Tag: Mayam perumal

  • Mayam perumal koil kumbabishegam

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எரதிம்மக்காள் பட்டி அருள்மிகு மாயம் பெருமாள்சாமி கோவில் கும்பாபிசேக விழா நடைபெற்றது. 

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் எரதிம்மக்காள் பட்டியில் அமைந்துள்ள பாதகட்டி பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி, ஸ்ரீ வீருசின்னம்மாள் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிசேகம் சிறப்பாக நடை பெற்றது. விழாவை முன்னிட்டு இரண்டு கால யாகசாலை பூஜை நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி,கோமாதா பூஜையுடன் பூர்ணாகுதி நடைபெற்றது. 

    இதனையடுத்து பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, விமான கலசத்திற்கு பூஜை செய்து குடமுழுக்கு நடைபெற்றது.பின்னர் பக்தர்கள் மேல்  புனித நீர் தெளிக்கப்பட்டது . 

    பின்னர் மூலவர்பெருமாள் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனமும் , சிறப்பு அபிசேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை  பாத கட்டி பங்காளிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர். இவ்விழாவில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.