டிசம்பர் 20 – ஆரூத்ரா தரிசனம்
பிலவ வருடம் – மார்கழி 5
ஆரூத்ரா தரிசனம்
20-டிச-2021 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை ம 12.22
நட்சத்திரம் : திருவாதிரை இ 7.50
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: Dharisanam
-
December 20 Arudhra dharisanam
-
Arudhra dharisanam varalaru
புராண காலத்தில் பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, திடீரென்று இறைவனின் பாரம் அதிகமாயிற்று. அதனை உணர்ந்த சேஷன் பகவானிடம், நாராயணா !! திடீரென்று தங்கள் உடல்பாரம் அதிகமாகக் காரணம் என்ன என்று வினவினார். அதற்கு இறைவன், "ஆதிசேஷா !! நான் ஈசனின் திருதாண்டவ அழகை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பூரிப்பின் காரணமாகத் தான் எனது உடல்பாரம் அதிகமாயிற்று என்று கூறி அந்த அழகை அவரிடம் வர்ணித்தார் திருமால்.
இதனைக் கேட்டு மகிழ்ந்த ஆதிசேஷன், கேட்கும் போதே இவ்வளவு பேரானந்தமாக இருக்கும் இந்த அழகை நேரில் காண விரும்பி அதற்கான மார்க்கத்தை உரைக்கும்படி திருமாலிடம் வேண்டினார். அதற்கு அவர் ஆதிசேஷனை பூலோகத்திற்கு சென்று தில்லையில் தவம் புரிந்தால் அவனுக்கும் அது சித்தியாகும் என்றார். அதன்படி, ஆதிசேஷன் பூலோகத்தில் ஒரு ரிஷி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, வளர்ந்து உரிய பருவத்தில் தில்லையில் தவம் இயற்றத் தொடங்கினார். அவரோடு வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரும் இறைவனின் திருத்தாண்டவ தரிசனம் வேண்டி அவரோடு சேர்ந்து தவம் செய்தார்.
இருவருக்கும் அருள்புரிய எண்ணிய ஈசன் திருவாதிரை நன்னாளில் அவர்களுக்கு தரிசனம் அளித்து, தாண்டவம் ஆடி மகிழ்ந்து, அனைவரையும் மகிழச் செய்தார்.
சிவனின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள்…ஆருத்த்ரா தரிசனம் தொடர்பாக இன்னொரு கதையும் கூறப்படுகிறது :
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிட்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிட்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.
சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்றும் சொல்லப்படுகின்றது.
-
Saturday perumal dharisanam
ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.
கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார்.
“அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சனீஸ்வரன் கேட்டார்.அதற்கு நாரதர், “ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்
ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை. தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள். சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!” என்றார்.
அடுத்தநாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள்.
கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன்,
“சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28-வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.
அதனால்தான் ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன.
-
Arudhra Dharisanam
மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.
“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.
ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ…ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார். அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்… ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக.
சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.
அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.திருவாதிரைக் களி‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.
-
Palani murugan dharisanam
பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
04545- 242683 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெயர், முகவரி, ஆதார் எண்ணை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி முதலில் அழைக்கும் 200 அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்களை அனுமதிக்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வரவும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த முறையில் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு முந்தைய நாள் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவு முறை முற்றிலும் கிராமப் பகுதியில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பழனி முருகன் கோவிலில் வழங்கப்பட்டு வந்த அபிஷேக பஞ்சாமிர்தம் மற்றும் முறுக்கு, அதிரசம், லட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு மலைமீது பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
-
Garuda Dharisanam Palangal
ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாகத் திகழ்பவர் கருடன். கருடாழ்வாருக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன், பெரிய திருவடி, எனப் பலபெயர்கள் உண்டு.
ஒரு சமயம் கருடன் இந்திரனுடன் போரிட்டபோது, திருமால் உபேந்திரனாக இருந்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். திருமால் கருடனின் கர்வத்தை அடக்கி, தனக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருக்க வரமளித்தார்.
கருட தரிசனப்பலன்:
கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நன்மையைத் தரும். பலன்களும் கிடைக்கும். அவை,
ஞாயிறு – நோய் நீங்கும்.
திங்கள், செவ்வாய் – அழகு சேர்ந்து துன்பம் நீங்கும்.
புதன், வியாழன் – பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.
வெள்ளி, சனி -ஆயுள் நீண்டு செல்வம் பெருகும்.
அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும்போது, மேலே கருடன் பறப்பதைக் காணலாம். கருட தரிசனம் கிடைக்கும்போது கைகூப்பி வணங்காமல், மனதால் நினைத்து வணங்க வேண்டும்.
கருட மந்திரம் :
"குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம'
என்னும் கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும்.
-
Mahara jothi Dharisanam
சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். லட்சக்கண்க்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்துள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெற்றது. முன்னதாக பந்தளம் பகுதியில் இருந்து திருவாபரண பவனி, மாலை சரங்குத்தி வந்து சேர்ந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.
பின்னர் பக்தர்களுக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தந்தது.
இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வணங்கினர். மாலை 6.45 மணியளவில் மகர ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார்.
பக்தர்கள் சரண கோஷம் முழங்க மகரஜோதியை வழிபட்டனர். இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.
-
Atthi Varadhar Dharisanam
காஞ்சிபுரம் அத்தி வரதரை இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும். அத்திவரதரை 43 நாட்களில் இதுவரை 85 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் எழுந்தருளும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர். அத்தி வரதர் தரிசனம் தொடங்கி 42 நாட்கள் முடிந்துவிட்டன. இன்னும் 4 நாட்களே அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பதாலும், தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதாலும் அத்தி வரதரைக் காண முன்பை விட இரு மடங்கு பக்தர்கள் குவிகிறார்கள். இதுவரை 85 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அத்தி வரதர் வைபவம் 108 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி அத்தி வரதரை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவ்த்துள்ளார்.
-
Atthi Varadhar Dharisanam
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி வரதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கின்றார். 34 ஆம் நாளில் இன்று பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

சனிக்கிழமை இன்று விடுமுறை தினம் மற்றும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பொது தரிசனத்தில் 5 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்து அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். 33 நாட்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றதால் மதியம் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.