Tag: Kamatchi

  • Kamatchi amman koil kumbabishegam

    திருவண்ணாமலையில் 2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலை வடக்குவீதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன்,பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகமும், தீபாரதனையும் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைத்து நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு  முலீகை பொருட்களை கொண்டு யாகம் நடத்தி பின்னர் மஹா பூர்ணாஹிதி நடைபெற்றது.

    பின்னர் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர உச்சியில் அமைந்துள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம், தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

     திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தோன்ற மூல காரணமான ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

  • Kanchi Kamatchi Veedhi Ula

    உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்  பிரம்மோற்சவம்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

     6ம் நாள் திருவிழாவை  யொட்டி  காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏலக்காய், முந்திரி,பாதாம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலையால் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மனும், சரஸ்வதி, லட்சுமி தேவியர்கள் வெள்ளிக்கவசத்துடன் வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

    பின்னர்  மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஒலிக்க வெண்முத்து சப்பரத்தில் 4 ராஜ வீதிகளில்  திருவீதியுலா வந்தார்.

    காமாட்சி அம்மனை வரவேற்று வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள்  காத்திருந்து  கற்பூரம் ஆர்த்தி எடுத்து வணங்கி வழிபட்டு சென்றனர்.