Tag: Iyappan

  • Tamilnadu Iyappan Temples

    திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. இங்கே 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்படுகின்றன.

    * சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.

    * சென்னை  அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.

    * சென்னை  ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

    * திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சி புரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

    * சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணியை பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.

    * கையில் பூச்செண்டுடனும் இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

    * கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணூல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

    * சபரிமலையில் ஐயப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும் ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.

    * சிதம்பரம் அருகே உசுப்பூரில், ஐயப்பனை, பரதேசியப்ப ஐயனார் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

    * விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.

    * திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன் விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும் விநாயகப் பெருமானும் அருள்கிறார்கள்.

    * பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.

    * ஈசன் பவனி வரும் திருவழகை உலாவாக்கினான் சேரமான் பெருமான். அதை பூவுலகிற்கு தெரியப்படுத்த அந்த ஏட்டுக்கட்டினை ஏந்திய ஐயனை அரங்கேற்றிய ஐயனார் எனும் பெயரில் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் பாதையில் உள்ள பிடவூரில் தரிசிக்கலாம்.

    * தென்காசி அருகே குற்றாலத்தில் நான்கு திசைகளிலும் ஐயன் அருள்புரிகிறார். இதில் மேலவாசல் தர்மசாஸ்தா, பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் அருள்புரிகிறார். பீட வடிவில் அருவமாக ஐயன் இங்கு அருள்வது சிறப்பு.

    * திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகே, ஏரிக்கரை ஓரத்தில் கர்ப்பிணி ஒருத்திக்கு கையில் விளக்கொளியுடன் சடைமுடியுடன் வந்து பிரசவம் பார்த்த ஐயன், பாலக வடிவில் நின்ற கோலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

    * சேங்காலிபுரம் அருகே எருமைத்தலை கிராமத்தில் மாவிலங்கை மரத்தடியில் யானை மீதமர்ந்த கம்பீரமான சாஸ்தாவை தரிசிக்கலாம்.

    * நெல்லை, பாளையங்கோட்டை, சாந்தி நகரில் சங்குகர்ணன் எனும் அரக்கனை அழித்த சண்பகாரண்ய சாஸ்தா எனும் மத்யாரண்யேஸ்வர சாஸ்தாவை தரிசிக்கலாம்.

    * மயிலாடுதுறை, வஸ்த்ரராஜபுரம் எனும் இடத்தில் தேவியரை அணைத்தபடி காட்சி தரும் ஐயனை தரிசிக்கலாம். இங்கு நாகம் ஒன்று ஐயனுக்கு காவலாக உள்ளதால் இவர் நாகசாஸ்தா என்றும் வணங்கப்படுகிறார்.

    * தஞ்சை, மெலட்டூர் அருகே சுரைக்காயூரில் ஐயன் தன் தேவியுடன் அருள்கிறார். வருடா வருடம் மெலட்டூரில் நடக்கும் பாகவதமேளாவில் ஹரிஹரபுத்ர ஜனனம் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.

  • Iyappan Slogam

    மாலை அணிபவர்கள் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்

    இதம் ஆஜ்யம், கமமண்டல
    கால மகரகால பரஹமசியவ்ர
    தேன ஹரிஹர புத்ர தர்ம
    சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

    பொருள்:

    ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.

  • 18 padigal iyappan

    ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்

    மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்

    ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்

    ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்

    எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்

    பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்

    பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்

    பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்

    பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்

    பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்

    பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்

    பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்

    பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்
     
  • Iyappan arupadai veedugal

    பொதுவாகச் சபரிமலை ஆலயம் எப்போதெல்லாம் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்? விரதமிருந்து போனால் மட்டும்தான் தரிசிக்க முடியுமா?’’ ‘‘அப்படியில்லை. 

    ஒவ்வொரு மலையாள மாதமும் ஒன்று முதல் ஐந்து தேதி வரை ஆலயம் திறந்திருக்கும். ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளிலிருந்து 41 நாட்கள்; மற்றும் கார்த்திகை முதல் தேதியிலிருந்து 41 நாட்கள் ஆலயம் பக்தர்களின் வருகையை எதிர்நோக்கித் திறந்திருக்கும். அதேபோல மார்கழி மாதம் 25ம் தேதி முதல் மகர விளக்கு தரிசனத்தை ஒட்டி, பன்னிரண்டு நாட்கள் திறந்திருக்கும். தவிர, பங்குனி உத்திரம், வைகாசி ஹஸ்தம் நட்சத்திர நாட்களிலும் திறந்திருக்கும்.

    ‘முருகனுக்கும், விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பதுபோல, நம் ஸ்வாமி ஐயப்பனுக்கு உள்ளனவாமே அப்படியா?’’ ‘‘ஆமாம், முதலாவது, குளத்துப்புழா.
    இந்தத் தலம் தமிழ்நாட்டில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சிறிய கோயிலில் ஐயப்பன் பாலகனாகக் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலின் உட்பிராகாரத்தில் தீர்த்த கிணறும், மகாவிஷ்ணு சந்நதியும் அமைந்துள்ளன. கூடவே இசக்கியம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். நாகதேவதை, சிவன், விநாயகர், சந்நதிகள் வெளிப்பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகில் ஓடும் குளத்துப்புழா நதியும் தெய்வீகமானது. குளத்துப்புழாவில் சித்திரை விஷு திருவிழா மிகவும் பிரபலமானது.  குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து நீராடி பாலகன் மணிகண்டனிடம் வேண்டி நின்றால், குழந்தை பாக்யம் கிடைக்கிறது. பிறந்த குழந்தைக்கு 9ம் மாதத்தில் இங்கு வந்து முதலில் உணவு ஊட்டி வழிபாடு நடத்தினால் குழந்தை நோய், நொடியின்றி விளங்குகிறது.

    இரண்டாவதாக, அச்சன் கோயில். மேலே சொன்ன செங்கோட்டையிலிருந்து 30 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம், அச்சன் கோயில் வனத்தில் இந்தக் கோயில் உள்ளது. அச்சன் கோயிலின் அரசனாக பூர்ண-புஷ்கலா தேவியுடன் அரசாட்சி செய்கிறார் ஐயப்பன். ஐயப்பனின் வலப்புறம் அரசனின் ஐயப்பனை நாடி வரும் பக்தர்களுக்கு தம் பங்காகவும் அருள்பாலிக்க தந்தையார் சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

    மூன்றாவது எருமேலி.  கேரளா மாநிலத்திலுள்ள மணிமாலா நதியிலிருந்து பிரியும் கிளை நதிக்கரையில் எருமேலி சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ஐயப்பன் சாஸ்தாவாக சாந்த சொரூபனாக நின்ற நிலையில் கையில் வில், அம்பு ஏந்தி தரிசனம் தருகிறார். கோயில் வெளிப்பிராகாரத்தில் ‘அம்மே நாராயணா’ சந்நதி உள்ளது. இங்கு பிற தெய்வங்கள் கிடையாது. சற்று தொலைவில் பேட்டை துள்ளல் வசந்தவிழா பக்தி பூர்வமாக நடைபெறுகிறது.

     நான்காவது ஆரியங்காவு. இத்தலம் செங்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கேரளா எல்லையில் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. வனப்பகுதியில், தரையிலிருந்து 300 அடி ஆழத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில், மதுரை பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. பூஜை வழிபாடுகள் தமிழக கோயில் கலாசாரத்தைப் பின்பற்றியே நடைபெறுகின்றன. ஆரியங்காவு ஐயப்பன் தமிழ்ப்பெண் புஷ்கலாதேவியை இங்கு திருமணம் முடித்தார் என்பதற்கு புராண ஆதாரம் உண்டு.  ஆரியங்காவு கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள், மண்டல பூஜையும், நவராத்திரி திருவிழாவும். ஐயப்பன் சந்நதி அருகே மாம்பழத்துறை பகவதி புஷ்கலாதேவி சந்நதியுள்ளது. இந்த சந்நதி, திருக்கல்யாண உற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவத்திற்கு மட்டுமே திறக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வந்து திருக்கல்யாணம் பார்த்து மஞ்சள் கயிறு பிரசாதம் பெற்றுச் சென்ற சிறிது காலத்திற்குள்ளேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது.

    ஐந்தாவது, பந்தனம். திருவனந்தபுரம், எம்.ஜி.சாலையில் உள்ள, ஐயப்பன் மணிகண்டனாக வாழ்ந்த பழைய அரண்மனை எதிரே வாழியக் கோயிலில் உள்ள கருவறையில் ஐயப்பன் விக்ரக வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எதிரே பம்பை நதி பாய்கிறது. இங்கேதான் ஐயப்பன் பந்தள மன்னனால் குழந்தையாக கண்டெடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. பங்குனி உத்திரம் நாள் ஐயப்பனின் அவதார தினவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சித்திரை விஷு, மண்டல பூஜை, மகர ஜோதி விழாவும் கொண்டாடப்படுகின்றன. பந்தளம் கோயிலே,  கேரளா ஐயப்பன் கோயிலின் மூலம் ஆகும்.

    ஆறாவதாக சபரிமலை. இங்கு ஐயப்பன் கோயில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. பம்பையிலிருந்து நடைப்பயணமாக நான்கு கி.மீ. தொலைவு. எரிமேலியிலிருந்து பெருவழி நடைபாதையில் 42 கி.மீ. தொலைவு. சபரிமலை வனத்தில் 18 படி நடை வைத்து கலைநயத்துடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் கட்டப்பட்டுள்ள கோயில் அமைப்பு மிக வித்தியாசமானது. 18 படி ஏறி கோயில் வாயிலின் உள்ளே சென்றால் எதிரே தங்கக் கொடிமரம் காட்சியளிக்கிறது. சோபன மண்டபத்தை அடுத்து தங்கக் கூரை வேய்ந்த கருவறையில் ஐயப்பன் கொலுவிருக்கிறார். ஐயப்பன் கோயில் பிராகாரத்தைச்சுற்றி நாகர், விநாயகர், காவல் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பதினெட்டாம்படி அருகே கருப்பசாமியும், கருத்தசாமியும் காவல் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். ஐயப்பனுக்கு முக்கியமாக நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. சந்தனபிஷேகம், புஷ்பாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியவை பிற அபிஷேகங்களாகும்.

    உதய ஸ்தமன பூஜை, உஷத் பூஜை, உச்சி பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை முக்கியமான பூஜைகளாகும், 18ம் படி பூஜையும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் 10ம் நாள் ஆராட்டு உற்சவம் மிக முக்கியமானது. இந்த நாட்களில் உற்சவ பலி தரிசனம், ஸ்ரீபூதபலி பூஜை, சுவாமி பள்ளிவேட்டை பம்பை நதியில் ஆராட்டு ஆகியவை பிரதான சம்பிரதாயங்களாக நடத்தப்படுகின்றன.’’
     
  • Sabari Malai Iyappan kuthukalittu

    சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

    ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

    ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

    ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.
     
  • Iyappan Thavam

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.

    அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

    சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.

    அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

    அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

    சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

    சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

    ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

    வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

    குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
     
  • Sabarimalai Iyappan Koil Thirappu

    சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9 ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது. 

    கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.

    இதனையடுத்து வரும் 9 ஆம் தேதி முதல் கேரளாவில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

    கோயில்களின் அளவைப்பொறுத்து பக்கதர்களை அனுமதிப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து. அதாவது 100 சதுர மீட்டருக்கு 15 நபர்கள் மட்டுமே 6 அடி இடைவெளியுடன் நிற்க வேண்டும். அதிகபட்சமாக 100 பக்தர்கள் மேல் கோயில் வளாகத்துக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே நேரத்தில் 50 பக்தர்கள் மேல் அனுமதி்க்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Iyappan Iru mudi magimaigal

    சபரிமலை ஐயப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.

    செல்லும் பாதை படு மோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும். மகனைக் காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார். நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்ப்பண்டங்களை கொண்டு செல்வார்.

     நெய்ப்பண்டம் அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த வழக்கத்தின் காரணமாகத்தான் பிற்காலத்தில் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டுபோகும் பழக்கம் ஏற்பட்டது.

  • Sabari Malai Iyappan Dhavam

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.

    அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

    சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.

    அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

    அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

    சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

    சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

    ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

    வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

    சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

    ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

    ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

    ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.

    குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

  • Iyappan Viradham Karuppu Udai

    மானிடர்களை சனி பகவானின் ஏழரை வருடம் தண்டிக்கிறீர்கள். அவர்களுக்கு நல்லருள் அருளக் கூடாதா என சனீஸ்வரரிடம் ஐயப்பன் கேட்க, அதற்கு அது என் தர்மம், பிரம்மன் படைத்தலும், மகா விஷ்ணு காத்தல், ஈசன் அழித்தன் என வேலையை செய்கின்றனர்.

    படைத்தல், காத்தல், அழித்தல் தர்மம் என்றால், அது தடைப்பட்டால் எப்படி சிருஷ்டி இயங்காதோ, அதே போல், நான் கர்ம வினைகளுக்கு ஏற்ப மானிடரைத் தண்டிக்காவிட்டால் என் தர்மம் என்ன ஆகும் என சனீஸ்வர் கேட்டார்.

    அதோடு மானிடர்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப தண்டனை அளிக்காவிட்டால் எப்படி சிருஷ்டி இயங்கும் என சனீஸ்வரர் கேட்டார்.

    சிருஷ்டி என்பது மனிதர்களின் சந்தோசத்திற்கும், ஆனந்த அமைதிக்கும் தான் சிருஷ்டி செயல்படுகிறது. மானிடர்களின் கர்ம வினை பலன்களை தரத்தானே நீ உள்ளாய். சரி என கூறி, ஐயப்பன் பல்வேறு தண்டனைகள் அடங்கிய விதிகள் அதாவது விரதத்தை கடைப்பிடிப்பது குறித்து வாக்கு கொடுத்தார்.

    சனீஸ்வரர் தன் ஏழரை ஆண்டுகால பிடியில் ஒருவனுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை வழங்குகிறார் என்பதையும், அதற்கேற்றார் போல் விரதத்தை அமைத்து, சனீஸ்வரரின் தீய பார்வையிலிருந்து தன் பக்தர்களை காக்க ஐயப்பன் விரத முறையை அமைத்தார். ஒரு மண்டல காலம் விரதம் இருக்கும் ஒருவருக்கு சனீஸ்வரரின் கொடும் பார்வையிலிருந்து காத்து அருள கேட்டுக் கொண்டார்.

    ​ஒரு மண்டலத்தில் ஏழரை ஆண்டு கால தண்டனை

    ஒரு மண்டலம் விரதம் இருக்கும் ஒருவருக்கு, ஏழரை ஆண்டு கால தண்டனையை எப்படி கொடுப்பது என சனி பகவான் கேட்டார்.

    சனீஸ்வரரின் ஏழரை ஆண்டு தண்டனை எப்படி ஒரு மண்டலத்தில் பொருந்தும் என்பதை ஐயப்பன் விளக்கினார்.

    சனீஸ்வரர்….
    விதவிதமான உணவு உண்டு, பழ ரசங்களை அருந்தி மகிழும் பலரை, சோற்றுக்கே வழியின்றி அலைய வைப்பேன். அதனால் அவர்கள் பட்டினியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்றார்.

    ஐயப்பன்….
    தன் பக்தர்கள் எளிமையான உணவை ஒரு பொழுது உண்பார்கள்.

    சனீஸ்வரர்….
    மலர் தூவிய மஞ்சத்தில் உறங்கிய மன்னவனைக் கூட கல்லிலும், மண்ணிலும் உறங்க வைப்பேன் என்றார்.

    ஐயப்பன்…. 
    என் பக்தர்கள் கட்டிலில் உறங்காமல், வெறும் தரையில் படுத்து உறங்குவார்கள் என்றார்.

    சனீஸ்வரர்….
    முக்கிய விஷயம் என்ன வென்றால், என் பார்வை பட்டால் இணைந்திருக்கும் தம்பதியர் கூட பிரிந்து விடுவார்கள்.

    ஐயப்பன்….
    கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தை உச்சரித்து, காடு, மேடுகளை கடந்து என் தரிசனத்திற்கு வருவார்கள். அப்படி வரும் பக்தர்களை நீ ஒரு கணம் கூட பிடிக்கக் கூடாது, அவர்களுக்கு சுக சௌக்கியங்களைத் தான் அளிக்க வேண்டும் இது என் அன்பு வேண்டுகோளும், கட்டளையும் ஆகும் என்றார்.

    கருப்பு உடை

    சனீஸ்வரர்….
    கட்டிக் கொள்ள உடை இல்லாமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், தன்னை தானே கண்டுகொள்ள முடியாத படி உருவம் சிதைந்து, செயலிழந்து, சக்தியின்றி வாடிப் போக வைத்துவிடுவேன்.

    ஐயப்பன்…. 
    உனக்கு பிடித்த வண்ணம் கருப்பு தானே. விரத காலத்தில் கருப்பு உடை அணிந்து, காலணி கூட அணியாமல், முடி கூட திருத்திக் கொள்ளாமல், மணி மாலை அணிந்து, சுக சௌக்கியங்களில் ஒதுங்கி நிற்பார்கள். அனைவராலும் சுவாமி என அழைக்கப்படுவார்கள். நீங்கள் சொன்ன கஷ்டங்களை எல்லாம் பக்தி சிரத்தையோடு ஏற்று அதை விரதமாக கடைப்பிடிப்பார்கள்.

    விரதம் முக்கியம்
    சனீஸ்வரர்…. 
    மனம் மிகு பன்னீரில் குளித்தவர்களைக் கூட, நான் வெறும் தண்ணீருக்கே அல்லாட வைப்பேன்.

    ஐயப்பன்…. 
    உதயத்திலும், மாலையிலும் பச்சை தண்ணீரில் என் பக்தர்கள் குளிப்பதை பக்தி சிரத்தையுடன் ஏற்பார்கள்.

    தர்ம சாஸ்தாவின் இந்த கட்டளையை சிரமேற்கொண்டு சனிபகவான் இன்றும் ஐயப்ப பக்தர்கள் கொடும் பார்வை செலுத்தாமல் நன்மையை செய்து வருகின்றார்.

    இப்படி சனிபகவானை ஐயப்பன் சம்மதிக்க வைத்து, தன் பக்தர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விரதமாக வைத்துள்ளார். இதன் காரணமாக தான் கருப்பு உடை உடுத்தி ஐயப்ப பக்தர்கள் கடும் விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர்.

    சாமியே சரணம் ஐயப்பா…