Tag: Flower

  • Thirupathy 2 crores golden flower

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2  கோடி மதிப்புள்ள 108 தங்க தாமரை நன்கொடையாக வழங்கிய பக்தர்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த டாக்டர் ராஜீவ் ரெட்டி ரூ. 2  கோடி மதிப்புள்ள தங்க தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார். ஏழுமலையானுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அஷ்டதள பாத பத்ம ஆரதனை சேவைக்காக 108 தங்க தாமரை மலர்களை  லலிதா ஜூவல்லர்ஸில் பிரத்யேகமாக வேலைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டன.

    இந்த தங்க தாமரை மலர்களை நன்கொடையாளர் ராஜீவ் ரெட்டி   லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவர் கிரண் குமாருடன் இணைந்து  ஏழுமலையான்  கோயிலிலுக்கு  வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று வழிப்பாடு செய்தனர். பின்னர்  அர்ச்சகர்களால் தங்க தாமரை மலர்கள்  சுவாமியின் பாதத்தில் வைக்கப்பட்டு ஆசி பெற்ற பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாதர்  மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினர்.

  • Lotus flower in poojai

    பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல். வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். 

    ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ. 

    பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாபங்கள் அகலும். முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர். கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
     

  • Thiruchanoor flower poojai

    திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு  புஷ்ப யாகம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின், 4 டன் மலர்களால் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். 

    அதன்படி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்றுவந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று வியாழக்கிழமை முடிவுற்றதையடுத்து,  தாயாருக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. இதையொட்டி, காலை தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், யாகம் வளர்த்து தாயாருக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது.

     

    அதில், ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, தேன் பூக்கள், தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட மலர்களாலும், மருவு, மரிக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி உள்ளட்ட பத்ரங்களாலும் (இலைகள்) தாயாருக்கு அர்ச்சகர்கள் யாகத்தை நடத்தினர். இதற்காக 4 டன் மலர்கள் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டது.  இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • Flower poojai slogam

    எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ… அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.

    அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!    

    யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
    பிரஜாவான் பசுமான் பவதி   சந்த்ரமாவா
    அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி