Tag: Mahalakshmi

  • Is the broom Mahalakshmi…?

    வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டை சுத்தப்படுத்தப் பயன்படும் துடைப்பத்துக்கு முக்கிய இடமுண்டு. இது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால், துடைப்பத்தை மரியாதையுடன் கையாள்வது செல்வம், மகிழ்ச்சி, செழிப்பை வீட்டில் நிலைநிறுத்தும். துடைப்பம் வாங்கும் நாள், பயன்பாடு, பராமரிப்பு முதல் பழையவற்றை அகற்றுவது வரை குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது மகாலட்சுமியின் அருளைப் பெற உதவி புரியும்.

    துடைப்பம் வாங்கும் நாள்: செவ்வாய் அல்லது சனிக்கிழமைகள், குறிப்பாக தேய்பிறை நாட்களில், துடைப்பம் வாங்குவது மங்களகரமாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி முடிந்த பிறகு இந்நாட்களில் வாங்கினால், மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும். இது வீட்டில் பொருளாதார மேம்பாடு, செல்வ வளர்ச்சியை உறுதி செய்யும். புதிய துடைப்பத்தை கனவில் கண்டால், அது நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும், வீட்டில் மகிழ்ச்சி, நிம்மதி நிலவுவதற்கான அடையாளமாகவும் வாஸ்து கூறுகிறது.

    பயன்பாட்டு விதிகள்: துடைப்பம் மகாலட்சுமியை மகிழ்விக்கும் பொருளாக இருப்பதால், அதை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை பெருக்கும்போது முடிகள், தூசி சிக்கியிருந்தால், அவற்றை குப்பைத் தொட்டியில் போட்டு, துடைப்பத்தை சுத்தப்படுத்த வேண்டும். துடைப்பத்தை கால் படாத இடத்தில், மறைவாக வைக்க வேண்டும். பிறர் அதைப் பார்ப்பது செல்வத்துக்கு நல்லதல்ல. துடைப்பத்தை காலால் மிதிப்பது, ஒருவரை அதைக் கொண்டு அடிப்பது மகாலட்சுமியின் கோபத்தை வரவழைக்கும்.

    வீட்டை சுத்தப்படுத்திய பிறகு, துடைப்பத்தை தலைகீழாக வைப்பது தவறு. இது வீட்டில் சண்டை, பதற்றத்தை அதிகரிக்கும். எப்போதும் நேராக, சரியான இடத்தில் வைப்பது நேர்மறை சக்தியைப் பரப்பும். இரவில், குறிப்பாக சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, விளக்கேற்றிய பின் வீடு பெருக்குவது மகாலட்சுமியின் அருளைக் குறைக்கும். மேலும், ஒருவர் வீட்டை விட்டு வெளியே சென்ற உடனே பெருக்குவதைத் தவிர்க்கவும்; ஒரு மணி நேரம் கழித்து பெருக்குவது நல்லது.

    பழைய துடைப்பத்தின் பயன்பாடு: பழைய துடைப்பத்தை வீட்டில் விட்டுவிட்டு புதிய வீட்டுக்கு செல்வது தவறு. இது மகாலட்சுமியை பழைய வீட்டிலேயே விட்டுவிடுவதாக அர்த்தம். பயன்படுத்திய துடைப்பத்தை தானமாகவோ, பிறர் பயன்படுத்தவோ கொடுக்கக் கூடாது. இயற்கையான துடைப்பங்கள் (எ.கா., தென்னங்குச்சி, பூந்துடைப்பம்) பயன்படுத்துவது சிறந்தது. இவற்றை வெட்ட வெளியில் எரித்து சாம்பலாக்கலாம். செவ்வாய், வெள்ளி நாட்களில் குப்பையில் போடுவதைத் தவிர்க்கவும். பறவைகள் துடைப்பக் குச்சிகளை கூடு கட்ட எடுத்தால், அது குடும்பத்துக்கு நற்பலனைத் தரும் என சாஸ்திரம் கூறுகிறது.

    மகாலட்சுமியின் மரியாதை: துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் முறம் சுத்தத்தின் அடையாளங்கள். இவற்றை மரியாதையுடன் கையாள்வது மகாலட்சுமியை மகிழ்விக்கும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது செல்வ தேவியின் அருளை நிலைநிறுத்தும். துடைப்பத்தை வாங்குவது, பயன்படுத்துவது, அகற்றுவது ஆகியவற்றில் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீட்டில் நேர்மறை சக்தி, பொருளாதார வளர்ச்சி, மன நிம்மதியை உறுதி செய்யும்.

  • A Temple that hands out gold to devotees

    After darshan at temple, devotees are usually given rice, flowers, fruits, kumkum etc., as prasadam. But in a temple in Madhya Pradesh, devotees are given gold and silver. Surprising, right?!

    Yes, Ratnapura, also known as Ratlam, is located in the northwestern part of the state of Madhya Pradesh. At the Mahalakshmi Temple here, Gold is distributed to devotees after their prayers.

    Devotees who visit this temple, which is believed to be alleviating people from poverty, only give gold or silver in offering to the Goddess. Thus, the gold and silver offered by the devotees throughout the year are piled up like a mountain. Generally, it is customary to use the money, gold, and silver from the offerings for the temple's restitution. But in this temple, they are offered back to the devotees who visit here.

    This event is held annually on the occasion of Deepavali. Gold and silver are distributed to the devotees who come to the temple on that day. As the devotees see this as a blessing from the Goddess, none of them sell the gold offered by this temple.

    Will you be lucky enough to drop in here for Deepavali this year? You have months to plan! (just saying)

  • Mahalakshmi ko poojai

    செவ்வாயன்று கோ பூஜை செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று கோ பூஜை செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

    மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.

    பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும். ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம். கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர் கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.

    பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம். நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லை யெனில் பசு வைத்திருப் பவர்களுக்கு நாமாக உதவ வேண்டும். பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். 

  • Iswaryam tharum mahalakshmi mandiram

    மஹாலக்ஷ்மி அன்னையை மனதில் நினைத்து அனைத்து வெள்ளிகிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் கற்பூரம் ஏலக்காய் கலந்த காய்ச்சிய பால் மற்றும் வெற்றிலைபாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் போன்றவற்றை அன்னைக்கு படைத்து

    “ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ”

    என்னும் மந்திரத்தை உச்சரித்தால் தொழில் முன்னேற்றம் அடைந்து வளம் பெருகும்.

    இந்த மந்திரத்தின் பொருளானது, "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள உம்மை வேண்டுகிறேன்" என்பதாகும்.

    இவ்வாறு விளக்கேற்றி தீபத்தை வணங்கி பூஜித்து தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொண்டு. தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொண்டால் சிறந்த பலன்களைத் தரும். மற்ற சாதாரண நாட்களில் தம்மால் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்

  • Mahalakshmi Deepam

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் – தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி – எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
     

  • Purattasi mahalakshmi viradham

    ஜேஷ்டா-சுக்லபட்ச அஷ்டமி-சிவன்,விநாயகர் பூஜை-சந்ததி சிறப்பாக வளர.

    மகாலட்சுமி-துவாதசிமுதல்16 நாட்கள்-லட்சுமி பூஜை-சகல நலமும் வளமும் பெற.

    தசாவதார-சுக்லதசமியன்று.

    கதளி,கௌரி-சுக்லபட்ச சதுர்த்தசி-உமாமகேஸ்வர பூஜை-இஷ்ட சித்தி.

    அந்தந்த-பூர்வபட்ச சதுர்தசி-விஷ்னு பூஜை-காரியம் ஈடேற.

    பிரதமை/நவராத்திரி பிரதமை -சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) -ஓன்பது நாள் தேவி பூஜை-தீயசக்திகாளின் தாக்கம் விலக.

    ஷஷ்டி-சுக்லபட்ச ஷஷ்டி-பரமேஸ்வரி பூஜை-அம்பிகையின் அருளாசி.

    வளர்பிறை சப்தமி திதி-அனந்தசப்தமி-கண்ணொளி பிரகாசிக்கும்.

    பௌர்ணமி-சிவன்-பெருட்செல்வம் பெருகும்.

    அமுக்தா-சுக்லபட்ச சப்தமி-உமாமகேஸ்வரர்-புத்ர,பௌத்ர விருத்தி.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.
     

  • Mahalakshmi Viradham

    திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என பெயர் பெற்றாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை, நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் இன்று.

    துறவியான ஆதிசங்கரர் கூட தனக்கு நெல்லிக்கனியை பிட்சை அளித்த பெண்மணிக்காக 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாடி லட்சுமியருளால் தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழியச் செய்தார்.கிருஷ்ணரைக் காண ஏழை குசேலர் வந்த போது, மகாலட்சுமி தன் கடைக்கண் பார்வையை அவர் வசித்த ஊரை இருந்த திசை நோக்கி திரும்பினாள். அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.

    பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாகப் பிறந்த போது தன் கணவருடன் காட்டிற்குச் சென்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என ராமரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்திற்கு லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்தில் குடியிருப்பதாக ஐதீகம்.

    லட்சுமி தாயார் திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருப்பது போல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர்.இந்த நல்ல நாளில் அனைவருக்கும் சுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தாயாரை வழிபடுவோம்.

    வரலட்சுமி விரத ஸ்லோகம்

    பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
    கல்ய விவர்த்தினி
    பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
    மாம்ச்ச தேஹிமே
    வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
    வக்ஷஸ்தலஸ்த்திதே
    வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
    சதேஹிமே