Tag: How to automatically anoint the Shivalinga with the holy water that flows from Nandi’s mouth?

  • How to automatically anoint the Shivalinga with the holy water that flows from Nandi’s mouth?

    தொன்மை வாய்ந்த கோவில்களில் ஏதேனும்" வியப்பூட்டும் கலை அம்சமோ " கட்டிட வடிவமைப்பு "அல்லது புராண கதைகள் இருக்கும், ஆனால்"பல நூற்றாண்டுகளாக நந்தி வாயிலிருந்து புனித நீரானது பெருக்கெடுத்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் அதிசய கோவில் எங்கே உள்ளது தெரியுமா " ? 
    கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ  தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவிலில் உள்ளது, இங்கு அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

    மற்ற ஆலயங்களில் உள்ளது போன்று நந்தி சிலை இருப்பினும், ஈசனுக்கு  எதிர்ப்புறமாக காட்சி அளிக்காமல், மாறாக நேர்  மேலே அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிசயம் என்னவென்றால், அந்த நந்தியின் வாயிலிருந்து வழிந்து வரும் புனித நீரானது,  கீழே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் விதமாக உள்ளது. இந்த நிகழ்வானது நேற்று, இன்று நடைபெறுவது அல்ல' பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்ட நாள் முதலாகவே" நந்தியின் வாயிலிருந்து புனித நீரானது கொட்டுகிறது.
    சிவபெருமானுக்கு அந்த புனித நீர் அபிஷேகம் முடிந்தபின் அந்த நீரானது அங்குள்ள கோவில் திருக்குளத்தில் சென்று சங்கமம் ஆகிறது, நந்தியின் வாயில் இருந்து பெருக்கெடுத்து வரும் ஊற்று  நீரானது  சிவலிங்கத்தின் மீது விழும்படி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருப்பினும்.

    அந்த ஊற்று நீர்  எங்கிருந்து வருகிறது. என்பதை இதுவரை நவீன தொழில்நுட்ப கருவிகளால் கூட கண்டறிய முடியவில்லை. மேலும், அந்த தீர்த்தத்தில் சகல நோய்களையும் தீர்க்கும் அபூர்வ சக்தி உள்ளதாகவும், அதனை உட்கொண்டால்  தீராத நோய்கள் எல்லாம் தீரும் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதும், நந்தி தேவரே நேரடியாக புனித நீர் கொண்டு சிவபெருமானின் லிங்க திருமேனிக்கு அபிஷேகம் செய்வதாக ஐதீகம், என்பதால் நாள்தோறும் இந்த நந்தி அபிஷேகத்தை கண்டு சிவன் அருளை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்