Tag: Kovai

  • Kovai Echanari Vinayakar

    கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இக்கோவிலில் வீற்றிருக்கும் விநாயகர் குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றமும் நல்ல உத்தியோகமும் கிடைக்கப்பெற செய்து அருள்பாலிக்கிறார். 

    இத்திருத்தல வரலாறானது மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டார், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டைசெய்யப்பட்டது. விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது

    மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் இத்திருத்தலத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும்.இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும்.

    மேலும் வாகன பூஜைக்கு பெயர்பெற்ற தலமாக இக்கோவில் விளங்குகிறது. கோவை நகர மக்கள் புதிய வாகனம் வாங்கி இங்கு வழிபடுவது அன்றாட நிகழ்வாக நடந்துகொண்டிருக்கிறது. மேலும் வாகன யோகம் தரும் கடவுளாகவும் இக்கோவில் விநாயகர் போற்றப்படுகிறார். இத்திருத்தலத்தில் பக்தர்கள் நேர்த்தி கடனாக, பால் அபிஷேகம் செய்தல், பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.

  • Kovai Kumbabishegam Vedio

    கோவை வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

    கோவை வடவள்ளி அடுத்த முல்லை நகர் பகுதியில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான திருக்கோவில் மதுரை மன்னராக இருந்த திருமலைநாயக்கரால் உருவாக்கப்பட்ட கோவில் என கூறப்படுகிறது.இந்த நிலையில் திருக்கோவில் புணரமைப்பு பணிகள் நிறைவடைந்து மஹா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

    முன்னதாக குண்டம் அமைத்து கணபதி வழிபாட்டுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க வேள்விகள் நடைபெற்றன.தொடர்ந்து  குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரால் திருக்கோவில் விமானக்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

    அப்போது வானில் கருடன் தோன்ற திரளாக கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு கும்பாபிஷேக தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன……..