Tag: March 2020 palangal

  • Maharam March 2020 palangal

    (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
    மகர ராசி அன்பர்களே 
    இந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளால் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும். இல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும். சூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள். 

    குடும்பத்தில் வெகு காலமாக ஆண்பிள்ளை புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ள தம்பதியருக்கு குல தெய்வ அருளால் அனுகூல பலன் கிடைக்கும். பூமி, மனை, விவசாய நிலம் போன்றவைகளில் தகுந்த கவனம் செலுத்தி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். உடன் பிறந்தோரிடம் அனுசரனையாக இருப்பது எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் வரவழைக்காது. 

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்கிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள். 

    தொழிலதிபர்கள் உங்கள் தொழிலிலும், செயல்பாட்டிலும் பிறரது குறுக்கீடு இல்லாமல் செயல்பட்டு தகுந்த வெற்றி பெறுவீர்கள். தந்தையின் பேச்சுக்கு ஏற்றபடி செல்வதும், மூத்த அனுபவசாலிகள் பேச்சுக்கு மரியாதை தருவதும் உங்கள் வெற்றிக்கு அடிகோலாய் அமையும். உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இப்பொழுது மிக அவசியம். 

    பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெ?ண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.

    கலைஞர்கள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து உடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால கனவுகளை நிறை வேற்ற துணை இருப்பார்கள்.

    அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். புதிய மாற்றங்களை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திப் போடுவது நிம்மதி அளிக்கும். பிரிந்து போனவர்கள் மறுபடியும் உங்களைச் சந்திக்க நேரலாம். 

    மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு. 

    உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம்  எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும். குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன்  மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது. 

    திருவோணம்:
    இந்த மாதம்   கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

    அவிட்டம் 1,2 பாதங்கள்:
    இந்த மாதம்   எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும்.  கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும்.

    பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
    அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Viruchigam March 2020 palangal

    (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
    விருச்சிக ராசி அன்பர்களே
    இந்த மாதம் உங்களுடைய பொது நலப்பணிகள் மேலோங்கி உங்களுக்கு உயரிய அந்தஸ்து கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கப் பெற்று சமூகத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல ஞானம் உண்டாகும்.  

    குடும்பத்தில் தாயின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது நற்பலனைத் தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாய கிடைக்கும். புத்திரர்கள் தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று குடும்பத்திற்கு நற்பெயர் பெற்றுத் தருவார்கள். சகோதரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகளை உருவாக்க எதிரித்தனம் செய்வோர் தந்திரமாக செயல்படுவார்கள்.

    உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுப்  பயணம் சென்று திரும்பும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். அதனால் ஆதாயமே. நல்ல அனுபவங்களும் ஏற்பட்டு ஆதாய வரவினங்கள் தகுந்த முறையில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கைக்கு பாத்திடமாவீர்கள். புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும். 

    தொழிலதிபர்கள் சுக சவுகரிய வாழ்க்கையை பெறும் வகையில் தொழில் அமையும். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பெற்றோர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வீட்டில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தந்தையின் தொழில் புரிபவர்கள் அவரைப்பின்பற்றி புதிய மிடுக்கான தோற்றம் உண்டாகும்.

    பெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. உங்களின் ஆலோசனை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். கணவனின் அன்பும், ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும்.  

    கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுய கௌரவம் காக்கப்படும்.

    அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள். 

    மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது. நண்பர்களால் சிறு இடையூறு தரும் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நண்பர்களுடான பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு வைப்பது நலம் தரும். சாலைகளில் வாகனங்க்ளில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம்.

    விசாகம் 4ம் பாதம்:
    இந்த மாதம்   உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.  பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும்.

    அனுஷம்:
    இந்த மாதம் தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

    கேட்டை:
    இந்த மாதம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

    பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள்  நீங்கும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
    அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Thulam March 2020 palangal

     (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
    துலாம் ராசி அன்பர்களே,
    இந்த மாதம் கடந்த காலத்தில் கிடைத்திராத சுகமான அனுபவங்கள் கிரக அனுகூலத்தால் உங்கள் வாழ்வில் நிகழும். உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும். புகழ்ச்சிக்கு மயங்காது எதார்த்த நிலையை உணர்ந்து வாழ வேண்டும்.வீடு, மனை, வாகன, தாயின் உடல்நலம் ஆகியவற்றில் அனுகூலமான நற்பலன்கள் நடந்து உங்கள் மனதை மகிழ்வு பெறச் செய்யும்.  

    குடும்பத்தில் குடும்ப உறவினர், மற்றும் வெளி விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் கணவன், மனைவி பேச்சுகளில் தலை தூக்கும். வெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும்.

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். புத்திசாலித்தனமாகவே காயை நகர்த்துவீர்கள். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். 

    தொழிலதிபர்கள் தொழில் சார்ந்த வகையில் உள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய யுக்திகளை செயல்படுத்தி பலமான வெற்றிகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் அனுகூலமான அனுபவங்களும், வெற்றியும் உண்டாகும்.  தொழிலாளர்களை நன்மதிப்புடன் நடத்துங்கள். உங்களுக்கு உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.

    பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும். 

    கலைஞர்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும்.

    அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால்  ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

    மாணவர்கள் தங்கள் படிப்பில் அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவார்கள். நண்பர்க்ள் உதவினாலும் படிப்பு சிறப்பு பெறும். தந்தை, மகன் இடையே நல்ல நட்புறவு இருக்கும் வகையில் நடந்து நற்பெயர் பெறுவீர்கள். வாகன, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

    சித்திரை 3, 4 பாதங்கள்: 
    இந்த மாதம் செயல் திறமை அதிகரிக்கும்.போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். 

    சுவாதி:
    இந்த மாதம்  மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

    விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
    இந்த மாதம்   ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். 

    பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம்  சேரும். செல்வாக்கு உயரும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்
    சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30
    அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Kanni – March 2020 palangal

    (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
    கன்னி ராசி அன்பர்களே
    இந்த மாதம் மனதில் ஞானம் நிறைந்த புதிய சிந்தனைகளும், எந்த செயலையும் மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ளும் புதிய மனோபாவமும் உண்டாகும். கடன், வழக்கு போன்ற வகைகளில் பதட்டத்திற்கு இடம் தராமல் நிதான போக்கை கடைப்பிடித்து சிரமங்கள் வராமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலம் சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

    குடும்பத்தில் தாயின் உடல் நலத்தில் கவனமும், வீட்டு பாதுகாப்பில் தகுந்த கவனமும் செலுத்துவது நன்மை தரும். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு பத்திரங்களை நம்பிக்கையில்லாத நபர்களிடம் கொடுப்பது சிரமம் தரும். கவனம் தேவை. சமூகத்தில் தகுந்த புகழும், தந்தை வழி, தாய்மாமன் வகை உறவினர்களிடமும் விட்டுப் போன உறவுகளை திரும்பவும் தொடருவீர்கள். 

    உத்தியோகஸ்தர்கள் வெளி நாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அனுகூலமான நிலையில் கிரகம் அமைந்திருப்பதால் இடைவிடாத முயற்சிகள் மூலம் நற்பலனைத் தரலாம். மேலதிகாரிகள் உங்களை மனதில் வைத்து தான் அடுத்த கட்ட நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. 

    தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்வதை இப்பொழுது ஒத்திப் போடுவது சிறந்தது. ஆடம்பர எண்ண்ங்களை ஒதுக்கி விட்டு, கிடைத்த லாபத்தை பயன்பாடு உள்ள வகையில் பயன்படுத்துங்கள். தந்தையின் வழி தொழில் செய்பவர்கள் தந்தையின் நீண்ட கால திட்டம் ஒன்றை உங்கள் மூலமாக நிறை வேற்றும் சிந்தனை தந்தையின் மனதில் அதிகரிக்கும்.

    பெண்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தன்மையை உணர்ந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணச் சேர்க்கையிலும் அனுகூல பலன்கள் உண்டு. வேலைப்பளு காரணமாக உணவு உண்ண நேரமில்லாமல் வயிற்றுத் தொந்தரவு ஏற்படலாம். அலர்ஜி போன்ற உபாதைகளும் வரலாம்.

    கலைஞர்கள் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். மற்றவர்கள் பாராட்டுக்கு மயங்கி எந்தவொரு நிகழ்விலும் நிதானத்தை இழக்க வேண்டாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கிய முடிவுகளை சற்று யோசித்து நிதானத்துடன் எடுக்க ஆபத்து அண்டாது.

    அரசயில்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.

    மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்துவதால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தந்தை, மகன் உறவு நிலைகளில் நம்பிக்கை குறையாமல் நல்ல முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் தகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்.

    உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.   தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

    அஸ்தம்:
    இந்த மாதம்   குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.

    சித்திரை 1, 2, பாதங்கள்:
    இந்த மாதம்   உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  

    பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 27, 28, 
    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Simmam March 2020 palangal

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    சிம்ம ராசி அன்பர்களே,
    இந்த மாதம் முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுவது நல்ல நிலையை உங்களுக்கு அளிக்கும். எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும். புகழும், தைரியமும் ஏற்பட்டு பல்கி பெருகி சமூகத்தில் உயர்வான அந்தஸ்தை பெறுவீர்கள். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகி புதிய படிப்பினைகளை உருவாக்கித் தரும்.   

    குடும்பத்தில் புத்திரர்கள் இணக்கமான சூழ்நிலையிலும் குல தெய்வ அருளும் பரிபூரணமாக கிடைக்கும். கடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி  தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.   

    உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டி பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

    தொழிலதிபர்கள் தொழிலில் ஸ்திரமான நிலையும், அபிவிருத்தி பணிகளும் நடந்து மனநிகழ்வை உண்டாக்கும். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் மேலோங்கும். புதிய தொழிலுக்கு மூலதனம் வேண்டி பிரயாசை ஏற்படும். 

    பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் வற்புறுத்தலின் பேரில் ஆபரணம் மற்றும் ஆடம்பர பொருட்களை தங்களுக்கென வாங்குவார்கள். அலுவலகப் பணியில் தொடர்புடைய வேலைகளை வீட்டிலும் வைத்து சரி பார்ப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் தகுந்த உதவிகளைச் செய்வார்கள். 

    கலைஞர்கள் சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும், அன்பும் உங்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள்  கிடைக்கப் பெறலாம்.

    அரசியல்வாதிகள் மூத்த அரசியல் வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள். 

    மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். பொழுது போக்கிற்காக எந்த ஒரு ஆபத்தான விஷயங்களிலும் தனியாக ஈடுபட வேண்டாம். வாகனங்களை உபயோகப் படுத்தும் போது மிக கவனம் தேவை.

    மகம்:
    இந்த மாதம் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    பூரம்:
    இந்த மாதம்  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த மாதம்   வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். மனத்துணிச்சல் உண்டாகும்.  அதனால் எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
    அதிர்ஷ்டகிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய்
    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26
    அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
     

  • Kadaga Rasiku March 2020 palangal

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
    கடக ராசி அன்பர்களே 
    இந்த மாதம் மனசஞ்சலம் நீங்கி அனுகூலம் தரும் வகையில் அனைத்து விசயங்களும் இனிதே நடைபெறும். நீங்கள் பேசும் வார்த்தைகள் பிறரை கவர்ந்து உங்கள் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வழிவகை பிறக்கும். உங்களுக்கு நல்லவர்கள் மற்றும் மகானளின் தரிசனம் கிடைக்கச் செய்து புகழ் பெற்றவர்கள் வரிசையில் உங்களையும் இடம்பெறச் செய்வார். 

    குடும்பத்தில் தாயின் அன்பும், வீடு, மனையில் பெண் தெய்வ சக்திகளின் அனுகூல பிரவேசமும் நிகழ்ந்து புதிய உற்சாகம் பெறுவீர்கள். விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் பங்காளிகள் மற்றும் பக்கத்து நிலக்காரர்களால் இடைஞ்சல் அனுபவிக்கும் மார்க்கம் உண்டு. நிலத்தின் அருகிலுள்ள கிராம தேவதையை வழிபட்டு சிரமங்களை குறைக்கலாம். 

    உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு மனைவியின் பெயரால் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நன்மையே உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்து மனம் மகிழ்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை பெறுவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் ஆவண விசயங்களில் கவனத்துடன் இருப்பது அவசியம். 
    தொழிலதிபர்கள் தொழில் வளம் பெற புதிய அனுகூலமான செய்திகள் தேடி வரும். சுய தொழில் புரிவோர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தேவையான அளவு ஆதாயத்தை சம்பாதிக்கலாம். பொருளாதார அபிவிருத்தி உண்டு. சிறு சிறு தடங்கள்களால் மனச்சோர்வு ஏற்பட்டாலும் வெற்றி கிட்டும் பொழுது அது சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.

    பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் தேவையான பொருட்கள் சமயத்தில் கிடைக்காமல் பதட்டத்திற்கு ஆளாவார்கள். பொருள்கள் வைத்த இடம் பற்றிய குறிப்புகள் இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் வாழ்க்கை முறையை நன்கு நடத்தலாம். வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.  தகுந்த நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். 
    கலைஞர்கள் முக்கிய வாய்ப்புகளில் நல்ல முடிவு கிட்டும். மக்களின் நன்மதிப்பை பெற்று புகழின் எல்லைக்கு சென்று மகிழ்ச்சியில் திளைக்கலாம். குருவுக்கும், சிஷ்யருக்குமான உறவு நல்முறையில் இருக்கும். நண்பர்கள் மத்தியில் தேவையில்லாத பேச்சுகளை குறைத்தால் பிரச்சனைகள் வராமல் காத்துக் கொள்ளலாம்.நற்செய்திகள் தேடிவரும்.

    அரசியல்வாதிகள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு சில சர்ச்சைக்குரிய விசயங்கள் பற்றி பேசி தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் ஆகையால் எக்காரியத்திலும் நிதானம் தேவை. புரியாத விசயங்களை சிறிது நாட்கள் ஒத்திப் போடுவது நன்மையைத் தரும்.  
    மாணவர்கள் தங்கள் படிப்பில் இலகுவான பயிற்சி முறைகளை அறிந்து கொண்டு சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதால் புதிய சிரமங்கள் உண்டாகலாம். கவனமுடன் செயல்பட்டு பிரச்சினைகளை தவிர்க்கலாம். 

    புனர் பூசம் 4ம் பாதம்:
    இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

    பூசம்:
    இந்த மாதம்  நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும்.

    ஆயில்யம்:
    இந்த மாதம்  மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். 

    பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
    அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்