Tag: Iswaryam

  • Iswaryam tharum kavi kolam

    ராமாவதாரத்தில்,வனவாசத்தின் போது, சீதையை ராவணன் கவர்ந்து செல்ல தேடி ராமரும் அவரின் சேனைகளும் அன்னையை நாலாபுறம் தேடிக் கொண்டிருந்தனர். இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே என்றும்  அதனை நிறைவேற்ற அன்னை பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்றும் சொல்கிறார் நாரத மாமுனி.

    நாரதரின் ஆலோசனைப்படி ,மிகவும் சிரத்தையுடன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் ராமருக்கு,அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை அவருக்கு  நினைவுபடுத்தி, ' தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் சகோதரன் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்று அருளினாள்.

    இத்தகைய மகத்துவம் வாய்ந்த நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் எண்ணிலடங்காதது.திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்ய சிவ பெருமான் இந்த விரதத்தை கடைப்பிடித்ததாக புராணம் கூறுகிறது. மேலும்  விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், இந்த விரதத்தை  அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.

    நவராத்திரி நாட்களில் கொலுவீற்றிருக்கும் அம்பிகையின் முன்  சுண்ணாம்பு மாவினால் ஆன கோலம் போடக்கூடாது.அதற்கு பதில் அரிசி மாவைப் பயன்படுத்த வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும். நவராத்திரி கோலத்தை சுற்றி காவியால் கோடிட்டு போட்டால் ஐஸ்வர்யம் பெருகும்.

    நவராத்திரி காலங்களில் காலையில் செய்யப்படும் பூஜை சிவனுக்கும், மாலை இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு  உகந்தது. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்து துவங்க வேண்டும்.  நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்தால் அம்பிகையோடு அய்யனின் அருளும் கிடைக்கும். . நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று விரதமிருந்து வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். சப்தமி திதியில், ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது  மென்மேலும் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் நிறைவாகும்.

  • Iswaryam tharum mahalakshmi mandiram

    மஹாலக்ஷ்மி அன்னையை மனதில் நினைத்து அனைத்து வெள்ளிகிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் கற்பூரம் ஏலக்காய் கலந்த காய்ச்சிய பால் மற்றும் வெற்றிலைபாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் போன்றவற்றை அன்னைக்கு படைத்து

    “ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ”

    என்னும் மந்திரத்தை உச்சரித்தால் தொழில் முன்னேற்றம் அடைந்து வளம் பெருகும்.

    இந்த மந்திரத்தின் பொருளானது, "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள உம்மை வேண்டுகிறேன்" என்பதாகும்.

    இவ்வாறு விளக்கேற்றி தீபத்தை வணங்கி பூஜித்து தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொண்டு. தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொண்டால் சிறந்த பலன்களைத் தரும். மற்ற சாதாரண நாட்களில் தம்மால் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்

  • Iswaryam peruga silai

     நாம் வீட்டில்  பூஜையறையில் தெய்வங்களின் படங்களுடன் ஒருசில வீடுகளில், உள்ள பூஜையறைகள் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பலரும் பல வித்தியாசமான மற்றும் அழகிய தெய்வ சிலைகளை வாங்கி வந்து பூஜையறையில் வைப்பார்கள். தெய்வ சிலைகள் வீட்டில் இருப்பது மிகவும் நல்ல விஷயமாகும்.

    அதிலும் இந்த மூன்று தெய்வங்களின் சிலைகள் உங்கள் வீட்டில் இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமும், ஐஸ்வர்யமும் கிடைக்கும். அதாவது, மஞ்சள் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

    ஆலமரம், மாமரம் அல்லது வேப்ப மரத்தாலான விநாயகர் சிலையை பூஜையறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இத்தகைய சிலையை வீட்டில் வைத்திருந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

    பூஜையறையில் சிவபெருமான் தியானம் செய்வது போன்ற சிலையை வைத்திருப்பது மிகவும் நல்லது. ஆனால், சிவபெருமான் நடனம் ஆடுவது போன்ற சிலையை வைத்திருக்கக்கூடாது. ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜையறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே, ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்குங்கள்.