Tag: Feb month

  • Meenam Feb month predictions

    மீன ராசியினரே, நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த மாதம்   உடல் சோர்வு உண்டாகலாம்.  வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமை யாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரி யங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார் கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

    கலைத்துறையினர் சூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் போது சக கலைஞர்களுடன் மோதல் போக்கு ஏற்பட உள்ளது. அத்தருணத்தில் கோபத்தை கட்டுப் படுத்தி கொள்ளுங்கள் மற்றபடி  வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்காது.

    அரசியல் துறையினருக்கு கட்சியில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் மேலிடத்தின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தொண்டர்களை அனுசரித்து நடந்து  கொள்ளுங்கள்.
    பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.
    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

    பூரட்டாதி 4-ம் பாதம்:
    இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

    உத்திரட்டாதி:
    இந்த மாதம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். இதுவரை இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

    ரேவதி:
    இந்த மாதம் பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். 

    பரிகாரம்: சித்தர் கோவில்களுக்குச் சென்று வர மனக்குறைகள் அகலும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
    அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Kumbham Feb month predictions

    கும்ப ராசியினரே, இந்த மாதம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

    தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங் கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவு கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.
    அரசியல் துறையினர் கட்சிக்காக இவ்வளவு நாட்கள்  கஷ்டப்பட்டு வந்தோம் என்று எதை நினைத்து நீங்கள் வருத்தப்பட்டீர்களோ அதற்கான தீர்வு இப்போது  கிடைக்கும் இருப்பினும்  சக தொண்டர்களிடம் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

    கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் எந்த தடங்கலும் தாமதமும் இருக்காது. சக கலைஞர்கள் தங்கள் சொந்த பிரச்சனையில் தலையிடுவது கோபத்தை ஏற்படுத்தும். பணவரவில்  தாமதம் இருந்தாலும் கண்டிப்பாக கிடைத்து விடும்.

    பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். 

    மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    அவிட்டம் 3, 4ம் பாதங்கள்:
    இந்த மாதம் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். 

    சதயம்:
    இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

    பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:
    இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். 

    பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று வருவது மனதில் தெளிவை உண்டாக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
    அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Maharam Feb month predictions

    மகர ராசியினரே, இந்த மாதம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

    குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

    தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது. வருமானம் போதுமென்ற அளவிற்கு இருக்கும். சிலர் பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம்  வாங்குவீர்கள்.

    அரசியல் துறையினருக்கு  கட்சி பணிகளின் காரணமாக கடின உழைப்பு ஏற்படக்கூடும். இரவு பகல் பாராது இவ்வாரம் உழைக்க வேண்டியிருக்கும் கட்சிக்காக நீங்கள் எதுவும் செலவு  செய்திருந்தால் அதை கட்சி நிர்வாகம் தங்களிடம் கொடுத்து விடும்.

    பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். 

    மாணவர்களுக்கு  கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.  பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

    உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்:
    இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கவலை வேண்டாம். மனதிற்கு பிடித்த வரன் அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ள்து. தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். 

    திருவோணம்:    
    இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும். சோதனைகள் வெற்றியாக மாறும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டு. 

    அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:
    இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும். மனதில் கொஞ்சம் கலக்கமும், ஏமாற்றமும் ஏற்படும். ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். கடன் அடைப்பீர்கள். புது வேலை அமையும். அதிக வட்டிக்கடனை அடைப்பீர்கள்.

    பரிகாரம்: தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியுடன் பல வெற்றிகளை பார்க்க முடியும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Thulam Feb month predictions

    துலா ராசியினரே  இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங் களில் எச்சரிக்கை தேவை.
    குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

    தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். பங்குதாரர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். தேவையான வங்கிக் கடன்கள் கிடைக்கும்.  

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். 
    அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். 

    கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

    பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

    மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். 

    சித்திரை 3, 4ம் பாதங்கள்:

    இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். பணியாளர்கள் வழியில் எந்த வித பிரச்சனைகளும் வராது. 

    ஸ்வாதி:
    இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். 

    விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:

    இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்து வர வருமானம் பெருகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5
    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
     

  • Feb month predictions – Midhunam

    மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

    இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில்  கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

    பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

    அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். 

    பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542