும் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுக சேமிப்புகள் தக்க நேரத்தில் உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. 

    நட்சத்திரப் பலனகள்:

    பூரட்டாதி 4-ம் பாதம்:
    இந்த ஆண்டு, உத்தியோகஸ்தர்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடையின்றி நடந்து முடியும். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். மனைவி வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து வகையில் சிலர் எதிர்பாராத தனலாபத்தைப் பெறுவீர்கள்.

    உத்திரட்டாதி:
    இந்த ஆண்டு, சிறு தடங்கலுக்குப் பின் காரிய வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்து விடும். கோபத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் கவனம் தேவை.

    ரேவதி:
    இந்த ஆண்டு, நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர் வருகை, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பணவரவில் தடை இருக்காது. 

    பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை. 

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்

    + பணவரவு மற்றும் வெளிநாடு செல்லுதல் : – உங்கள் மீது புறம் கூறுதல்
     

  • Meenam December month predictions

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
    மீன ராசியினரே இந்த மாதம் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
    தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். ராஜாங்க ரீதியாக பயணம் செல்ல வேண்டி வரலாம். 

    குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். பல வழிகளிலிருந்து பணம் வரும்.    

    பெண்களுக்கு எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. 

    கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். 

    அரசியல் துறையினருக்கு இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். நிலுவை தொகை வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். 

    மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். 

    பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டு வர காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

  • October month predictions – Meenam

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். கோபம் அகலும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். வெகுகாலம் தீராத பிரச்னைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வை தரும். 

    ராசிநாதனும் தொழில் ஸ்தானதிபதியுமான குரு ராசியைப் பார்க்கிறார். தனபாக்கியாதிபதி செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

    குடும்பாதிபதி செவ்வாய் சூரியனுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

    பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

    அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். 

    மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

    பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • 2019 September month predictions – Meenam

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
    உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக உடைய மீன ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.

    கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும்.  ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். 

    தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்  கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக  வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். லாபம்  கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில்  மிகவும் வேகம் காட்டுவீர்கள்.

     தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக் கிடையே  மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.  உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  

    பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. 

    கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.  உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்தகாரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.

    மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். 

    பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது.
    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4
    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • August Month predictions – Meenam

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
    மீன ராசியினரே இந்த மாதம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். ராசியாதிபதி குரு ராசியைப் பார்ப்பதால் பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.

    குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும். 

    பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.

    கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.

    அரசியல்துறையினருக்கு பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். 

    மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

    பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • April month predictions – Meenam

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    எதை செய்தாலும் தன்னம்பிக்கையை கொண்டு சொந்த முயற்சியிலேயே செய்து வெற்றி பெறும் மீன ராசியினரே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரம் ராசியில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

    குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன்  அனுசரித்து செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

    பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. 

    அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. 

    மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

    பூரட்டாதி 4ம் பாதம்:
    இந்த மாதம் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.

    உத்திரட்டாதி:
    இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

    ரேவதி:
    இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

    பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
    அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Mobile : +91 7845119542

  • March month predictions – Meenam

    எவ்வளவு தோல்விகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் அத்தனையையும் முறியடித்து வாழ்வில் வெற்றி பெறும் ஆற்றல் உடைய மீன ராசி அன்பர்களே இந்த மாதம் எதிலும் நன்மையே நடக்கும். எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

    தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

    குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.
    பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். 

    கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

    மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.
    பரிகாரம்: வியாழக்கிழமை அன்று வீரபத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • Raagu – Kedhu Peyarchi Palangal Meenam

    எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் பாக்கிய ஸ்தானத்த்திலும் – ராகு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் – சனி பகவான் தொழில்  ஸ்தானத்திலும் – கேது லாப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கும் – கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கும்  மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியின்  மூலம் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண் வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த எதிர்ப்பையும் எதிர் கொண்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும்.

    பொருளாதார நிலை:

        குடும்ப ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் – உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அசையும் – அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

    கொடுக்கல் – வாங்கல்:

        பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும்.

    தொழில் வியாபாரம்:

        தொழில் வியாபாரம் சுமாராகத்தன் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

    உத்தியோகம்:

        பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.

    அரசியல்:

        மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

    விவசாயிகள்:

        பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலன் குறைவாக இருக்கும். நீர்வரத்து குறைவதால் பயிரிட அதிக செலவு ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளிலும் தாமத நிலை ஏற்படும்.

    பெண்கள்:

        உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் – மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும்.

    கலைஞர்கள்:

        எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

    மாணவ – மாணவியர்:

        கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பொழுது போக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும்.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்களும் நிம்மதிக் குறைவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்சன் அதிகரிக்கும்.

    பூரட்டாதி 4ம் பாதம்:
    வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம்  ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்   கூடுதல் லாபம் பெற முடியும். 

    உத்திரட்டாதி:
    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம்  ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 

    ரேவதி:
    அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது.  மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

    பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
    மலர் பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு தாமரை மலரை சமர்ப்பிக்கவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6