Tag: Kanni

  • Kanni June Monthly Prediction – 2023

    கன்னி:

    கிரகநிலை:

    தனவாக்கு ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஸ்தானத்தில் புதன், ராகு,  குரு  – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    01-06-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-06-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-06-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின் போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

    தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

    பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

    அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

    உத்திரம் 2, 3, 4 பாதம்

    இந்த மாதம் குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

    அஸ்தம்:

    இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

    சித்திரை 1, 2, பாதம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

    பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.  எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 13-06-2023 மாலை 04:19 மணி முதல் 15-06-2023 இரவு 09:51 மணி வரை

    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA.

     

  • Kanni May Monthly Prediction – 2023

    கன்னி:

    கிரகநிலை:

    தனவாக்கு ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ), ராகு,  சூர்யன், குரு  – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    03-05-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    12-05-2023 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-05-2023 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-05-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த விஷயத்தையும் எந்த நேரத்திலும் சோம்பலைத் தவிர்த்து தள்ளிப் போடாமல்  உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய கன்னி ராசிக்காரர்ளே  இந்த  மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

    தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ்  பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய  பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம்.  என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும்.

    குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம்.  கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின்  நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு  மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

    அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

    கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும்.

    உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம்  பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.

    அஸ்தம்:

    இந்த மாதம்  மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.

    சித்திரை 1, 2, பாதங்கள்:

    இந்த மாதம்  துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

    பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன் – வெள்ளி; தேய்பிறை: திங்கள் – புதன்

    சந்திராஷ்டம தினங்கள்: 17-05-2023 காலை 08:14 மணி முதல் 19-05-2023 பகல் 02:00 மணி வரை

    அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Kanni December Monthly Prediction – Sakthi Online

    கன்னி:

    கிரகநிலை:

    தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் புதன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – சப்தம ஸ்தானத்தில் குரு  – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ்)  என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2022 அன்று சுக்ர பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    அசத்தலான நடை உடை பாவனையுடன் ஆடம்பரமாக வாழும் கன்னி ராசியினரே இந்த மாதம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

    குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.

    பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

    மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

    உத்திரம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

    அஸ்தம்:

    இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

    சித்திரை 1, 2, பாதம்:

    இந்த மாதம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

    பரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 04, 05, 06

    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Kanni Rasi Raghu kedhu peyrchi

    கன்னி ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கன்னிக்கு ஒன்பதாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, ஓரளவு சோதனையான காலமாக அமையக்கூடும். இப்பொழுது, உங்கள் தந்தையுடனான உறவில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவருடைய ஆரோக்கியமும் உங்களுக்குக் கவலை தரலாம். 

    மேலும், இந்த நேரத்தில் பொதுவாக நீங்கள், வயதில் மூத்தவர்களுடன்  நல்லிணக்கத்தைப் பராமரித்து, அவர்கள் ஆசிகளைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் குரு அல்லது ஆன்மீக போதகர் மற்றும் மத குருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் உங்களுக்கு நன்மை தரும். எந்தக் காரணத்தைக் கொண்டும், ஒரு பொழுதும், அவர்களை அவமதித்து விடாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் மூத்த அதிகாரியுடனான உறவு அவ்வளவு சீராக இருக்காது. நீங்கள் தான் இதை மேம்படுத்தி, நல்லுறவாக்கி, அதற்கு வலிமை சேர்க்க வேண்டும். 

    அதிர்ஷ்டமும் கூட இப்பொழுது உங்களுக்கு, அதிக அளவு சாதகமாக இருக்காது. நீங்கள், ஒழுக்கம் மற்றும் ஒழுக்க நெறிகளில் இருந்து வழுவாமல், உங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம். உங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் இப்பொழுது சோதனைக் காலம் என்பதால், நீங்கள் உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் நேர்மையாக இருக்க முயற்சி செய்வது மிகவும் முக்கியம். இந்தப் பெயர்ச்சியின் விளைவுகள் உங்களை பாதிக்காமல் இருப்பதற்கு, மனதில் இறை பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கடவுளை வணங்குங்கள். எனினும், இந்தப் பெயர்ச்சிக் காலத்தின் பொழுது, வெளிநாட்டுப் பயணங்கள் எளிதில் அமையும் வாய்ப்புள்ளது.

    கேது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கன்னிக்கு மூன்றாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் உங்களுக்கு, நன்மை மற்றும் தீமை கலந்த பலன்களை அளிப்பார் என எதிர்பார்க்கலாம். ஜோதிடம், இசை, பாடல், நடனம், மற்றும் உளவியல் போன்ற ஆன்மீகம் அல்லது கலைத் துறைகளில் இருப்பவர்கள், அவற்றில்  மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் வாய்ப்புள்ளது.

     எனினும், இந்த நேரத்தில் உங்கள் தைரியம் சற்று குறையக்கூடும். எனவே நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம். மற்றவர்களுடனான உங்கள் உரையாடலின் பொழுது, நீங்கள் கவனமாக இருந்தால் தவறான புரிந்துணர்வுகளைத் தவிர்க்க இயலும். எனவே பேசுவதற்கு முன் நன்கு யோசித்துப் பேசுவது நல்லது. மேலும், சுருக்கமாகவும், குறிப்பாகவும் பேசுவதும், பிறருடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். 

    உங்கள் இளைய உடன் பிறப்புக்களுடன் உள்ள உறவில் சில சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளதால், அவர்களுடன் இணக்கமான உறவை மேற்கொள்வது அவசியம். இந்த நேரத்தில், உங்களில் சிலர் குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம். இவை குறிப்பாக, ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மேற்கொள்ளும் யாத்திரைகளாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், கடவுள் மீது நீங்கள் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கை, இந்தக் கால கட்டத்தில், அவரது ஆசிகளைப் பெற்றுத் தந்து, இந்தப் பெயர்ச்சியினால் விளையும் பாதக விளைவுகளைச் சமாளிக்க உதவும்.   

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

  • Kanni – March 2020 palangal

    (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
    கன்னி ராசி அன்பர்களே
    இந்த மாதம் மனதில் ஞானம் நிறைந்த புதிய சிந்தனைகளும், எந்த செயலையும் மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ளும் புதிய மனோபாவமும் உண்டாகும். கடன், வழக்கு போன்ற வகைகளில் பதட்டத்திற்கு இடம் தராமல் நிதான போக்கை கடைப்பிடித்து சிரமங்கள் வராமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலம் சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

    குடும்பத்தில் தாயின் உடல் நலத்தில் கவனமும், வீட்டு பாதுகாப்பில் தகுந்த கவனமும் செலுத்துவது நன்மை தரும். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு பத்திரங்களை நம்பிக்கையில்லாத நபர்களிடம் கொடுப்பது சிரமம் தரும். கவனம் தேவை. சமூகத்தில் தகுந்த புகழும், தந்தை வழி, தாய்மாமன் வகை உறவினர்களிடமும் விட்டுப் போன உறவுகளை திரும்பவும் தொடருவீர்கள். 

    உத்தியோகஸ்தர்கள் வெளி நாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அனுகூலமான நிலையில் கிரகம் அமைந்திருப்பதால் இடைவிடாத முயற்சிகள் மூலம் நற்பலனைத் தரலாம். மேலதிகாரிகள் உங்களை மனதில் வைத்து தான் அடுத்த கட்ட நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. 

    தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்வதை இப்பொழுது ஒத்திப் போடுவது சிறந்தது. ஆடம்பர எண்ண்ங்களை ஒதுக்கி விட்டு, கிடைத்த லாபத்தை பயன்பாடு உள்ள வகையில் பயன்படுத்துங்கள். தந்தையின் வழி தொழில் செய்பவர்கள் தந்தையின் நீண்ட கால திட்டம் ஒன்றை உங்கள் மூலமாக நிறை வேற்றும் சிந்தனை தந்தையின் மனதில் அதிகரிக்கும்.

    பெண்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தன்மையை உணர்ந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணச் சேர்க்கையிலும் அனுகூல பலன்கள் உண்டு. வேலைப்பளு காரணமாக உணவு உண்ண நேரமில்லாமல் வயிற்றுத் தொந்தரவு ஏற்படலாம். அலர்ஜி போன்ற உபாதைகளும் வரலாம்.

    கலைஞர்கள் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். மற்றவர்கள் பாராட்டுக்கு மயங்கி எந்தவொரு நிகழ்விலும் நிதானத்தை இழக்க வேண்டாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கிய முடிவுகளை சற்று யோசித்து நிதானத்துடன் எடுக்க ஆபத்து அண்டாது.

    அரசயில்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.

    மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்துவதால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தந்தை, மகன் உறவு நிலைகளில் நம்பிக்கை குறையாமல் நல்ல முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் தகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்.

    உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.   தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

    அஸ்தம்:
    இந்த மாதம்   குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.

    சித்திரை 1, 2, பாதங்கள்:
    இந்த மாதம்   உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  

    பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 27, 28, 
    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Kanni Feb month predictions

    கன்னி ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்களை தரும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள்  விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். 

    குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும்.  பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு வரும்.

    தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் குறைய லாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. அரசாங்க காரியங்கள் அனைத்தும் சாதகமான பலன்  தரும். 
    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப் பீர்கள். எண்ணிய எண்ணப்படி எல்லாம் நடக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் தாராளமாக கிடைக்கும்.
    கலைத்துறையினர்களுக்கு சிறு முயற்சியிலேயே வாய்ப்புகள் கிடைத்து வருமானமும் அதிகரித்து காணப்படும். இயக்குனர்கள் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து படம் இயக்குவதற்கு சாதகமாக கிரகநிலைகள் அமைந்துள்ளன. 

    அரசியல் துறையினர் கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்று  நீங்கள் எதிர்பார்க்கலாம். அதைக் கண்டு சிலர் பொறாமை பட நேரிடும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புது வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. 
    பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

    மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

    உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்:
    இந்த மாதம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.  
    ஹஸ்தம்: 

    இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும். எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மையைத் தரும்.

    சித்திரை 1, 2ம் பாதங்கள்:இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. தீடீரென நீங்கள் எடுக்கும் முடிவுகள் அடுத்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும்.

    பரிகாரம்: ஐயப்பனின் சரண கோஷத்தை சொல்லி வழிபட வெற்றிகள் குவியும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
    அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
     

  • Guru Peyarchi Palangal – Kanni

    (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் கன்னி ராசியினரே, "கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப நீங்கள் யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். புத்திகாரகனான புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள் நீங்கள். 

    கிரகநிலை:
    இதுவரை உங்களது தைரிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். சுக ஸ்தானத்தில் இருந்து உங்களது அஷ்டம – தொழில் ஸ்தானம் – அயன சயன போக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தொழில் ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி சுக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    உங்களுடைய சுகஸ்தானத்திற்கு மாற்றம் பெற்றிருக்கும் குருபகவானால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

    பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

    விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள். 

    அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.  புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். 

    கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.

    மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்

    உத்திரம் 2, 3, 4 பாதம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். 

    அஸ்தம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

    சித்திரை 1, 2, பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். 

    பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: “புருஷசூக்தம்” பாராயணம் செய்யவும்.
    மலர் பரிகாரம்: “துளசியை” பெருமாளுக்கு படைத்துவர வாழ்வில் புத்தொளி பிறக்கும். 
    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • October month predictions – Kanni

    (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடைய கன்னி ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

    ராசிநாதனும் தொழில் அதிபதியுமான புதன் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.

    குடும்பாதிபதி சுக்ரன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். 

    பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. 

    அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். 

    கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு  உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். 

    பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • 2019 September month predictions – Kanni

    (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
    எப்போதும் சிந்தித்து முடிவெடுக்கும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.  யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும்.  நற்பலன்கள் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். 

    தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி  ஏற்படாமல் தடுக்கப்படும்.   அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். சந்தோஷமான நிலை காணப்படும். 

    பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

    அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். 

    கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும்.

    பரிகாரம்: ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19    
    அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28    

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • April month predictions – Kanni

    (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    கலகலப்பாக பேசி அனைவரிடமும் இயல்பாக பேசி வரும் கன்னி ராசி அன்பர்களே நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த மாதம் ராசிநாதன் புதனின் சஞ்சாரம் மற்றவர்களின் ஆதரவு கிடைக்க செய்யும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

    செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின் போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
    தொழில் ஸ்தானத்தை குரு சனி ஆகியோர் பார்க்கிறார்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.

    குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப் பூர்வமான அறிவுத்திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்.

    பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

    அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

    மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.

    உத்திரம் 2, 3, 4 பாதம்:
    இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்

    அஸ்தம்:
    இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

    சித்திரை 1, 2, பாதம்:
    இந்த மாதம் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

    பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.  எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
    அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    Mobile : +91 7845119542