Tag: Kungumam

  • Kungumam vaikkum muraigal

    சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் வைக்க சிறந்த திசை எவை என கூறப்படுகிறது.  மங்கலத்தின் அடையாளமாக விளங்கும்  குங்குமத்தை சுமங்கலி பெண்கள், கிழக்கு நோக்கி நின்று கொண்டு 

    ஸ்ரீம் ஸ்ரீயை நம; ஸம் சுபம் பூயாத், 

    எனும் லட்சுமி  மந்திரத்தை கூறி, தன்னுடைய புருவ மத்தியில் குங்குமத்தை வைக்க வேண்டும். இதனால் சுமங்கலி பெண்களின்  வாழ்க்கையில் லஷ்மி கடாஷம் உண்டாகி, திருஷ்டி தோஷம் நீங்கும்.

    நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால், தனிப்பலன் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம். காரணம் சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் மற்றும் விட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.

    ஒரு 40 வருடங்களுக்கு முன்பு ஆண்களும் பெண்களும் பெரிய பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவ்வளவு ஏன் மிராசுதார் கூட நெற்றியில் குங்குமம் பெரிதாக வைத்து கொள்ளும் பழக்கம் இருந்தது. ஏன் இன்றும் கூட சிலர் நெற்றியில் குங்குமம் பெரியதாக இட்டு கொள்கின்றனர்.

    பெருமாள் சிவன் கோவிலில் குங்குமம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல கூடாது. அப்படி செய்தால் மஹாலக்ஷ்மியின் அருள் உங்களுக்கு கிடைக்காது. அதேபோல் குங்குமம் அரக்கு நிறத்தில் காணப்படும் குங்குமமே மிகவும் சக்தி வாய்ந்தது.
     

  • Kungumam Ragasiyangal

    திருமணமான பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கல சின்னமாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவனின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என இந்து முறைப்படி நம்பப்படுகிறது.

    இந்துக்களின் ஜோதிட முறைப்படி நெற்றி, மேஷ ராசி அதிபதிக்கு உரியது அதாவது செவ்வாய்க்கு உரியது. செவ்வாயின் நிறம் சிவப்பு ஆகும்

    நெற்றியில் குங்குமம் அணிவது மங்கலகரமான விஷயமாக கருதப்படுகிறது. மேலும் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள். குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.

    வட இந்தியாவின் முக்கிய விழாக்களான நவராத்திரி மற்றும் சங்கராத்திரி ஆகிய பண்டிகைகளின் போது கணவன் மனைவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிடும் பழக்கம் இருக்கிறது. மேலும் குங்குமம் சக்தி, லட்சுமி, விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. குங்குமானது மஞ்சள், எலுமிச்சை, மெட்டல் மெர்குரி ஆகியவற்றின் கலவையாகும். மெர்குரி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலுறவு விஷயத்திலும் உதவுகிறது. இதனால் தான் கணவனை இழந்த பெண்கள் குங்குமம் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறதாம்.

    நெற்றியில் இடும் குங்குமம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் எழாமல் காக்கிறது.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.