Tag: Kudamuzhukku

  • Thanjai Kudamuzhukku

    தஞ்சை பெரியகோயில் நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. குடமுழுக்கு யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி மாலை தொடங்கியது. இதற்காக வெண்ணாற்றங்கரையில் இருந்து கோயிலுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. 

    11,900 சதுரஅடி பரப்பில் 110 யாக குண்டங்கள் யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ளது.  400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களும், ஓதுவார்களும் கலந்து கொண்டு ஹோமம் நடத்தி வருகிறார்கள். நாளை காலை 7 மணிக்கு மகா தீபாராதனையும், காலை 7.25 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்த விமான ராஜகோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறும். 

     8 கால யாகசாலை பூஜைக்கும் ஆயிரம் கிலோ வெள்ளை மிளகு, நன்னாரி வேர், வலம்புரி காய், கர்சூரிக்காய், அதிமதுரம், லவங்கப்பட்டை, தேவதாருகட்டை போன்ற 124 மூலிகை பெருட்களை பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் தினந்தோறும், ஆயிரம் கிலோ அளவிலான செவந்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா போன்ற மலர்களும் அபிஷகேத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 
     

  • Thanjai Kudamuzhukku

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வருகின்ற 5 ந்தேதி குடமுழுக்கு நடத்தப்பட இருக்கின்றது.  அதற்கான பணிகளை தொல்லியல் துறையினரும்  இந்து சமய அறநிலையைத்துறையினரும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    குடமுழுக்கிற்காக கோவில் அருகே 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மகா யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 110 யாககுண்டங்களில் 300 சிவாச்சாரியார்கள் அமர்ந்து யாகம் செய்யக்கூடிய வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. 

    இன்று காலை பூர்வாங்க பூஜையுடன் சிவனடியார்களும் , தமிழ் ஓதுவார்களும் கலந்து கொண்டு மகா யாக சாலையில் யாகங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8 கால பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள்  வருகின்ற 5 ந்தேதி வரை யாக சாலை நடைபெறும்.