Tag: is the month of April favorable?.. unfavorable?.. Here is your monthly horoscope..!

  • Scorpio lovers, is the month of April favorable?.. unfavorable?.. Here is your monthly horoscope..!

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில்  புதன் , சனி – பஞசம  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – ரண ருண ரோக  ஸ்தானத்தில்  சந்திரன் –  களத்திர  ஸ்தானத்தில்

    குரு – அஷ்டம  ஸ்தானத்தில்  செவ்வாய் –  லாப  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    புதிய உறவுகள் அதிகம் கிடைக்கப் பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம்  வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். 

    உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். 
    தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. அனுபவமிக்கவர்களுடன் கலந்து ஆலோசித்து முதலீடு செய்வது நலம். உங்கள் முயற்சி வீண் போகாது. 

    குடும்பத்தில் பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். 
    கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

    அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
    பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. 
    மாணாவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். 

    விசாகம் 4ம் பாதம்:

    இந்த மாதம் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

    அனுஷம்:

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. . குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். 

    கேட்டை:

    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். 

    பரிகாரம்: அறுபடை வீடு முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறி யான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை  வளம் பெறும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

    அதிர்ஷ்ட தினங்கள்:  25, 26

  • Capricorn lovers, is the month of April favorable?.. unfavorable?.. Here is your monthly horoscope..!

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  புதன் , சனி – தைரிய வீரிய  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – சுக ஸ்தானத்தில்  சந்திரன் –  பஞசம ஸ்தானத்தில்  குரு – ரண ருண ரோக  ஸ்தானத்தில்  செவ்வாய் –  பாக்கிய ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கொடுத்த வேலையை சிரமேற்க்கொண்டு செய்யும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். 
    உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். 

    தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.  குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக்க் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். 
    கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

    அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது. பெண்களுக்கு குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் – மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.  மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். 

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

    திருவோணம்:

    இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை.

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.

    பரிகாரம்: வில்வ இலையைப் பறித்து சிவனுக்கு அர்ச்சனைக்குக் கொடுக்கவும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

    சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10

    அதிர்ஷ்ட தினங்கள்:  2, 3, 29, 30
     

  • Zodiac lovers, is the month of April favorable?.. unfavorable?.. Here is your monthly horoscope..!

    கிரகநிலை:

    ராசியில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன்  – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  சந்திரன் –  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  குரு – சுக ஸ்தானத்தில்  செவ்வாய் –  களத்திர  ஸ்தானத்தில்  கேது –  அயன சயன போக  ஸ்தானத்தில்  புதன் , சனி என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் ராசியில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    காரியமே கண்ணாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம்  எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி வம்பிழுக்கும் மனிதர்கள் உங்களை சூழ்ந்து இருக்கலாம். 

    உத்யோகஸ்தர்களுக்கு வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. 
    தொழில் செய்பவர்கள் யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும். 

    குடும்பத்தில் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசுங்கள். பண விஷயங்களில் மிகவும் கறாராக இருக்கவும். தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். தைரியம் பிரகாசிக்கும் காலமிது. ஆனாலும் அசட்டுத்தைரியம் வேண்டாமே. தாயார் தாய்வழி உறவினர்களுடன் உறவுகள் மேலோங்கும். வீடு, மனை, வாகனம், ஆபரணங்கள் யோகம் கூடி வரும் காலமிது. 
    கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். 

    அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள்.  பெண்களுக்கு பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபடாதீர்கள். உடல்நிலையில் சீரான நிலை இருந்தாலும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மிகுந்த எச்சரிக்கை தேவை. 
    மாணவ மணிகள் படிப்பில் சாதனைகள் புரியலாம், ஆனால் சோம்பல் கூடவே கூடாது. எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை வீட்டிலுள்ளவர்களிடம் ஆலோசித்து செய்யவும். 

    பூரட்டாதி 4ம் பாதம்:

    இந்த மாதம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் உங்கள் தொழிலில் உங்களுக்கென தனி முத்திரையை பதிப்பீர்கள். சிலருக்கு வாக்கு கொடுக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்படும். மிக அருமையாக உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

    ரேவதி:

    இந்த மாதம் பெரியோர்களின் ஆசி உண்டாகும். ஆடை, அணிகலன் புதிதாக வாங்குவீர்கள். சிலரின் பொறாமைக்கு ஆளாவீர்கள். உன்னத நிலைக்கு செல்ல வேண்டி மனம் ஏங்கும்.

    பரிகாரம்: சிவனை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

    சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15

    அதிர்ஷ்ட தினங்கள்:  6, 7, 8
     

  • Taurus lovers, is the month of April favorable?.. unfavorable?.. Here is your monthly horoscope..!

    கிரகநிலை:

    ராசியில்  குரு – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  செவ்வாய் –  பஞசம  ஸ்தானத்தில்  கேது –  தொழில்  ஸ்தானத்தில்  புதன் , சனி – லாப  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – அயன சயன போக  ஸ்தானத்தில்  சந்திரன் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை விரும்பாத ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம்  முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. 

    குடும்பத்தில் வாழ்க்கைதுணையுடன் உறவு சிறக்கும். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும். 
    உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. 

    தொழில் செய்பவர்கள் உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். 
    கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.
    அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

    மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை. 
    பெண்களுக்கு வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள். 

    கார்த்திகை 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடவுள் பக்தி  அதிகரிக்கும். 

    ரோகிணி:

    இந்த மாதம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். 

    மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

    இந்த மாதம் கொடுக்கல், வாங்கல்,  சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.

    பரிகாரம்: அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்   தொழில் சிறக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

    சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்:  11, 12
     

  • Leo lovers, is the month of April favorable?.. unfavorable?.. Here is your monthly horoscope..!

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  கேது –  களத்திர  ஸ்தானத்தில்  புதன் , சனி – அஷ்டம  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் –  தொழில்  ஸ்தானத்தில்  குரு – லாப  ஸ்தானத்தில்  செவ்வாய் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    மற்றவர்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம்  வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும். 

    குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. 
    உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும் போதும் கவனமுடன் பேசவும். தேவையில்லாதவற்றை பேச வேண்டாம்.

    தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். பாராட்டுகளும், பரிசுகளும் குவியும். 

    கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

    அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
    பெண்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். தந்தையாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும். 
    மாணவர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். 

    மகம்:

    இந்த மாதம் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். 

    பூரம்:

    இந்த மாதம் கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும். 

    உத்திரம் 1ம் பாதம்:

    இந்த மாதம் அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்கு நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது. 

    பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

    சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

    அதிர்ஷ்ட தினங்கள்:  18, 19, 20