Tag: March 2020

  • Midhunam March 2020 palangal

     (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
    மிதுன ராசி அன்பர்களே
    இந்த மாதம் ஆரோக்கியம் சீராகவும், ஆயுள் பலம் கூடுவதற்கான கிரக நிலையும் அமையப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பிறருக்கு சொல்லும் நல் வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். தந்தை பற்றிய எண்ணமும் அவர்தம் நற்செயல்கலும் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களை நல்வழிப்படுத்தும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும்.

    குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் பெரிய அளவில் பாதிப்பு இராது. உங்கள் மனதில் எதிரி என்ற நிலையில் இடம் பெற்றவர் செய்ய நினைத்த கெடுதல்கள் தூள் தூளாகும். வாழ்க்கைத் துணையின் பேச்சால் அவ்வப்போது படபடப்பு போன்ற விஷயங்கள் வந்து போகும். பிள்ளைகளால் இருந்து வந்த மனக்கசப்பு மாறி நிம்மதி நிலை உண்டாகும். 

    உத்தியோகஸ்தர்கள் மனைவி வழியில் சில ஆதாயங்களை பெற முடியும். காசோலை சம்மந்தமான விசயங்களில் கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்து போவது சிறந்தது. யாரையும் நம்பி படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.

    தொழிலதிபர்கள் வேலையில் அடுத்தவர்களை நம்பாது தானே காரியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். வங்கிகளிலிடமிருந்து கடனுதவி பெற்று தொழில் சம்மந்தமான கடன்கள் அடையும். பணியாளர்களுக்கு தகுந்த ஊதியத்தை அளித்து நற்பெயரை சம்பாதிப்பீர்கள்.உடல் நலனிலும் அக்கறை தேவை. 

    பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கும் பெண்கள் உறவினர்களின் சந்தோஷ வருகையால் உற்சாகமாக செயல்படுவார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியில் நல்ல கவனம் செலுத்தி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். 
    கலைஞர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.  வெற்றி வாய்ப்புகள் கடனிலிருந்து விடுபட வாய்ப்பு அனைத்தும் கிட்டும். நற்காரியங்கள் அனைத்துக்கும் அனுபவ சாலிகளின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள். 
    அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை  மூத்த அரசியல் வாதிகளின் ஆலோசனைப்படி எடுப்பது உத்தமம். சங்கடங்கள் வந்து விலகும். நேர்மையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். சொத்து, பத்திர விவகாரங்களில் படித்து பார்த்து பின் கையெழுத்திடவும். 

    மாணவர்கள் தங்கள் படிப்பில் சீரான கவனம் செலுத்தி தேர்ச்சி  பெற்று ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவார்கள். தந்தை மகன் உறவு நிலைகளில் நல்ல முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது சில பிரச்சனைகளிலிருந்து உங்களை காப்பாற்றும்.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். 

    திருவாதிரை:
    இந்த மாதம்   பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது  நல்லது. அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. 

    புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

    பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும்.  பொருளாதாரம் உயரும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21
    அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Rishabam March 2020 palangal

    (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
    ரிஷப ராசி அன்பர்களே, 
    இந்த மாதம் ஒளி நிறைந்த சிந்தனையும், தேஜஸ் நிறைந்த உடல் அமைப்பும் உண்டாகும். புகழைப் பெறுவதற்கு எந்த செலவையும் செய்ய உங்கள் மனம் துணிந்து விடும். புத்திரப்பேறு எதிர்பார்ப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். தெய்வ அருளைப் பூரணமாக பெற்று சுக வாழ்வு பெறுவீர்கள். பெண்களிடம் பண கொடுக்கல், வாங்கல் விசயங்களில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

    குடும்பத்தில் கணவன், மனைவி குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆன்மிகம் தொடர்பான வழிபாடுகளில் புதிய ஈர்ப்பும் உண்டாகும். தெய்வ அருளால் ஆரோக்கிய உடலும், ஆயுள் பலமும் இனிதே உருவாகும். தந்தை வழி சொத்துகள் பல்கி பெருகிட புதிய வழிமுறைகள் உருவாக்கித் தரும். உணவு பழக்க வழக்கங்களில் தகுந்த கட்டுப்பாடு கடைப்பிடித்தல் நலம் தரும்.

    உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பார்கள். மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உடன்பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடப்பது உத்தமம். காலம் தாழ்த்தாமல் உணவு அருந்துங்கள். உடல் நலம் சீராகும்.

    தொழிலதிபர்கள் வெகு தூரத்திலிருந்து வரும் நபர்களால் தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தகுந்த தொழிற் பயிற்சிகளை கற்றுக் கொண்டால் வரும் காலங்களில் சிறப்புகள் பல பெறலாம். அண்ணன், அக்கா குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். 
    நல்ல நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    பெண்கள் அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் ஏற்படும் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்காமல் தத்தளிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், உறவினர்களை நன்கு உபசரிப்பதின் காரணமாக குடும்ப பாச புத்தகங்களை வலுப்பெற செய்வார்கள். நகையணிந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும்.

    கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டுப் பயணங்கள் சிறப்பைத் தரலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.
    அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில்  சாதகமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.
    மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும் சில கேளிக்கை விஷயங்களை மனம் நாடுவதால் அவப்பெயர் உண்டாகலாம். முன்யோசனையுடன் நடந்து நற்பெயர் பெறலாம்.  

    கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம்  சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

    ரோகிணி:
    இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும்.  நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

    மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

    இந்த மாதம்  தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை  இருக்கும்.  எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். 

    பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், புதன்
    சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
    அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12,
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Mesham March 2020 palangal

    (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
    மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களின் கல்வியறிவு பயனுள்ள விஷயத்தில் பிரகாசமாக ஒளிவிட்டு உங்களின் வாழ்க்கை முறையில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும். நற்காரியங்களை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரம் உறவினர்கள் வகையிலிருந்தும், செய்தொழில் லாபத்திலிருந்தும் நிறைவாக கிடைக்கும். கால தாமதமான செயல்திட்டங்களை புதிய உத்வேகத்துடன் செயல் படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள்.
    குடும்பத்தில் தாய்மாமன் வகை உறவினர்களுடன் மனக் கசப்பு வராத வண்ணம் நல்முறையில் பழக வேண்டும். தாயின் அன்பைப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்வு உண்டாகும். குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்று காலம் கணிந்துள்ளது. நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள். கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். முடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். கவனமுடன் செயல்பட்டு விரயத்தை தவிர்க்கலாம்.

    தொழிலதிபர்கள் தொழில் வகையில் கூடுதல் வருமானம் கிடைக்க உங்கள் சகோதரர்கள் தகுந்த உதவி புரிவார்கள். நண்பர்களும், ஆன்மீக அருள் பெற்றவர்களும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் பெறும் வகையிலான உபாயங்களை சொல்லித் தருவார்கள். கடன், வழக்கு, எதிரிகள் ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது.

    பெண்கள் குடும்ப நிர்வாகப் பொறுப்பிலுள்ள பெண்கள் நிறைய நற்காரியங்களில் ஈடுபட்டு கணவரிடமும், பிள்ளைகளிடமும் நல் அன்பை பெறுவீர்கள். பழைய ஆபரணங்களை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் முழுமனதுடன் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
    கலைஞர்கள் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் ஆலோசனைப் படி நடந்து வெற்றியைப் பெறலாம். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

    அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.

    மாணவர்கள் முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும்.  

    அஸ்வினி:
    இந்த மாதம்  குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

    பரணி:
    இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

    கார்த்திகை 1ம் பாதம்:
    இந்த மாதம்   வீண் செலவுகள் உண்டாகும்.  எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். 

    பரிகாரம்:  துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய  தடை அகலும்.

    அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்
    சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
    அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்