Tag: #MahaShivaratri #Shivaratri #MahaShivaratri2025 #LordShiva #ShivaBlessings #ShivPuja #OmNamahShivaya #ShivaDevotees #ShivaratriCelebrations #NightOfLordShiva #மகாசிவராத்திரி #சிவராத்திரி #சிவபக்தி #சி

  • Lord Shiva, who filed a false complaint against a devotee and destroyed the entire court

    தனது திரு ஓட்டை தானே மறைத்துவிட்டு தனது பக்தன் மீது பொய் புகார் கொடுத்து வழக்காடு மன்றத்திற்கு அளக்க அழிக்க விட்ட திருநீலகண்டம் தில்லையில் ஆடிய தாண்டவ திருவிளையாடல் என்ன தெரியுமா ?

    சிவ பக்தரான தில்லையைச் சேர்ந்த நீலகண்டம் எப்பொழுதும் நடராஜப் பெருமானை நினைத்தபடி திருநீலகண்டா "திருநீலகண்டா" என கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.  அதேபோன்று'அடியார்கள் இடமும் அன்பு மிகுதியுடன் நடந்து கொள்வார். நடராஜ பெருமானை எந்த நேரமும், துதித்து வந்தமையால்,  இவரை திருநீலகண்டர் என காரண பெயரிட்டு அழைத்தனர். தனது குல மரபின்படி திரு ஓடுகளை செய்து, அடியார்களுக்கு வழங்கும் அரும்ப பணியினை செய்து வந்தார். நீலகண்டத்தின்  மனைவியும் கணவனின் சொல்படி வாழ்ந்து வந்தாள். அப்போது ஊழ்வினையின் பலனாக அவரது தூய உள்ளம், சிற்றின்பத்தை தேடி தாசியிடம் சென்றது.  இதை அறிந்து, அவரது மனைவி வேதனையுடன் தன் கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது திகைத்தார். கூடல்  இன்பத்திற்காகவே" மனைவி இவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணி' நீலகண்டர். ஒருநாள் இரவு  மனைவியின்.

    அங்கத்தை நீக்கி கூடச் சென்றார். பொறுமை இழந்த மனைவி .ஐயனே" இனி எம்மை தொடுவீரின்  திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே சத்தியம் இட்டு, தம்மை இனி தீண்டக் கூடாது என்று கூறி விட்டாள். சிவபெருமானையே"தன் உயிராக உணர்வாக நினைத்த நீலகண்டம், மனைவி, இவ்வாறு ஆணையிட்டதை  கேட்டு மனம் வருந்தினார்.  மனைவியின் கோபத்தில் உள்ள நியாயத்தை  உணர்ந்து.  எம்மை என்றதனால்  மற்ற மங்கையரையும் இனி மனதாலும் தீண்டேன்" என  சிவன் மீது சத்தியம் செய்து. நீலகண்டர். அன்று முதல் தனது சிற்றின்பத்தை விட்டு, முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலன்களையும் தன்னுள் அடக்கி வாழ தொடங்கினார். ஒரே வீட்டில் வசித்த போதும், கணவன்-மனைவி இருவரும் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு'கட்டுப்பாடுடன் வாழ்ந்தனர். பின் ஆண்டுகள் பல கடந்து நீலகண்டரும்,  அவரது துணைவியாரும் முதுமை அடைந்தனர்.

    அப்போது சிவபெருமான், நீலகண்டனின் பெருமையை உலகுக்கு பறைசாற்ற எண்ணி' தனது திருவிளையாடலை தொடங்கினார். சிவ அடியார் போல் வேடமிட்டு,  திருவோடு ஏந்தி தெருவில் நடந்து  நீலகண்டனின் வீட்டை வந்து அடைந்தார்.நீலகண்டரும் அவரது துணைவியாரும் அடியார் கோலத்தில் வந்த பெருமானை வணங்கி வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். அப்போது நீலகண்டம் சிவ அடியாரிடம், ஐயனே" இத் தொண்டன் என்ன பணி செய்தல் வேண்டும் ? என
    பணிவுடன் கேட்டார். அதற்கு சிவ அடியார்  தன்னிடமிருந்த  திருவோட்டைக் காண்பித்து  நீலகண்டா ! இத் திருஓட்டின் மதிப்பை நிர்ணிக்க முடியாது.  விலை மதிப்பிட முடியா" கற்பகத் தரு போன்றது, பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடாகாது. இத்தகைய திருவோடடை உன்னிடம் ஒப்படைக்கிறேன். திரும்பி வந்து நான் கேட்கும்போது தருவாயாக என்று கூறி திருவோட்டினை நீலகண்டன் இடம் கொடுத்தார்.

    அதை பணிவோடு நீலகண்டம் பெற்று ஐயனே"  உங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். சிவ அடியாரும், தில்லை சென்று அங்கு சில காலம் தங்கி' பின் ஒரு  நாள் நீலகண்டத்தைக் காண வந்த. சிவ அடியாரை வரவேற்று, பாத பூஜை செய்து, இருக்கையில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டத்திடம் தான் வந்த வேலை முடிந்து விட்டமையால், திருவோட்டைத் தருமாறு கேட்டார். நீலகண்டம் வேகமாக சென்று திருஓட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் போய் பார்த்தபோது. அங்கு அதனைக் காணாது அதிர்ச்சியுடன்  மனைவி யிடம் ஓட்டை காணவில்லையே என்றார். தான் அறியேன்"  எப்படி காணாமல் போகும் என்று இருவரும் தவித்தனர்.  நிலை தடுமாறினர். பின் வாடிய முகத்துடன் இருவரும் சிவனடியார் பக்கம் வந்து சுவாமி என அழைத்து. தயங்கி நின்றார் நீலகண்டன் அவரின். தயக்கத்தை  கண்ட சிவனடியார் சற்று கோபமாகவே ஏனடா"  இத்தனை தாமதம் ? திரு ஓட்டை கேட்டால் கொடுக்க மனமின்றி ஒளித்து வைத்துக் கொண்டாயா? நான் உடனே  போகவேண்டும் , காலம் தாழ்த்தாமல் அதை கொடு என்றார். அவரது சினத்தை கண்டு நடுங்கிய நீலகண்டம், உண்மையிலே யே அத்திருஓடு காணாமல் போய் விட்டது சுவாமி என கண்ணீர் மல்க வணங்கினார்.  அடியாரோ கோபத்தில் நிதானம் இழந்து தாண்டவம் ஆடினார்.  நீலகண்டம்  அய்யனே  சினங்கொள்ளாதீர் அறியாது நடந்த தவறு பொறுத்துக் கொள்ள வேண்டும், திருஓடு மறைந்த தந்திரத்தை நான் அறியேன். மன்னித்து விடுங்கள்" உங்கள் மண் ஓட்டிற்குப் பதில் பொன் ஓடு வேண்டும் என்றாலும் , தருகிறேன் என்று பணிவோடு கூறினார்.

    சிவனடியாருக்கு மீண்டும் கோபம் வந்தது . என்ன ? வேறு ஒரு ஓடு தருகிறாயா ?  நீலகண்டா !  ஓட்டின் அருமைபெருமை பற்றி நான்  கூறியதனால்' நீ அந்த ஓட்டைத் திருடியிருக்கிறாய் என குற்றம் சாட்டியதைக் கேட்டு, தவறு சுவாமி"தவறு  உண்மையாகவே சொல்கிறேன்  அடியேன் தங்களது த திரு ஓட்டை  திருடவில்லை என்று நீலகண்டன் கூறினார் . நீ திருட வில்லை என்பது உண்மையானால், நான் திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றி கோவில் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி அம்பலத்தான் மீது சத்தியம் செய்யும் என்றார் எனக்கு மகன் இல்லையே சுவாமி ! என  மகன் இல்லாவிட்டால் என்ன ? மனைவியின் கையைப் பற்றி குளத்தில்  மூழ்கி உண்மையை நிலை நாட்டினால் அது போதும்" என்றார். சிவ அடியாரின்  ஆணை, நீலகண்டத்தின்  மனத்தை மேலும் வேதனை ப்படுத்தியது. அவர் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார்.  தமக்கும் – மனைவிக்கும் உள்ள இல்லற பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், சுவாமி மன்னிக்க வேண்டும், நானும் என் மனைவியும் ஒரு சபதம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே என் மனைவி கரம் பற்றி சத்தியம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார் நீலகண்டன். இனியும் உன்னோடு பேசிப் பயனில்லை வா  வழக்குமன்றம் செல்வோம் என முடிவாகச் சொன்னார் சிவ அடியார்.

    நீலகண்டன் அதற்கு சம்மதிக்க இருவரும், தில்லைவாழ் அந்தணர்களின் அரிய அவைக்கு சென்று' அவர்களிடம் வழக்கை எடுத்துரைத்தார் அப்போது. நீலகண்டனோ"  ஓட்டைத் திருடவில்லை என  முடிவாக தெரிவித்தார். இதனால் அவை முன்னவர் சிவ அடியார் விருப்பத்தின் படி குளத்து நீரில் மூழ்கி சத்தியம் செய்யுமாறு கூறினர். நீலகண்டன் மனைவியின்  கரம்பற்றி , நிபந்தனையை நிறைவேற்ற முன்வரவில்லை மாறாக'; இல்லம் சென்று, தன் மனைவியை  அழைத்து கொண்டு கோவில் குளம் நோக்கி வந்த நீலகண்டன்.   மூங்கில் கட்டை  ஒன்றினை கொண்டு வந்து அதன் ஒரு பக்கத்தைத் தாமும், மறுபக்கத்தை அவர் மனைவியும் பிடித்தவாறு நீரில் மூழ்குவதை ஏற்க மறுத்த அவைனர். கரம் பற்றியே குளத்து நீரில் மூழ்கிச் சத்தியம் செய்ய வேண்டும் என ஆணையிட்டனர்.  

    வேறு வழியின்றி நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் அவை அறிய எடுத்துக் கூறி மூங்கில் கட்டையை கணவன் மனைவி இருவரும் பற்றிக் கொண்டு, அவையின் அனுமதியின்றி குளத்து நீரில் மூழ்கி எழுந்தபோது. சிவபெருமானின் அருளால், முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். அப்போது அங்கிருந்த   சிவனடியார் திடீரென்று மறைந்து விட்டார். ஆகாயத்தில் இருந்து பூ மழை பொழிந்தது. தில்லை நடராஜர் கோவில் மணிகள் ஒலித்தன" சங்கு நாதம்  முழங்கியது' கைலாய எங்கும் வாக்கியங்கள் இசைத்தென" ஜோதி வடிவான ஈசன் பார்வதி தேவியுடன் எழுந்தருளி பக்த  தம்பதியருக்கு காட்சி அளித்தார்.  

    திருநீலகண்டரும் அவரது துணைவியாரும் பக்தி பெருக்கில் நிலத்தில் வீழ்ந்து அம்மை அப்பரை வணங்கினர். சிற்றின்ப சேற்றில் சிக்காமல் ஐம்புலன்களையும்  வென்ற அடியவர்களே" தில்லை அம்பலத்துல் அகப்பட்டு திருநீறு நீலகண்டத்தை பற்றியதால்" நீலகண்டா இனி நீ திருநீலகண்டர் என அழைக்கப்படுவாய்" எக்காலமும், குன்றா இளமையுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று  நலமுடன் வாழ்வீர்கள் ஆக" என எம்பெருமான் வரம் அளித்தார். அதன் பின் திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் இறைவனின் திருவருளினால் இளமை குன்றாமல், இன்பத்துடன் திருப்பணிபுரிந்து  நெடுநாள் வாழ்ந்து தில்லை நடராஜனின் பொற்பாத கமலங்களில் பணிந்து பிறவா நிலை அடைந்து திரு நீலகண்டர் 63 நாயன்மார்களில் ஒருவராக இறைப் புகழுடன் அடியார்களின் உள்ளங்களில் குடி கொண்டுள்ளார். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • It’s a miracle that if you perform puja by mentioning one zodiac sign, all 12 zodiac signs will get benefits!

    உயிரினங்கள் இயங்குவது கிரகங்களின் செயல்பட்டின் ஆதிக்கத்தால் தான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி நட்சத்திரங்கள் அமையப்பட்டு, அதன்படி அவர்களின் வாழ்வியல் அமையும் என்பது ஜோதிட வல்லுநர்களின் கணிப்பு ஆனால்"குறிப்பிட்ட ஒரு ராசிக்கு உரியவர் சிவபெருமானுக்கு பூஜை செய்தால் அதன் பலன் 12 ராசிகளுக்கும் கிடைக்கும் அதிசய கோவிலை தரிசிக்கலாம் வாருங்கள்.

    மன்னார்குடி அடுத்த  கழுவத்தூரில் சோழ மன்னர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ராமாயண காலத்தில்' பறவைகளின் அரசனான ஜடாயு சிவபெருமானை வேண்டி இங்கு தவம் தவம் புரிந்து கொண்டிருந்தான். அப்போது இலங்கையின் மன்னனான ராவணன் சீத்தையை கடத்திச் சென்றான் சீதையின் அவையே குரலைக் கேட்டு, தனது தவத்தை கலைத்த பறவைகளின் அரசனான ஜடாயு சீதையைக் காப்பாற்ற ராவணனை தடுக்க முற்பட்டபோது. அறிவிழந்த ராவணன்  வாள் கொண்டு ஜடாயு இறகுகளை வெட்டி வீசினான்' காயத்துடன் ரத்தம் வலிய ராமனை தேடிச்சென்று சீதையை ராவணன் கடத்திச் சென்ற செய்தியை கூறிவிட்டு ராமனின் திருவடியிலேயே ஜடாயு தனது உயிரை விட்டான்.

    அவருக்கு ராமன் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தான். பறவைகளின் அரசன் ஜடாயு இங்கு  தவம் புரிந்த போது  பூஜை செய்த சுயம்புலிங்கம் அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் சிவனின் வடிவமாகவும், ஆதிபராசக்தி அன்னை பார்வதி தேவியின் வடிவமாக' அருள்மிகு ஸ்ரீ சவுந்திர நாயகி தாயாரும் அருள் பாவிக்கிறாள். கழுகத்தூர் அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவிலில்' பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட யோக ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • How did the fire that appeared in the holy pond when Ravana embraced it get the name “Mandodari Pillai”?

    உலகிலேயே முதலில் தோன்றிய சிவாலயம் எங்கு உள்ளது தெரியுமா ? இலங்கை மன்னனின் திருமணத்தடை நீக்கி பிள்ளை பெறு வரம் அளித்த திருக்கோவில் இராமநாதபுரம் மாவட்டத்தில்  சிவபெருமான் அருள் பாவிக்கும் திருக்கோவில்களில்  ஒன்று தான் உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவ ஆலயம் என கூறப்படுகிறது. ஸ்ரீ ராமபிரான் தோன்றிய காலத்தூள் சிறந்து விளங்கிய இதன் தொன்மை வாய்ந்த வரலாறை நாம் அறிவோம்"

    இலங்கையை ஆண்ட ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே போனது, இதற்கான காரணம் குறித்து அவர் வேத விற்பனர்களிடம் கேட்டபோது. உலகம் தோன்றிய போது முதலில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டால் தடை நீங்கி திருமணம் கைகூடும் என"கூறியதை ஏற்று ராவணன். திரு உத்தர கோச மங்கை சுயம்பு லிங்கத்தை பக்தியுடன் வழிபட்டு, ஈசனை வேண்டியது பலனாக' மாண்டோதரியை தனது. துணையாக தேர்வு செய்து மனம் முடித்துக் கொண்டான் ராவணன். பின் நீண்ட காலம் புத்திர பாக்கியம் ஏற்படாததால்,  ராவணனின் வாக்குப்படி,  மண்டோதரி சுயம்பு லிங்கத்தை வழிபட்டு  புத்திரப் பாக்கியம் அடைந்தாள்' 
    உத்திர கோச மங்கை என தற்போது அழைக்கப்பட்டாலும், இதன் பண்டைய கால முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும்.

    ‘  இறைவன்"  ராவணனுக்கு மங்கள நாள் அருளியதால், இங்குள்ள ஈசன் ‘மங்களநாதர்’ ஆனார். மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி  இறைவனை நோக்கி தவம் இருந்தாள். கருணை கொண்டு  சிவபெருமான், அவளுக்கு பிள்ளைப்  பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கை  எழுந்தருளி வரம் அளித்தார்.  அதற்கு முன்பாக தன் அடியார்களிடம், ‘தனது திரு மேனியை ராவணன் தழுவும் போது,  இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் தோன்றிய  இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு பாலகனாக உருமாறி வரம் அளித்தார். 

    அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் தெய்வீக முகத்தைப் பார்த்து,  தன் கரங்களால் தூக்கி  கொஞ்சி மகிழ்வடைந்தான்.  ராவணன் கைகள் தழுவியவுடன்  உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் அக்னி தோன்றியதாக புராணம் கூறுகிறது.  இத்திருக்கோவிலில்  எழுந்தருளி இருக்கும் இறைவன் அருள்மிகு ஸ்ரீ ‘மங்களநாதர்’ என்றும், அம்பிகை அருள்மிகு ஸ்ரீ ‘மங்கள நாயகி’ என அழைக்கப்படுகிறாள்.

    மற்ற இடங்களில் சக்தியும்-சிவனும் சமேதராக விற்று இருப்பார்கள். இங்கு அம்மையும்' அப்பரும்" தனித்தனியே சன்னதி கொண்டிருப்பதும், தனித்தனி கருவறை விமானமும்,  ராஜகோபுரம் என'  இவ்விடம் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட பல ஐந்து கோபுரங்கள் உள்ளன. மங்களநாதர் என்ற திருப்பெயரை சிவபெருமான் தனக்குத்தானே சூட்டிக்கொண்டதாகும்,  மங்களநாயகி தாயாரையும்" மங்கள நாதரையும்' தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும், பிள்ளை பெறு பாக்கியம் கைகூடும், சொந்த வீடு மனை செல்வங்கள் உழைப்பின் வழியாக நம்மை தேடி வரும் என்பது திண்ணம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • How did the Pallava commander who defeated Pulikesi II kill his son and give the flesh to the Shiva devotees?

    காவிரி வளநாட்டில் தற்போதைய தஞ்சை மாவட்டத்தில்'  திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிறந்தவர்  பரஞ்சோதி இவர். நரசிம்ம வர்ம  பல்லவனின்  சேனாதிபதியாய் இருந்து. போர்க்களத்தில் இரண்டாம் புலிகேசி வென்று பகைவர்களை புற முதுகு காட்டி ஓட செய்து. வாதாபி நகரை கைப்பற்றி  கொண்டு அங்கிருந்து விலை உயர்ந்த செல்வங்களையும், பகைவர்களின் யானை, குதிரை படை, போர்க்கருவிகள் ஆகியவற்றையும் பல்லவ நாட்டு உடமை ஆகியதால், மன்னன் இவரது வெற்றியை போற்றும் வகையில் அரண்மனையில் சான்றோர் முன்னிலையில் விழா எடுத்து சேனாதிபதி பரஞ் சோதியின் வீரத்தைப் புகழ்ந்து பாராட்டினார். 
    அப்போது அமைச்சர்கள், ‘அரசே! சேனாதிபதியிடம்  சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரியும் பண்பு உள்ளது. இதன் காரணமாக போரில் இவர் வெற்றிவாகை சூடி வருகிறார்.  என்றனர். இதனைக் கேட்டு பூரிப்படைந்த பல்லவ மன்னன்  அவருக்கு வேண்டிய பொன் பொருள், விலை நிலம்,  கால்நடைகள் ஆகியவற்றை வேண்டிய அளவிற்கு அளித்து வணங்கி, 'நீர் உம்முடைய சிவ தொண்டின் பணியினை சிறப்புடன் செய்வீராக’ என வாழ்த்தி அரண்மனை வாசலுக்கு சென்று விடை கொடுத்தனுப்பினார். 

    பின் பரஞ்சோதி வெண்காட்டு நங்கை எனும் தன் மனைவி, அழகிய மகன் ஒருவனுடன் வாழ்ந்து, திருத்தொண்டினை புரிந்து வந்தார். ஒரு நாள் இவரது இல்லத்திற்கு உடல் முழுவதும் திருநீர் பூசி காவி உடையுடன் வந்த சிவ அடியார் தன் பசிப்பிணி நீங்க உணவளிக்குமாறு வேண்டினார், அப்போது உணவு உண்ண வீட்டிற்குள் அவரை பரஞ்சோதி அழைத்துச் சென்றபோது. தம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உணவு அருந்துவது வழக்கம் என்றும்' அந்த உணவு.

    நரமாமிசத்துடன்‌ கூடியது. அந்த மாமிசமானது,  ஒரே புத்திரனாய்‌, அங்கக்‌ குறைவு ஏதும் இல்லாதவனாய், ஐந்து வயது பாலகனாய்
     இருப்பவனை அறுத்து, ஒரு உறுப்பும்‌ குறையாது  சமைத்ததாய்‌ இருக்கவேண்டும்‌” என்றார்‌ வந்த சிவ அடியார்‌.

    அதனை ஏற்று; பரஞ்சோதி அடியாரின் விருப்பத்தை மனைவியிடம்‌ தெரிவித்தார்‌; அதன்படி தன்‌ மகன்  சீராளதேவனை கொன்று அறுத்துச்‌ சமைத்து, சிவ அடியாருக்கு உணவாக தந்தார்‌. அப்போது" “என்னோடு உண்ண இன்னொரு சிவனடியாரும்‌ வேண்டும்‌” என – இச்‌ சிவனடியார்‌ கேட்டார்‌.
    உடனே பரஞ்சோதி வீதியில் வந்து தேடிய போது மற்றொரு சிவ அடியார் யாரும் கண்ணுக்கு தென்படாததால்,  இறுதியில்‌, “நீரே அமரும்‌” என்றார்‌ சிவ அடியார் பரஞ்சோதியிடம். அதற்கு அவரும் உடன்பட்டு அமர்ந்து, மகனின் மாமிசத்தை கையில் எடுத்து புசிக்க முனைந்தார்‌. உடனே" தடுத்த  சிவவனடியார்‌, “உமக்குப்‌ புத்திரன்‌ இருந்தால்‌ அவனையும்‌" அழையுங்கள்‌, ஒன்றாக அமர்ந்து உண்ணலாம்" என்றார்‌.

    அதற்கும்‌ உடன்பட்ட பரஞ்சோதி, துயரத்தை உள்ளடக்கி வீதிக்குச் சென்று, மகனே“ சீராள!”  என்று அழைத்தார். உடனே,  குருகுலத்தில் இருந்து திரும்பிக்‌கொண்டிருந்த  தன்‌ மகன்‌ சீராள தேவன் எதிரே ஓடி வந்தான்‌.  பரஞ்சோதி அவனை ஆரத் தழுவி கொண்டு வீட்டினுள்‌ நுழைய, அச்சிவனடியாரும்‌ சமைத்த மாமிச உணவுகளும்‌ மறைந்துவிட்டன. 

    ஆங்கு சிவபெருமான் ரிஷப வாகனத்தில்  காட்சி தந்து , திருத்தொண்டு புரிவதில் நீர் சிறந்தவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிறு பாலகனான உமது பிள்ளையை உணவாக்கி சிவ அடியாரின் பசிப்பிணி போக்கை எண்ணிய நீர் இன்று முதல் சிறுத்தொண்டர் என அழைக்கப்படுவீராக'அருளிய சிவபெருமான் ஜோதி வடிவாக மறைந்தார் அன்று தொட்டு பரஞ்சோதியார்; சிறுத்தொண்டர்‌ நாயனார் என மக்களால் அழைக்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் இறைத் தொண்டில் ஈடுபட்டு ஈசன் திருவடியிற்‌ சேர்ந்தார்‌ என்பது சிவ புராண வரலாறு'. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்