Tag: Laddu

  • Thirupathy laddu shortage

    பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் திருப்பதி மலையில் மதியம் முதல் லட்டு பிரசாதத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கூடுதலாக லட்டு கேட்கும் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் மட்டுமே  வழங்கப்படுகின்றன.

    திருமலையில் ஏழுமலையானை வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் லட்டு பிரசாதத்தின் விலையை 100 சதவீதம் அளவிற்கு உயர்த்திய தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் இனிமேல் எத்தனை லட்டு தேவை என்றாலும் கவுண்டரில் நேராக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

     அப்போது முதல் அதற்கு முன் 25 ரூபாய்க்கு விற்பனை செய்த லட்டு ஒன்று 50 ரூபாய்க்கும்,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய லட்டு ஒன்று 200 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வடை பிரசாதம் 100 ரூபாய்க்கும் கவுண்டர்களில் பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இதனால் பக்தர்கள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் லட்டு மற்றும் வடை ஆகிய பிரசாதங்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில்  பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் அதற்கு ஏற்ற வகையில் லட்டு உற்பத்தி ஏழுமலையான் கோவிலில் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே இன்று மதியம் முதல் திருப்பதி மலையில் லட்டு பிரசாதத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சாமி கும்பிட்ட பின் பக்தர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் லட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

    எனவே பக்தர்களுக்கு டிக்கெட்டுகளுக்கு உரிய ஒரு லட்டு தவிர கூடுதலாக தலா இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் லட்டு பிரசாதத்தை வாங்கி சென்று உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு பங்கிடலாம் என்று கருதி வாங்குவதற்காக கவுண்டருக்கு சென்ற பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  • Thirupathy Laddu maniya vilayil

    தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
       
    ஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் கடந்த 2 மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தரிசனம் கிடைக்காத நிலையில் ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    அதனால் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    ஊரடங்கு முடியும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும். ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேவஸ்தான மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், வேலூர், கன்னியாகுமரியில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில் ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    லட்டு பிரசாதம் மொத்தமாக தேவைப்படும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி ஹரிநாத்தை 9849575952 என்ற செல்போன் எண்ணிலும், லட்டு தயாரிப்பு அதிகாரியை 9701092777 எண்ணிலும் தொடர்பு கொண்டு லட்டுகளை மொத்தமாக ஆர்டர் செய்து எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • tirupathy laddu rate increase

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலை வரும் வைகுண்ட ஏகாதசி முதல் உயருகிறது. 

    திருப்பதியில் ஒரு லட்டு தயாரிக்க 38 ரூபாய் செலவு செய்கிறது. அதில் நடைபயணமாக மலையேறி தரிசனம் செய்வோருக்கு ஒரு லட்டு இலவசமாகவும், தர்ம தரிசனம் செய்வோருக்கும், மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கும் 10 ரூபாய்க்கு 2 லட்டுகளும் கூடுதலாக 2 லட்டுகள் பெற 25 ரூபாய் என்றும் விற்பனை செய்கிறது. அதேபோல் 300 ரூ கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்வோர், விஐபி பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமன்றி தனி மையங்கள் அமைத்து 50 ரூபாக்கும் லட்டு விற்பனை செய்கிறது. இதில்தான் தேவஸ்தானம் சற்று லாபத்தை பார்க்கிறது.

    ஆனால், இனிமேல் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் அனைவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதேபோல் கூடுதல் லட்டு வாங்க 50 ரூபாய் கொடுத்து ஒரு லட்டு வாங்கிக்கொள்ளலாம். இது வரும் வைகுண்ட ஏகாதசி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இனி ஒரு லட்டு 10 ரூபாய்க்கு, 25 ரூபாய்க்கு என்றெல்லாம் கிடையாது. இனி அனைவருக்கும் ஒரு லட்டு 50 ரூபாய் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வால் லட்டுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் முழுவதும் ரத்து செய்யப்படவுள்ளது.இந்த விலை உயர்வால் தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு 400 முதல் 450 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Thirupathi laddu Paper bag

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சணல் மற்றும் பேப்பர் பெட்டிகளில் லட்டு தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.   அவ்வாறு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு வழங்குவதற்காக லட்டு பிரசாதத்தை ஒவ்வொரு பக்தர்களும் 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்று செல்கின்றனர். 

    இதற்காக லட்டுகளை எடுத்துச் செல்ல மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர்கள் தேவஸ்தானம் சார்பில் ரூ 3 விலைக்கு பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இருப்பினும் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்காக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    அதன் ஒரு கட்டமாக பிளாஸ்டிக் கவர்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. இன்று முதல் பேப்பர் மற்றும் சணல் மூலம் தயார் செய்யப்பட்ட பை மற்றும் அட்டை பெட்டிகள் மூலம் லட்டு கொண்டு செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இதற்காக ஒரு லட்டு பிடிக்கும் விதமான அட்டை பெட்டி 3 ரூபாயும், 2 லட்டுகள் பிடிக்கும் விதமான அட்டைப்பெட்டி 5 ரூபாயும்,  4 லட்டுகள் பிடிக்கக்கூடிய அட்டைப் பெட்டி 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இதேபோன்று 5 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சனல் பை 25 ரூபாயும், 10 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 30 ரூபாயும்,  15 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 35 ரூபாய்,  25 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 55 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் லட்டு  பெறக்கூடிய பக்தர்கள்  பேப்பர் பெட்டி அல்லது சணல் பைகளில் மட்டுமே லட்டுகளை கொண்டு செல்ல முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சணல் அல்லது பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

  • Madurai Meenatchi Amman Koil Laddu Prasadam

    மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் தினந்தோறும் லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில்.  ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு,  உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

    அவ்வாறு மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும், தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும், என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  அண்மையில் தூய்மைக்கான இந்திய அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.