Tag: June Monthly

  • Dhanusu June Monthly Prediction Shakthi Online 2024

    தனுசு:

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ  – பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்  – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக், சூர், குரு – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    09-06-2024 அன்று புதன் பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-06-2024 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-06-2024 அன்று சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-06-2024 அன்று புதன் பகவான்  களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றி பெறும் தனுசு ராசியினரே உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த மாதம் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் மாறுகிறார். இருப்பினும் தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரத்தை அதிகப்படுத்துவார். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.

    குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.

    கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

    மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

    மூலம்:

    இந்த மாதம் அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும்.

    பூராடம்:

    இந்த மாதம் தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

    உத்திராடம் – 1:

    இந்த மாதம் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரவு அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும்.

    பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;

    சந்திராஷ்டம தினங்கள்: 10, 11

    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Rishabam June Monthly Prediction – 2023

    ரிஷபம்:

    கிரகநிலை:

    ராசியில் சுக்ரன் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு,  குரு  என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    01-06-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    15-06-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-06-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    புதிய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.

    தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும். பணவரத்து திருப்தி தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பொருள்கள் விற்பனையாகும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.

    குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும்.  சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

    பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

    மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.

    கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். புதுத் தெம்புடன் பணியாற்றுவீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு பொன்னான காலகட்டம். நற்செயல்கள் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். அரசு வேலைகள் செய்யும் போது கவனம் தேவை.

    கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

    ரோகிணி:

    இந்த மாதம்  காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

    மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

    இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்தகாலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 05-06-2023 அதிகாலை 04:35 மணி முதல் 07-06-2023 காலை 07:39 மணி வரை

    அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA.

  • Kadagam June Monthly Prediction – 2023

    கடகம்:

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில் கேது –  அஷ்டம ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு,  குரு  – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    01-06-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-06-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-06-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    பயணங்களில் சந்தோஷம் அடையும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும்.

    தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும்.

    உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.

    குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

    கலைத்துறையினர் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் காணப்படுவீர்கள். வெற்றிகள் நிறைய கிடைக்கும். தூரதேச பயணம் மேற்கொள்வீர்கள்.

    அரசியல் வாதிகள் வாக்கு கொடுக்கும் போது கவனமாக இருக்கவும். தேவையில்லாத இடங்களில் நிறைய பேச வேண்டாம். கவனமாக இருக்கவும்.

    புனர் பூசம் 4ம் பாதம்:

    இந்த மாதம் எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும்.  

    பூசம்:

    இந்த மாதம் உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும்.  தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

    பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

    சந்திராஷ்டம தினங்கள்: 09-06-2023 காலை 10:01 மணி முதல் 11-06-2023 பகல் 12:37 மணி வரை

    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA.