Tag: Krishna jayanthi

  • Danvanthri peedam krishna jayanthi vizha

    தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஸ்ரீகிருஷ்ணரின் சிறப்பு :

    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது

    தன்வந்திரி பீடத்தில் நவநீத கிருஷ்ணர் :

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெருமுயற்சியுடன் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கும், இதர 77 பரிவார தெய்வங்களுக்கும் திருச்சன்னதிகள் அமைத்து உலக மக்கள் நலன் கருதி அவ்வஒப்பொழுது சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீனமுறையில், கல் ஊஞ்சலில், ஒரடி உயரத்தில் தவழ்ந்த கோலத்தில், நவநீத கிருஷணர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    ஸ்ரீகிருஷ்ண ஹோமமும் ஜெயந்தி விழாவும் :

    நவநீத கிருஷ்ணருக்கு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தம்பதியர் குழந்தை பாக்யம் வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும், அகந்தை அகலவும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாமல் இருக்கவும், தர்மசீலராக வாழவும், அரசியல் ஞானம் உண்டாகவும், நிர்வாக திறன் அதிகரிக்கவும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கவும், திருமணத் தடைகள் அகலவும், செல்வம் பெருகவும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கவும், ஆடு, மாடுகள் பெருகவும், கடன் தீரவும், பகைமை ஒழியவும், புகழ் கூடவும், அமைதி நிலவவும், ஆற்றல் பெருகவும், வறுமை இல்லா வாழ்வு அமையவும் ஸ்ரீகிருஷ்ண யாகமும், மஹா அபிஷேகமும் நடைபெற்று கூட்டுப் பிரார்த்தனையுடன் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவாக நடைபெற்றது.

    பல்வேறு பலகாரங்கள் நிவேதனம் :

    இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணேய், சீடை, முருக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள், பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • August 23 Krishna Jayanthi

    ஆகஸ்ட் 23 கிருஷ்ண ஜெயந்தி
    விகாரி வருடம் – ஆவணி 6
    கிருஷ்ண ஜெயந்தி
    23-ஆக-2019 வெள்ளி  
    வாஸ்து நாள்(காலை 07.23 – 07.59)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    அ.கா    5.22
    நட்சத்திரம்    :    கார்த்திகை    இ    12.45
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி,விசாகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Krishna Jayanthi Special Recipe

    முந்திரி கொத்து

    முந்திரி கொத்து, தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் காணப்படும் ஒரு சிறப்பு உணவுப்பண்டம். இதே மாதிரியான இனிப்பு வகையை சிறிய மாற்றங்களுடன் யாழ்ப்பாணத்திலும் செய்வார்கள். இதற்கு பெயர் பயற்றம் பணியாரம். மண்டை வெல்லத்திற்குப் பதிலாக வெல்லம், சீனி சேர்ப்பார்கள். வாசனைக்கு ஏலத்துடன் லேசாக வறுத்த சீரகம், மிளகு பொடி செய்து சேர்க்கப்படும். குமரி முனையும், அதன் அருகில் இருக்கும் யாழும் விரும்பிச் சமைக்கும் பதார்த்தம் இதோ கிருஷ்ண ஜெயந்தியில் உங்களுக்காக…

    தேவையான பொருட்கள்

    பாசிப்பயிறு – 250 கிராம்
    வறுகடலை – 150 கிராம்
    பனங்கற்கண்டு – 200 கிராம்
    வறுத்த எள்ளு – 50 கிராம்
    தேங்காய் துருவல் – 1 மூடி
    மைதா மாவு – 250 கிராம்
    உப்பு – சுவைக்கேற்ப
    ஏலக்காய் பொடி – சிறிதளவு
    சுக்கு பொடி – சிறிதளவு

    செய்முறை

    பாசிப்பயிரை தோலுடன் லேசாக வறுத்து, அதை உடைத்து வைத்துக்கொள்ளவும். வறுகடலை மற்றும் உடைத்த பாசிப்பயிறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை தனித்தனியாக நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை நெய்யில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். 

    அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதில் வறுத்த எள்ளு, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். மைதா மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு அதில் இந்த உருண்டைகளை நனைத்து காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி கொத்து ரெடி.

    ஆண்டாள் ரசித்து தன் மனமார படைத்த அக்கார வடிசல் …

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி – 1 கப்
    வெல்லம் – 2 கப்
    பால் – 5 கப்
    ஏலக்காய் பொடி – சிறிதளவு
    நெய் – 50 மிலி
    முந்திரி, திராட்சை – சிறிதளவு

    செய்முறை

    வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பச்சரிசியை வறுக்கவும். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் விட்டு வேகவைக்கவும். பின்னர் அதை நன்கு மசித்து, அதில் 5 கப் காய்ச்சிய பாலை சேர்த்து வேகவிட வேண்டும். நன்கு குழைய வெந்தவுடன் அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கவும். இது ஸ்ரீரங்கத்து ஸ்பெஷல் ரெசிபி.
     

  • Krishna Jayanthi viradha vazhipadu

    கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை கண்ணனின் திருப்பாதங்களைப் பச்சரிக்கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்கின்றனர். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

    அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். கிராமங்களில் மாலை வேளையில் தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்த பிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்குவது சிறப்பு.

     
    பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும்.

    வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி, பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

  • Krishna jayanthi palagarangal

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமாக செய்யப்படும் சில பலகாரங்களை எளிமையாக செய்து சுவைத்து மகிழுங்கள். 

    ரவா லட்டு….

    கிருஷ்ணருக்கு பிடித்தது மட்டுமல்ல, நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்…

    ரவை – ஒரு கப்

    நெய் – 4 டீ ஸ்பூன்

    சர்க்கரை – அரை கப்

    தேங்காய் துருவல் – அரை கப்

    ஏலக்காய் பொடி செய்தது – கால் ஸ்பூன்

    நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி – 10

    சூடான பசும்பால் – அரை கப்

    செய்முறை…

    அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது.

    அக்கார அடிசல்….


    நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்…

    பாசுமதி அரிசி – 1 கப்

    பாசிப்பருப்பு – ½ கப்

    பால் – 750 மிலி

    வெல்லம் – 2 கப் முந்திரி,

    திராட்சை – கால் கப்

    ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்

    நெய் – 50 கிராம்

    பச்சைக் கற்பூரம் – சிறிதளவு 

    செய்முறை…

    வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். 

    லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

    வெல்லம் பால் கொழுக்கட்டை

    வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்…

    இட்லி அரிசி – 1 கப்

    எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

    காய்ச்சிய பால் – 1 கப்

    வெல்லம் – 1 கப்

    ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் – ஒரு கப் வெல்லப்பாகு

    செய்முறை…

     வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். 

    அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். 

    அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பால் கோவா ….
    பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்படும் பால் கோவா

    தேவையான பொருட்கள்…

    மில்க் மெய்டு – 500 கி

    பால் – 150 மி.லி

    தயிர் – 125 கி

    நெய் – 100 கி

    செய்முறை…

     முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். 

    அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும். இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.