Tag: kodiyetram

  • Swamy malai karthigai deepa thiruvizha kodiyetram

    முருகக் கடவுளின் நான்காம் படைவீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தினமான டிசம்பர் 06ம் தேதி செவ்வாய்கிழமை காலை தேரோட்டமும், இரவு கார்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறுகிறது. கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும், இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பெருவிழா 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .

    கார்த்திகை தீப திருவிழா இன்று காலை  கொடியேற்றத்துடன் துவங்கியது .இவ்விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 6ம் தேதி காலை தேரோட்டமும், அன்று இரவு சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

  • Pillayarpatti chadurthi kodiyetram

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. ஆனால், கொரோனா ஊரடங்கு தடை காரணமாக, சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களின்றி கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

     
    அதன்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு அருகில் உற்சவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் சதுர்த்தி திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பிரகாரத்தை வலம் வருவார்.

    இந்த நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள். சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Pillayar patti kodiyetram

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பகவிநாயர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் 9 வது நாள் தேரோட்டமும் 10வது நாளான விநாயகர் சதுர்த்தியன்று காலை தீர்த்தவாரியும் முக்குறுனி கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.

    இன்று முதல் மாலை சிம்மம், குதிரை, க கமலம்,யாளன, உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலாவும் வரும் வியாழக்கிழமை மாலை சூரசம்ஹாரம்மும் நடைபெற உள்ளது.

    நாளை முதல்  தினமும் காலை வெள்ளி கேடகத்தில் சுவாமி உலா நடைபெறும் விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி நகர டிரஸ்டிகள் கவனித்து வருகின்றனர். 

  • Chidamparam Aani thirumanjanam kodiyetram

    சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 7ந் தேதி தேரோட்டமும், 8ந் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது 

    பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்டம் மற்றும் தரிசன உற்சவ விழா 10 தினங்களுக்கு சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இதையொட்டி இன்று காலை கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று முதல் தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் நகர வீதிகளில் உலா வரும்

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7ந் தேதி தேரோட்டம் நடக்கிறது அன்று காலை கோயிலின் மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 சாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வரும். அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வேண்டி வடம் பிடித்து தேர் இழுப்பார்கள் அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் கோயிலின் உள்ளே இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

    மறுநாள் 8ந் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பின்னர் மதியம் 2 மணி அளவில் நடராஜரும் சிவகாமசுந்தரியும் நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து  அருள் பாலிப்பர். பின்னர் நடராஜர் சித்சபா பிரவேசமான    கருவறைக்கு கொண்டு செல்லப்படும். பிரசித்தி பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.