Tag: dosham

  • Navagraha dosham vilaga mandiram

    வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல், எல்லோரும் சுகமாகத்தான் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் நல்லபடி அமைந்திருந்தாலும்கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்திக்கவே நேரிடுகிறது. கிரக நிலைகள் நல்லபடி இருப்பவர்களுக்கே இப்படி என்றால், கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றிருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல நேரங்களில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கவே நேரிடும்.

    ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.

    அந்த வழிகளுள் ஒன்றுதான் தெய்வ மந்திரங்களைப் பாராயணம் செய்வதும். தெய்வ மந்திரங்கள் என்றால் சமஸ்கிருதத்தில் இருக்கும்; அதன் உச்சரிப்பு பிசகாமல் எப்படி  பாராயணம் செய்வது என்ற கவலையே யாருக்கும் வேண்டாம். தமிழிலும் பல அற்புதமான துதிப் பாடல்களும், பதிகங்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக பன்னிரு திருமுறைகள், அபிராமி அந்தாதி, திவ்விய பிரபந்தம் போன்ற வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லலாம்.
     

  • Sani Ragu Kedhu dosham Hanuman Mandiram

    ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷத்தால் பல பேர், பல பிரச்சனைகளில், இன்றளவும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  முடிந்தவரை நேர்மையாக இருந்துவிட்டால், சனிபகவானால் உண்டாகக்கூடிய கஷ்டங்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இதோடு சேர்த்து கட்டாயம் இறைவழிபாடும் நமக்கு அவசியம் தேவை.

     ராகு கேது பிரச்சினையாக இருந்தாலும், சனி பகவானால் பிரச்சனை இருந்தாலும், அவர்களிடமிருந்து நாம் தப்பிப் பிழைக்க, அனுமனது பாதங்களைச் சரணடைவது தான் ஒரே வழி. உங்களுக்கு வாழ்க்கையில் எப்பேர் பட்ட கஷ்டம் இருந்தாலும் பின் சொல்லக்கூடிய அனுமனது மூல மந்திரத்தை தினந்தோறும் ஐந்து முறை உச்சரித்தால் கூட, அபரிமிதமான பலனை நம்மால் பெற முடியும். 
    ஹனுமனின் மூல மந்திரம் இதோ!

    " அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்  

    குமாரம் ப்ரும்ஹ சாரிணம் 

    துஷ்ட க்ரஹ வினாசயா 

    ஹனுமந்த முபாஸ் மஹே! "

    தீராத துயரங்கள் சீக்கிரமே தீரவேண்டும், என்று காலையில் கண்விழித்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்து அதன் பின்பு, இந்த நான்கு வரி மந்திரத்தை உச்சரித்து, ஹனுமனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள் எந்த கிரக தோஷமும் எதுவும் செய்யாது.