Tag: June month

  • Midhuna rasi June month Rasipalan

    மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

    கிரகநிலை:
    ராசியில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு – லாப ஸ்தானத்தில் புத, ராஹூ, சுக்ரன்  – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் அயன சயன் போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும்  மிதுன ராசியினரே நீங்கள் எந்த சூழ்நிலையிலும் விவேகத்தை கை விடாதவர்.  இந்த மாதம் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 

    தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும்.

    குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். 

    பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். 

    கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். 

    அரசியல் துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

    திருவாதிரை:
    இந்த மாதம் உயர் பதவிகளும் கிடைக்க கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
    இந்த மாதம் எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

    பரிகாரம்:  புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
    சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 17, 18
    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 11, 12

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Meena Rasikku June month Rasi palan

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    இந்த மாதம் திருமணம் கைகூடும் காலம். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த சில கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். மற்றவர்களிடம் பேசும் போதும் கவனமுடன் வார்த்தைகளை பிரயோகப்படுத்துவது நல்லது. வர வேண்டிய பணம் வந்து சேரும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

    குடும்பத்தில் அடிக்கடி பூசல்கள் வந்து போகும். பூர்வீக சொத்துகள் தொடர்பான வழக்குகள் தள்ளிப் போகலாம். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் உபாதைகள் வந்து அடிக்கடி தொல்லைகள் தரலாம். முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த விசயங்கள் இப்போது ஓரளவிற்கு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.

    தொழிலில் உன்னத நிலைக்கு உயருவீர்கள். அவ்வப்போது பிரச்சினைகள் தொழிலில் ஏற்பட்டாலும் அதை திறம்படச் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தருவதால் உங்களுக்கு தொழிலைப் பற்றிய கவலை வேண்டாம்.

    உத்யோகஸ்தர்கள் தங்களது வேலைகளில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளை நீங்களே உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவீர்கள்.

    பெண்களுக்கு யோகமான காலகட்டம். விரும்பிய பொருட்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரும்பிய மணவாளன் கிடைப்பார்.

    மாணவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் தலை தூக்கலாம். கவனம்.

    கலைஞர்கள் சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும், அன்பும் உங்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள்  கிடைக்கப் பெறலாம்.

    அரசியல்வாதிகள் மூத்த அரசியல் வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள்

    பூரட்டாதி 4ம் பாதம்:
    இந்த மாதம் உங்களுக்கு வேண்டாத சிலரால் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு.  எல்லா இடங்களிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். 

    உத்திரட்டாதி:
    இந்த மாதம் கடந்த சில நாட்களாக இருந்த மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும். ஆசிரியர்கள் இடத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள்.

    ரேவதி:
    இந்த மாதம் பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். புதிய வீடு, மனை வாங்குவதில் தடைகள் ஏற்படலாம். 

    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30
    அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25,
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – செவ்வாய்
    பரிகாரம்; நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • viruchiga rasikku June month Rasi palan

    (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

    இந்த மாதம் இதுவரை நஷ்டமாக இருந்துவந்த அனைத்தும் லாபமாக மாறும். பண விஷயம் மட்டுமன்றி அனைத்து விஷயங்களிலும் மனம் மகிழும்படியான சூழலே காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நல்லபடியாக நடந்து முடியும். அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

    குடும்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் யதார்த்தமாய் பேசும் வார்த்தைகள் கூட சிலருக்கு மனதை காயப்படுத்தும்படி அமையும். எத்தருணத்திலும் யாருக்காகவும் பரிந்து பேச வேண்டாம். வீடு, மனை, வாகனம் போன்றவை நல்லபடியாக அமையும். உற்றார் – உறவினர் வருகை மனதிற்கு சந்தோசத்தை அளிக்கும். ஆரோக்கியம் நல்லபடியாக முன்னேற்றம் அடையும்.

    தொழில் ஏற்றுமதி – இறக்குமதித் துறையினருக்கு அனுகூலமான செய்திகள் வரக் கூடும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபடும் போது சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முக்கிய முடிவுகளை பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து செய்யுங்கள்.

    உத்தியோகஸ்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர் ஒருவரின் தேவைற்ற தலையீடு தங்களுக்கு மன வருத்தத்தை தரும். கடுமையாக பாடுபட்டு உழைத்தாலும் நற்பெயர் உங்களுக்கு கிடைப்பது சந்தேகமே!

    பெண்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.  அதனை தவிர்க்க முயன்ற முயற்சிகளை எடுங்கள். முக்கிய விஷயங்களில் ஒரு முறைக்கு இருமுறை கவனமுடன் செயல்படுவது நல்லது.

    மாணவர்கள் தொழில் சம்பந்தமான கல்வியில் சிறந்து விளங்குவார்கள். செய்முறைப் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

    அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்அரசியலில் உள்ளவர்களுக்கு உங்களுடைய   திறமைகள் முழுமையாக வெளிப்படும். மேலிடத்தில் ஆதரவு பெருகும்.

    கலைத்துறையினருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். சக   கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வீர்கள். 

    விசாகம் 4ம் பாதம்: 
    இந்த மாதம் தூர தேசப் பிரயாணம் ஏற்படும் ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள். மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். 

    அனுஷம்:
    இந்த மாதம் தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. தேவைகள் பூர்த்தியாகி மதிப்பும் மரியாதையும், அந்தஸ்தும் உருவாகும். 

    கேட்டை:
    இந்த மாதம் வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு, புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும், இப்பொழுது துவங்கலாம். தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடிக்க எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிடும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
    அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வெள்ளி
    பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • Dhanusu Rasikku June month rasi palan

    (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

    இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்திருந்த நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அல்லது அதற்கான காரியங்கள் முன்னேற்றப்பாதையில் செல்லும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவு பெறும். இதனால குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.

    குடும்பத்தில் அவ்வப்போது சில சண்டைகள் வரலாம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம். ஒருவர் கூறும் அறிவுரையை தட்டாமல் கேட்டுக் கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசி வீண் சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்ப விஷயங்களில் சற்று ஆர்வமுடன் செயல்பட்டால் மனசங்கடங்களைத் தவிர்க்கலாம். கணவன் – மனைவியிடயே கலந்து ஆலோசித்து எந்த காரியத்தையும் செய்வது நல்லது.

    தொழில் – வியாபாரிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். நிறுத்தி வைத்திருந்த சில முயற்சிகளை இப்போது மேற்கொள்வது நல்லது. வெளியூரிலிருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும். 

    உத்யோகஸ்தர்கள் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மேலிடம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றினாலும் அவை தானாகவே தெளிவு பெறும். கவலை வேண்டாம்.

    பெண்களுக்கு சில உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் செயல்பட்டு அவற்றை சரி செய்து கொள்ளுங்கள். சிறு தொந்தரவாக இருந்தாலும் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

    மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அதிகாரம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள்.

    கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும்.  சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

    அரசியல்வாதிகளுக்கு இந்த வாரம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவத்ற்கு ஏற்ற கால மிது. சமூக   வேலைகளில் இருப்பவர்களுக்கு புகழ் விருது கிடைக்கும்.

    மூலம்:
    இந்த மாதம் குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்து போவதினால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.

    பூராடம்:
    இந்த மாதம் நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் அலைச்சலும், வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். 

    உத்திராடம் 1ம் பாதம்:
    இந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். 

    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25,
    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன்
    பரிகாரம்: நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து நல்லெண்ணெய் விளக்கேற்றவும்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • thulam rasikku june month rasi palan

    (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

    இந்த மாதம் நிம்மதியான காலகட்டமாக இருக்கும். ஓய்வு எடுப்பீர்கள். கடுமையான உழைப்பிற்குப் பிறகு அதற்கான பலனை அடைவீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு  மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.

    குடும்பத்தில் குடும்பச் சூழ்நிலை ஓரளவு மனநிம்மதியைத் தரும். நெருங்கிய உறவினர்களிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டிருந்தால் இப்போது அது சரியாகி விடும். வீண் செலவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்ப ரீதியான முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அவற்றை சற்று தள்ளிப் போடுவது நல்லது. இல்லத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும். சொத்து பிரச்சினைகள் சாதகமாக முடியும்.

    தொழில் திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கேற்ற வருமானமும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அகலும். நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள் வேலைக்குச் சென்று வரும் அன்பர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதற்கு வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய நற்பெயர் உங்களுக்கு கிடைக்கும்.

    பெண்களுக்கு சுமாராகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவீர்கள். 

    மாணவர்களுக்கு மேற்கல்வி பயில வேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்யலாம்.

    அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

    கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். 

    சித்திரை 3, 4 பாதம்: 
    இந்த மாதம் யாருடனும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள். 

    சுவாதி:
    இந்த மாதம் உடனிருப்போரால் பிரச்சனை தோன்றி மறையலாம். சீராக வாழ்க்கை ஓடுவதாக தெரிந்தாலும் அவ்வப்போது குழப்பமான நிலையும் நிலவும். அரசியல்வாதிகள் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. 

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
    இந்த மாதம் அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல் படுவது உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக அமையும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன்
    பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிபட்டு வாருங்கள்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • Simma Rasikku June month Rasi palan

    (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

    இந்த மாதம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு இருக்கும். உங்கள் மீதான அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். என்றாலும் செலவுகள் சற்று அதிகரித்து காணப்படும். நீதிமனறத்தில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அதில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களுக்காக புதிய முயற்சி செய்வோர் புதிதாக வாங்கலாம். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் முன்னேற்றம் உண்டு.

    புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த லாபமும், விற்பனையும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடப்பதால் மனதிற்கு திருப்தி ஏற்படும்.

    உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைப்பதால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

    பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பணிக்குச் செல்லும் பெண்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

    மாணவமணிகளுக்கு நன்மைகள் நடக்கும். சிலர் எதிர்பார்த்த விசயங்கள் கை கூடி வரும்.

    அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பும் நேர்மையான போக்கும் உங்களைக் காக்கும். 

    கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.

    மகம்: 
    இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும். 

    பூரம்: 
    இந்த மாதம் மனைவி வழியில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

    உத்திரம் 1 :
    இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில்  மனநிம்மதி உண்டாகலாம்

    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8
    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – சனி
    பரிகாரம்:  சித்தர்கள் சமாதி சென்று வழிபட்டு வரவும்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • Kadaga Rasikku June month Rasi palan

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    இந்த மாதம் துணிவுடன் எந்த காரியத்தையும் செய்து முடிக்க நினைப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட காரியங்களில் எந்த யோசனையும் இன்றி செய்து முடிக்க முடியும் என்ற மனதைரியத்துடன் செய்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தருவதாகவும் இருக்கும். தெய்வ அனுகூலம் உங்களை அனைத்து காரியங்களிலும் உடன் இருந்து வழி நடத்தும்.

    குடும்பத்தில் மிகவும் ஆர்வமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சனைகளைக் கேட்டு நீங்களே முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். உடல்நலம் சரியில்லாதவர்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர் – சகோதரி யாரேனும் பிரிந்து சென்றிருந்தால் இப்போது ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. உற்றார் –  உறவினரின் வருகையால் இல்லம் சந்தோஷத்தில் மூழ்கும். 

    தொழில் அமோகமாக நடக்கும். நிறைய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சேமிப்பில் கவனத்தை செலுத்துங்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்காததால் சில சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.

    உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் இடத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் நன்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். வழக்கத்தை விட சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரும்.

    பெண்கள் பேச்சில் நிதானம் தேவை. குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வரும் போது பொறுமையைக் கையாளுங்கள்.

    மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில விரும்புவோர் இப்போது அதற்கான நற்செய்தியை எதிர்பார்க்கலாம். 

    அரசியல்துறையினருக்கு எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

    கலைத்துறையினர் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    புனர்பூசம் 4 :
    இந்த மாதம் எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். வங்கிக் கடன்கள் கிடைத்து அதன் மூலம் சில பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க முடியும்.தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். 

    பூசம்:
    இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். 

    ஆயில்யம்:
    இந்த மாதம் வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். 

    சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 
    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன்
    பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு வெள்ளை மலர் அணிவியுங்கள்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542