Tag: Kumba Rasi

  • Kumba rasi June Monthly Prediction – 2023

    கும்பம்:

    கிரகநிலை:

    ராசியில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு,  குரு  – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    01-06-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-06-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-06-2023 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பதில் வல்லவரான கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

    உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

    குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.  

    பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும்.

    மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

    கலைஞர்கள் உற்சாகமுடன் செயல்பட்டு கொடுத்த வாக்கினை காப்பாற்றி விடுவீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். தேவையான பட வாய்ப்புகள் வரும்.

    அரசியலில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். குறிப்பிட்ட சிலர் உங்களுக்காக பேசுவார்கள். நற்காரியங்களில் ஈடுபட்டு பேரும், புகழும் கிடைக்கப் பெறுவீர்கள்.

    அவிட்டம் 3, 4 பாதம்:

    இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.

    சதயம்:

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.  எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

    இந்த மாதம்  குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும்.

    பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 25-06-2023 மாலை 03:08 மணி முதல் 27-06-2023 இரவு 12:44 மணி வரை

    அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA.

     

  • Kumba rasikku September month rasi palan

    கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)
    சிறிய வேலையாக இருந்தாலும் அதிகமான உழைப்பைச் செலுத்தும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 7ல் இருப்பதால் தைரியம் அதிகரிக்கும்.  ஜீரண கோளாறுகள்  ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக  எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

    குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.

    பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

    கலைத்துறையினருக்கு கிரகசூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு ஏழில் அமைந்துள்ளதால் எங்கு இருந்தாலும் ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். பஞ்சமாதிபதி புதன் ராசிக்கு 5ல் ஆட்சியாக சஞ்சாரம் இருப்பதால் புதன் மனநிம்மதியை தருவார். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

    அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தை களால் சிக்க லான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். 

    மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

    அவிட்டம்:
    இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் பதட்டம் அடையவே கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள். பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். 

    சதயம்:
    இந்த மாதம் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலிடத்தில் உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது  செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சுயநலம் பார்க்காமல் உழைக்க வேண்யதிருக்கும். 

    பூரட்டாதி:
    இந்த மாதம் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும். பதவியையோ, பணத்தையோ எதிர்பாராமல் உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களில் அவ்வப்போது தடைகள் வந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும்.

    பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்று. கடன் தொல்லை அகலும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
    அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
     

  • Kumba Rasiku May Month Rasi Palan

    கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உடைய கும்பராசியினரே நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த மாதம் ராசிநாதன் சனி ராசியைப் பார்ப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. ராசிக்கு வரும் செவ்வாயால் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். 

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

    குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

    பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.
    அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

    கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
    மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. 

    அவிட்டம்:
    இந்த மாதம் மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும்  செய்து முடிக்கும்  திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.  ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியளிக்கும். கன்னிப் பெண்களுக்கு பெற்றோரின்  ஒத்துழைப்பு உண்டு.மூத்த சகோதரர்களிடம்  விட்டு கொடுத்தல் நன்மையைத் தரும். 

    சதயம்:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியரிடம் பாராட்டுப் பெறுவார்கள். தனித்திறமை மேம்படும்.சக மாணவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும்.பொழுது போக்கிற்கு இடம் கொடுக்க வேண்டாம். 

    பூரட்டாதி:
    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன்  கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.  அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தெய்வீக சிந்தனையுடன்  செயல்பட வெற்றி  நிச்சயம். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542
     

  • Kumba Rasikku Rasi Palangal

    (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)
    எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காணும் கும்ப ராசியினரே நீங்கள் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள். இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

    தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த மனகசப்புகள் நீங்கும்.

    குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். கடன் தொல்லைகள் நீங்கும்.
    பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை.  சூரியன் சஞ்சாரத்தால்  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

    அரசியல் துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

    மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

    பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • Kumba Rasi Guru peyarchi

    கும்பம்
    (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடைய கும்பராசியினரே, எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டீர்கள். நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள். 

    கிரகநிலை:
    இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து உங்களது தைரிய – பஞ்சம ஸ்தானம் – களத்திர ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு பஞ்சம ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    லாபஸ்தானத்திற்கு மாற்றம் அடைந்திருக்கும் குருவால் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். நீங்கள் நன்மைக்காக போராட தயங்காதவர். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து  செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

    தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.  தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

    குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

    பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.  உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். 

    விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். வழக்குகள் நிலுவையிலிருந்தால் அவை முடிவதில் தாமதம் ஏற்படும். 

    கலைத்துறையினர் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. 

    அரசியலில் உள்ளவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தொண்டர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நன்மை தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். 

    மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். 

    அவிட்டம் 3, 4 பாதம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

    சதயம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும். 

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

    பரிகாரம்: சனிக் கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். முடிந்தால் ஒருமுறை திருநள்ளாறு சென்று வரவும். "நள்ளாறா என நம் வினை நாசமே' என்கிறது தேவாரம். இதை மறவாதீர்கள்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: "சனி அஷ்டகம்' பாராயணம் செய்யலாம். 
    மலர் பரிகாரம்: “எருக்கம்பூவை” அருகிலிருக்கும் சிவனுக்கு அர்ப்பணித்து வரவர உங்களின் வாழ்வில் முக்கியமான காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.
    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
    அதிர்ஷ்ட எண்: 1, 2
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542