Tag: Guru Peyarchi

  • Guru Peyarchi Guru Temples

    குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன. இவற்றுள் திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

    பஞ்சலிங்க தலம்

    திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

    குரு பகவான்

    நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

    இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.  

    இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

     குரு பெயர்ச்சி யின் போது  ராஜ குருவுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், யாகங்களும் நடைப்பெற்றது. இதையோட்டி லட்சார்ச்சனையும் நடந்தது.

    வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். 

    மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம்

    இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன. 

     இறைவன்  மீது  சொட்டும்  நீர்

    நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

    தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

  • Alangudi Guru ;Peyarchi

    குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததை தொடர்ந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.  இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

    இந்த ஆண்டு குருபகவான் இன்று அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடந்தது. அதிகாலை குருப்பெயர்ச்சி நடந்தபோது குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

     முன்னதாக குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபரிகார யாக பூஜைகள் நடந்தன. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் தெட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் குரு கோஷங்களை எழுப்பி குருபகவானை தரிசனம் செய்தனர்.


    வருகிற 31-ந் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 7-ந் தேதி முடிய இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.

  • Guru Peyarchi Atchi

    பொதுவாக தனுசு ராசி என்பது ப்ரம்மம் அதாவது உயிர் சம்பந்தபட்ட ராசியாகும். இதன் அதிபதி தேவ குருவாகிய குருதான். திறமை – ஒழுக்கம் – நேர்மை – தெய்வ நம்பிக்கை – பெரியோரை மதித்தல் – மங்கள காரியங்கள் – குழந்தை  ஆகிய விஷயங்களுக்கு குரு அதிபதியாவார். 

    பொது பலன்கள்:
    நாடு மற்றும் பொருளாதாரம்:
    சுய வீட்டிற்கு குரு மாறுவதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.  விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். 

    உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை,  அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது  எண்ணிக்கை உயரும்.  அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது  அவசியம்.  

    வானிலை:
    இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். 

    ஆன்மீகம் மற்றும் கோவில்கள்:
    புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். வெள்ளிகிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.  

    பொது:
    பல முக்கிய வழக்குகளுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். குரு இல்லறத்தின் காரக கிரகமான சுக்கிரன் வீட்டில் இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும். 

    ஆரோக்கியம்:
    நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

    குடும்பம்:
    கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

    அரசியல்:
    அரசியலில் திடீர் மாற்றங்கள்  உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.
     

  • Guru Peyarchi Pothu Palan

    நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

    இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

    குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:
    நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும். 

    குருவின் பலம்:
    குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

    நிகழும் மங்களகராமன கல்யப்தம் 5120 – சாலிவாகனம் 1941 – பசலி 1429 – கொல்லம் 1195 – ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – ஐப்பசி மாதம் 11ம் தேதி பின்னரவு 12ம் தேதி முன்னிரவு (ஆங்கிலம்: 29.10.2019) அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லப்க்ஷ ப்ரதமை – விசாக நக்ஷத்ரம் – ஆயுஷ்மான் நாமயோகம் – கிம்ஸ்துக்னம் கரணம் – சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 54.14க்கு (அதிகாலை மணி 3.49க்கு) கன்னியா லக்னத்தில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். 

    தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி  மாதம் 30ம் தேதி – 15.11.2020 – ஞாயிற்றுக்கிழமையன்று மாறுகிறார். 
    தனுசு ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும் – ஏழாம் பார்வையால் மிmதுன ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். 

    பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
    நன்மை பெறும் ராசிகள்: மேஷம் – மிதுனம் – சிம்மம்
    நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கன்னி – விருச்சிகம் – தனுசு – கும்பம் – மீனம்
    பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் – கடகம் – துலாம் – மகரம்
     

  • Meena Rasi Guru Peyarchi

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள். 

    கிரகநிலை:
    இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருந்த ராசிநாதன் குருபகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். தொழில் ஸ்தானத்தில் இருந்து உங்களது தன வாக்கு குடும்ப – சுக ஸ்தானம் – ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு சுக ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    தொழில் ஸ்தானத்திற்கு மாற்றம் பெற்றிருக்கும் ராசிநாதன் குருவால் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.  எனினும் நன்மைகள் உண்டாகும்.  பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

    குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும்.

    பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

    விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். கழனிகளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.

    கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும்.

    மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

    பூரட்டாதி 4ம் பாதம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். 

    உத்திரட்டாதி: 
    இந்த குரு பெயர்ச்சியால் பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

    ரேவதி:
    இந்த குரு பெயர்ச்சியால் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். 

    பரிகாரம் : பைரவரை வழிபட்டு வரவும். தேய்பிறை அஷ்டமி திதியை "பைரவாஷ்டமி' என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: நவக்கிரக துதி சொல்லவும். 
    மலர் பரிகாரம்: “அருகம்புல்லை” எடுத்து மாலையாக கட்டி அருகிலிருக்கும் வினாயகருக்கு அர்ப்பணித்து வர அனைத்து தடையில்லாமல் நடந்தேறும்.
    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்: 3, 6
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • Dhanusu Rasi Guru Peyarchi

    (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

    எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். தொலைநோக்கு சிந்தனை உடைய  அதே நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  செயலாற்றும்  திறன் உடையவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகமாக இருப்பவர்கள். 

    கிரகநிலை:
    இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருந்த ராசிநாதன் குருபகவான் ராசிக்கு மாறுகிறார். ராசியில் இருந்து உங்களது பஞ்சம – களத்திர ஸ்தானம் – பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு களத்திர ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி ராசியிலும்,  சஞ்சாரம் செய்கிறார்கள். 

    ”ஜென்ம குரு ராமர் வனத்திலே” என்பதற்கேற்ப ஜென்மத்தில் வந்திருக்கும் குரு பகவானால் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம்.  பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். தாமதமான  போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள்  மனதுக்கு  சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.

    தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

    குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.  மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.  

    பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.

    விவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். மேலும் இக்காலத்தில் நீர் வரத்தும் குறைவாக இருக்கும். அதனால் பாசன வசதிகளுக்காக, சேமிப்பைக் கரைக்க நேரிடும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். 

    கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். 

    மாணவர்களுக்கு: கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு:   உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். 

    மூலம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது.  வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். 

    பூராடம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

    உத்திராடம் 1ம் பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. 

    பரிகாரம்: முடிந்த போதெல்லாம், அல்லது வியாழகிழமைகளில் மட்டுமாவது குருவை வழிபடவும். 
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்வது நன்மையைத் தரும்.
    மலர் பரிகாரம்: “துளசி” தளத்தை  பெருமாளுக்கு வியாழன் தோறும் அர்ப்பணித்து வணங்கிவர அவரின் கிருபை கிடைக்கும்.
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
    அதிர்ஷ்ட எண்: 9, 3

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

     

  • Kanni Rasi Guru Peyarchi

    (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் கன்னி ராசியினரே, "கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப நீங்கள் யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். புத்திகாரகனான புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள் நீங்கள். 

    கிரகநிலை:
    இதுவரை உங்களது தைரிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். சுக ஸ்தானத்தில் இருந்து உங்களது அஷ்டம – தொழில் ஸ்தானம் – அயன சயன போக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தொழில் ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி சுக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    உங்களுடைய சுகஸ்தானத்திற்கு மாற்றம் பெற்றிருக்கும் குருபகவானால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

    பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

    விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள். 

    அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.  புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். 

    கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.

    மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்

    உத்திரம் 2, 3, 4 பாதம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். 

    அஸ்தம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

    சித்திரை 1, 2, பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். 

    பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: “புருஷசூக்தம்” பாராயணம் செய்யவும்.
    மலர் பரிகாரம்: “துளசியை” பெருமாளுக்கு படைத்துவர வாழ்வில் புத்தொளி பிறக்கும். 
    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • simma rasi guru peyarchi

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    அதிகாரமும் தோரணையும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே "ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். ராஜகிரகமான சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பஞ்சம ஸ்தானத்தில் இருந்து உங்களது பாக்கிய – லாப ஸ்தானம் – ராசி – ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு லாப ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறியிருக்கும் குரு உங்கள் ராசியை ஒன்பாதம் பார்வையால் பார்த்து அருள் செய்கிறார். இதன் மூலம் பல விதமான நற்பலன்களை அடையப் போகிறீர்கள். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், 

    பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

    விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள். 

    அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.

    கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். 

    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

    மகம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

    பூரம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து திருப்தி தரும்.  நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும். 

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

    பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
    மலர் பரிகாரம்: “செந்தாமரை மலரை” அமாளுக்கு சாத்திவர தீமைகள் அகலும். 
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
     

  • Mesham Guru peyarchi

    (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

    நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும் மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு செய்வது மிகவும் கடினம். மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் மேஷ இராசி வாசகர்களே, உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ஆவார். 

    கிரகநிலை:
    இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பாக்கிய ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி – தைரிய ஸ்தானம் – பஞ்சம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தைரிய ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    பாக்கியஸ்தானத்திற்கு வந்திருக்கும் குரு பகவான் உங்களது ராசியை ஐந்தாம் பார்வையால் பார்க்கிறார். இதன் மூலம் பல விதமான நற்பலன்களைப் பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும்.  அதனால்  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தன்னைத்தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

    குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். 

    பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். என்றாலும் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்படும். அதனால் கொள்முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். விவசாயக் கூலி வேலை செய்வோரோடு அனுசரித்துச் செல்லவும். அரசு மானியங்கள் உதவிக்கு வரும்; பழைய கடன்களும் வசூலாகும். 

    கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

    மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

    அஸ்வினி: 
    இந்த குரு பெயர்ச்சியால் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.  திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

    பரணி:  
    இந்த குரு பெயர்ச்சியால் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.
      
    கார்த்திகை 1ம் பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் பிரச்சனைகள் மற்றும் விவகாரங்கள் தீர ஆலோசனை செய்து முடிவெடுப்பீர்கள். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். 

    பரிகாரம் : அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: “சுப்பிரமணிய புஜங்கம்” பாராயணம் செய்யவும்.
    மலர் பரிகாரம்: “செவ்வரளி மலரை” அம்மனுக்கு படைத்துவர துன்பங்கள் யாவும் நீங்கும். 
    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • Guru Peyarchi Palangal – Simmam

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    அதிகாரமும் தோரணையும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே "ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். ராஜகிரகமான சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.

    கிரகநிலை:
    இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பஞ்சம ஸ்தானத்தில் இருந்து உங்களது பாக்கிய – லாப ஸ்தானம் – ராசி – ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு லாப ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

    உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறியிருக்கும் குரு உங்கள் ராசியை ஒன்பாதம் பார்வையால் பார்த்து அருள் செய்கிறார். இதன் மூலம் பல விதமான நற்பலன்களை அடையப் போகிறீர்கள். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், 

    பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

    விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள். 

    அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.

    கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். 

    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

    மகம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

    பூரம்: 
    இந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து திருப்தி தரும்.  நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும். 

    உத்திரம் 1ம் பாதம்:
    இந்த குரு பெயர்ச்சியால் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

    பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.
    சொல்ல வேண்டிய மந்திரம்: த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
    மலர் பரிகாரம்: “செந்தாமரை மலரை” அமாளுக்கு சாத்திவர தீமைகள் அகலும். 
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542