Tag: Lemon

  • Lemon Shakthi

    உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறதா? குடும்பத்தில் சண்டை, பணப்பிரச்சினைகள் அதிகம் இருக்கிறதா? உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 

    பச்சை நிற எலுமிச்சையை பயன்படுத்தி வீட்டில் உள்ள எதிர்மறை  சக்தியை எளிதாக வெளியேற்றி விடலாம். மூன்று எலுமிச்சை பழங்களை வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைக்க வேண்டும். அதன் நிறம் எப்போது மஞ்சள் அல்லது கருப்பாக மாறுகிறதோ அப்போது அதை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் புதிய எலுமிச்சை வைக்க வேண்டும். அவ்வளவு தான்.

    மழைநீரில் எலுமிச்சையின் தோலினை போட்டு கொதிக்க வைத்து வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் நம்மை விட்டு அகலும் என கருதப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் அல்லது மேஜையில் மூன்று எலுமிச்சைகளை வைத்து கொள்வது மிகவும் நல்லது.

    வீட்டிற்கு வெளியே செல்லும் போது ஒரு எலுமிச்சையை கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். திரும்ப வீட்டிற்கு வந்ததும் எலுமிச்சையை எடுத்து பார்க்க வேண்டும்.அது காய்ந்து இருந்தால் உங்களை நோக்கிய எதிர்மறை சக்தியை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.

    இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சையை நான்கு துண்டாக அறுத்து உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைக்க வேண்டும். கட்டிலுக்கடியில் வைத்து விட்டு விடிந்ததும் கையால் தொடாமல் பிளாஸ்டி கவரில் உப்புடன் சேர்த்து தூக்கி எறிய வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும்.

  • Lemon Magimaigal

    பொதுவாக எலுமிச்சை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. அது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவும். ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படுவதோடு, உறவுகளுக்குள் பிரச்சனைகள் மற்றும் பணப்பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

    வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்துவிடுங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    3 பச்சை எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை எப்போது மஞ்சளாகவோ அல்லது கருப்பாகவோ மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும். இப்படி வைத்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும். 

    மழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.

    ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

    வேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 எலுமிச்சையை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

    ஒரு கண்ணாடி பௌலில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.

    வெளியே செல்லும் போது 1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு சென்று, வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சையை வெளியே எடுத்துப் பாருங்கள். அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை எலுமிச்சை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.

  • Ragu Kalathil Elumichai vilaketri vazhipattal

    எலுமிச்சை தீய ஆவிகளை நீக்கும் தந்திரத்தில் பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது.

    கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது இந்தியாவில் மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனை நோய்வாய்பட்ட மக்களின் அருகில் தொங்கவிடும் போது, இது தீய ஆவிகளை விரட்டி அவர்களை நோய்களிலிருந்து குணமடைய செய்யும் என்று நம்பப்படுகிறது.

    எலுமிச்சை விளக்கு எப்படி செய்ய வேண்டும்.?

    துர்கா பூஜையின் போது எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை தோல் மெல்லியதாக இருக்க வேண்டும். (ஒற்றை எண்களில், அதிகபட்சம் 9) அதனை நெகிழ்வாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும், கிடைமட்டமாக வெட்டக் கூடாது.

    சாற்றினைப் பிழிந்து வெளியேற்ற வேண்டும். பின் அந்த பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எண்ணெய் அல்லது நெய் கொண்டு நிரப்பி திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.!

    எலுமிச்சை விளக்கின் முக்கியத்துவம்.

    எலுமிச்சை நம்மை ஒத்ததாகும். மேலும் நாம் நமது உட்பகுதியை கடவுளுக்கு காட்ட வேண்டும். மாயை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே ஏறிய வேண்டும். எலுமிச்சைக்கு உள்ளே இருக்கும் வெள்ளை தோல் நமது தூய மனதையும், இருண்ட பகுதி (மறைந்திருக்கும் பச்சை விதைகள்) மாயையையும் குறிக்கும்.

    விளக்குத் திரியின் முக்கியத்துவம்.

    வாழைத் தண்டில் செய்யப்பட்ட திரியானது குற்றங்களையும், ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது. பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தையும், தாமரை தண்டில் செய்யப்படும் திரி முற்பிறவி வினைகளை நீக்கி வளமான வாழ்க்கையை நிறுவவும், வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் பெருக்கவும், புதிய மஞ்சள் பருத்தி துணி, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களிலிருந்து விடுபடவும் மற்றும் புதிய சிவப்பு பருத்தி துணி திருமணம் மற்றும் குழந்தை பெறும் தடைகளை நீக்கி மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவுகின்றது.!

    எந்த நாட்களில் விளக்கேற்றுவது சிறந்தது?

    நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம்